லாட்ஜில் பர்ஸ்ட் நைட்.. 7 முறை அபார்ஷன்.. துணைவியாக கயல்விழி.; சீமான் மீது விஜயலட்சுமியின் புகார் முழு விவரம்

லாட்ஜில் பர்ஸ்ட் நைட்.. 7 முறை அபார்ஷன்.. துணைவியாக கயல்விழி.; சீமான் மீது விஜயலட்சுமியின் புகார் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இயக்குனரும் அரசியல்வாதியுமான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல புகார்களை தெரிவித்த வண்ணம் உள்ளார். இவர்களின் மோதல் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது வெளியே வரும்.

இந்த நிலையில் தற்போது ஓரிரு தினங்களாக சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வீசி காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

அதன் முழு விவரம் இதோ…

தேதி 28 – 08 – 2023

*நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகார்*

விடுநர்

சா விஜயலட்சுமி த/பெ சண்முகசுந்தரம் பிள்ளை.

நம்பர் 354,கதவு எண் 41.

நான்காவது மாடி, RHCS பிரிவு, அன்னபூர்னேஸ்வரி நகர்,

ஸ்ரீ கந்த காவல், நாகர் பாடி,

பெங்களூர், கர்நாடகா மாநிலம்-50009

பெறுநர்

உயர்திரு காவல் ஆணையர் அவர்கள்! சென்னை பெருநகர காவல் ஆணையரகம்.

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.

நான் தற்போது என் சகோதரி உஷா தேவி அவர்களுடன் மேற்கண்ட விலாசத்தில் வசித்து கொண்டு வருகிறேன். 2007 ஆம் வருடம் வாழ்த்துக்கள் திரைப்படத்தில் சீமான் இயக்கத்தில் நான் நடித்தேன்.

இந்த திரைப்படத்தின் மூலம் எனக்கு சீமான் அறிமுகமானார். அப்பொழுது என் அக்கா உஷா தேவி அவர்கள் மகன் பிள்ளை (8வயது) அக்காவின் கணவர் ராஜ்பாபு தூக்கி கொண்டு சென்றார் அப்போது 2008ல் என் அக்கா தி.நகர் காவல் நிலையத்தில், என் அக்கா கணவர் மீது புகார் கொடுத்தோம் என் அக்காவின் கணவர் ராஜ்பாபு அரசியல் பிரபலத்தில் இருப்பதால் நான் சீமான் அவர்களிடம் உதவி கேட்டோம். ஆனாலும் சீமான் அவர்கள் சட்ட ரீதியாக எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

என்னுடைய அக்காவின் கணவர் என் குடும்பத்தில் எந்த ஒரு ஆண் துணையும் இல்லாததால் என் அக்காவின் கணவர் திடீர் திடீர் என்று எங்களை சண்டை போடுவதாலும் உடமைகளை தாக்கியதாலும் அக்காவை தாக்கியதாலும் நானும் என் வயதான தாயும் என் அக்காவும் நிலை குலைந்து இருந்தோம்.

இந்த நிலையில் சீமான் அவர்கள் தன்னுடைய நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் எங்களை வரவைத்து எனக்கு என்றும் யாரும் கிடையாது, எமக்கு திருமணமாகவில்லை எனக்கு எந்த ஒரு வரதட்சனை கொடுக்க வேண்டாம் திருமண செலவை நானே செய்து கொள்கிறேன் உங்களைப் போன்று ஈழத் தமிழர் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்ததே போதுமானது என்பது, எனது மன நிறைவாகும் என்று சீமான் என்னிடம் கூறினார். நான் என் தாய் விஜயா சண்முகசுந்தரம் பிள்ளை அவர்களுக்காகவும் என் உடன் பிறந்த சகோதரி உஷா தேவிக்காகவும் மட்டுமே என் வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்கிறேன் அவர்களுக்காகவே என் வாழ்க்கை என்று சீமானிடம் கூறினேன் என் அக்கா என் தாய் சம்மதித்தால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன்.

பிறகு சீமான் அவர்கள் என் தாய் என் அக்கா அவர்களிடம் நான் உங்களுக்கு மகனாய் இருப்பேன்.உங்கள், மகள் விஜயலட்சுமி அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று என் தாயாரிடம் கூறினார்.

என் தாய், எங்கள் உறவினர்களிடம் கலந்து பேசிவிட்டு கூறுகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் சம்பந்தமான போராட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டு மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. சீமான் அவர்கள் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஸ்டார் தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

அப்பொழுது என்னுடைய கைப்பேசி எண்ணுக்கு சீமான் அவர்கள் கைபேசியில் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு எனக்கு யாரும் இல்லை என்ற மனநிலை தோன்றுகிறது. எனக்கு யாரும் இல்லை என்ற சிந்தனை தோன்றுகிறது.

அதனால் எனக்கு மிகவும் மன அழுத்தமாக உள்ளது என்று கூறினார் எனக்கு வழக்கு சம்பந்தமாகவும் எமக்கு ஆதரவு சொல்லவும் யாரும் இல்லை என்று வருத்தப்பட்டார். எனக்கு மனைவியாக வேண்டிய நீங்கள் என் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறி என்னோடு இருந்தால் எனக்கு பக்கபலமாக இருக்கும் என்று கூறினார்.

என் தாயாரிடம்மும் இதையே கூறினார். பின்பு என் தாய் சம்மதத்தோடு சீமான் அவர்கள் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் சீமான் தங்கியிருந்த விடுவிக்கு சென்றேன். பின்பு அவரின் வழக்கு சம்பந்தமான பணிகளையும் செலவினங்களையும் நானே பார்த்தேன் என்னை சீமானும் அவரின் ஆட்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். அப்போது தாலி மற்றும் மலர் மாலைகளுடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பூஜை செய்தார்கள் பிறகு கோவிலுக்கு வெளியே நானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம்.

பிறகு அங்கிருந்து அவர்கள் மாங்கல்யம் கட்ட சொல்லும்போது சீமான் அவர்கள் நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் நான் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாச்சாரத்திற்கு கொள்கைக்கும் எதிரானது என்று மாங்கல்யம் கட்ட மறுத்து மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். அன்றில் இருந்து சீமான் அவர்களை நான் கணவராக ஏற்று நாங்கள் கணவன் மனைவியாக வாழ தொடங்கினோம்.

பின்பு நமது திருமணம் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் உலகம் போற்றும் வகையில் நாம் நடத்த வேண்டும் அது வரையில் இந்த திருமணத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.

அன்றைய தினத்தில் எனக்கும் சீமான் அவர்களுக்கு அந்த விடுதியில் சாந்திமுகூர்த்தம் நடந்தது. அந்த சாந்திமுகூர்த்தம் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடும் உறவினர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்றது.

பின்பு நான் சென்னையிலிருந்து மதுரைக்கு நான்கு முறை சென்று, சென்று வந்தேன் பின்பு கடைசியாக மதுரை இருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஒன்றாக வந்தோம். மேலும் என்னுடைய வேளச்சேரி வீட்டில் நானும் என் கணவர் சீமானும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்’ எனக்கு இருந்தது. என் தாய்க்கு பேரபிள்ளைகளை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சீமான் அவர்கள் தன்னுடைய அரசியலில் நான் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்றார். இந்த நிலையில் நான் ஏழு முறை கருவுற்றேன்.

என்னுடைய அனுமதி இல்லாமல் எம்மை சீமான் அவர்கள் நான் கருத்தரிக்கும் ஆறு ஏழு முறையும் எம்மை கட்டயபடுத்தியும் நிற்பந்தபடுத்தி கருச்சிதைவு மாத்திரைகள் எமக்கு கொடுத்து என்னுடைய அனுமதி இல்லாமல் எமக்கு கருச்சிதைவு செய்தார். இதனால் என்னுடைய உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது. நலிவுற்று போனது.

எங்கள் குடும்பம் இதனால் நிம்மதி இழந்தாது. நான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த நகைகளை பணங்களை, சுமார் 60,00,000/- லட்சம் பணமும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சிறுக,சிறுக என்னிடம் பெற்றுக் கொண்டார்.

ஒரு கட்டத்தில் நான் பணம் கொடுக்க மறுக்கவே மது அருந்திவிட்டு என்னை துன்புறுத்தி அடித்துவிட்டு பணத்தை புடிங்கி செல்வார். ஒரு நாள் நான் சீமான் அவர்களுக்கு மத்திய உணவை நான் சமைத்து வளசரவாக்கம் கட்சி அலுவலகத்தில் கொண்டு செல்வேன் அவர் சாப்பிட்ட பிறகு 45 மணி வரை அவரோடு இருந்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வது தினந்தோறும் பழக்கம் மேலும் சீமான் அவர்களின் Ford-காரில் என்னை வேளச்சேரி வீட்டில் இறக்கிவிட்டு செல்வார்கள், ஒரு நாள் நான் செல்லும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து ஒரு பெண் எம்மை கண்காணித்துள்ளார்.

அந்த பெண் ஒரு நாள் என்னுடைய கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு என் பெயர் தேன்மொழி எனக்கும் சீமானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் திரு.பாலுமகேந்திரா மற்றும் சுகாசினி அவர்களின் தலைமையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நாளுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் யார் சீமானை அலுவலகத்திற்கு வந்து செல்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார், நான் அந்த பெண்ணிடம் என் கணவர் என்று கூறினேன். அப்பொழுது அந்த பெண் என்னை ஏமாற்றியது போல் உங்களையும் ஏமாற்றி உள்ளார் என்று அந்த பெண் கூறினார்.

பிறகு சீமானின் இதை பற்றி கேட்ட பொழுது அவர் மழுப்பலாசு உண்மைக்கு மாறான தகவலை பேசினார் என்னிடம் சண்டையிட்டு அடித்தார். பிறகு இயக்குனர் சேரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் ஆமாம் என்று கூறினார். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு நானும் எனது குடும்பமும் உள்ளானோம். நான் சினிமா துறையில் என் தொழிலை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது இவர் எனக்கு வரும் சினிமா வாய்ப்பை தடுத்தார். இந்த நிலையில் சீமான் அவர்களின் அடி ஆட்களை வைத்து எமக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

நான் உடனே சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் மனு அளித்தேன். அந்த புகார் மனுவுக்கு RS, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குற்ற எண்:1007/2011 ws,417,420,354,376, 506(1) IPC & SCA of TNPWH Act, வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன். சீமான் அவர்கள் அப்பொழுது இருந்த அஇஅதிமுக கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தடா சந்திரசேகர் அவரை வைத்து நல்ல முறையில் ஊர் அறிய உலகம் அறிய வாழ வைப்பதாக கூறினார்கள்.

அதற்கு நான் கொடுத்த புகார் மனுவுக்கு காவல் நிலையத்தில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று சீமான் அவர்கள் தடா சந்திரசேகர் அவர்களை வைத்து என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார். மேலும் என்னிடம் கணவராக வாழ்ந்து கொண்டே கயல்விழி என்ற பெண்ணை திருமணம் செய்ய மறைமுகமாக வேலை செய்து கொண்டார்.

இந்த தகவல் கயல்விழிக்கும் சீமானுக்கும் திருமணமான பிறகுதான் எமக்கே தெரிந்தது. அன்றைக்கு இருந்த அதிமுக அரசை ஆதரித்து இருந்தாலும், கயல்விழி முன்னால் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் என்பதாலும் நான் கொடுத்த புகார் மனுவிற்கு அப்பொழுது காவல் துறையினர் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிமுக அரசும் அந்த கட்சியில் இருந்த நபர்களுக்கு சீமானும், சீமான் அடியாட்கலும் அச்சுறுத்தி பயமுறுத்தியதால் நான் என் உயிருக்கும் உடைமைக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசு மாறி திமுக அரசு வந்ததால் என் புகாருக்கும் எனக்கும் நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் சட்டரீதியாக முயற்சி செய்தபோது சீமான் அவர்களின் கட்சியை சார்ந்த மதுரை செல்வம் என்ற நபர் எம்மை தொடர்பு கொண்டு அக்கா நீங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மீது புகார் ஏதும் கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

உங்கள் மாமா சீமான் உங்களை மனைவியாகவும் கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக கூறியுள்ளார். இதனால் உங்களுக்கு மாத மாதம் 50,000/- ஆயிரம் பணம் அண்ணன் சீமான் அவர் அனுப்ப சொல்லி உள்ளார். அந்த பணம் இந்த ஆண்டு 2023 மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை 50,000 அனுப்பினார்கள்.

நான் என்னால் பெங்களூரில் தனியாக வாழ முடியாது.என்னை சென்னைக்கு வரவைத்து சீமானை என்னுடன் வாழ்க்கையை நடத்த சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ஆனால் சீமானின் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வமும் எம்மை குறித்து தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் வதந்தியையும் பரப்பினார்.

இது குறித்து அவரிடம் நான் கேட்டதற்கு என்னை whatsapp பில் தொடர்பு கொண்டு எமக்கு கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமில்லாமல் எம்மை குறித்து ஏதோ ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டினார்கள். எனவே ஐயா அவர்களே என்னை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து என்னுடன் கணவராக வாழ்ந்து என் வயிற்றில் இருந்த கருவை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து என்னுடைய பணம் நகைகளை பறித்து என்னை இழிவாக பேசி எம்மை தற்கொலைக்கு தூண்டி என் வாழ்கையை சீரழித்த சீமான் மீதும் சீமானின் தூண்டுதலின் பேரில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி என்னை மிரட்டிய மதுரை செல்வம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு என் உடல்நிலை சரியில்லாத என் சகோதரிக்கு பாதுகாப்பு அளித்து எமக்கு நீதியும் நியாயத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ச.விஜயலட்சுமி

28 August 2023

Actress Vijayalakshmi complaint letter towards NTK Seeman

பிக்பாஸில் 2 வீடு..; டபுள் கமல்.; இணையத்தை எகிற வைத்த புரோமோ!

பிக்பாஸில் 2 வீடு..; டபுள் கமல்.; இணையத்தை எகிற வைத்த புரோமோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்று பிக்பாஸ்.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்தது.

அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Two House in Bigg Boss show Kamal says in bigg boss season 7 promo video

‘இறுகப்பற்று’ முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்ரம் பிரபு

‘இறுகப்பற்று’ முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இறுகப்பற்று’.

இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்னதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Vikram prabhu’s Irugapatru first single release on august 31

சிவாஜி ராவ்வின் சில் மொமன்ட்ஸ்.; பழசை மறக்காத ரஜினி்; கண்டக்டராக பணிபுரிந்த பஸ் டிப்போவை பார்வையிட்டார்

சிவாஜி ராவ்வின் சில் மொமன்ட்ஸ்.; பழசை மறக்காத ரஜினி்; கண்டக்டராக பணிபுரிந்த பஸ் டிப்போவை பார்வையிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் அங்கு ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில் சென்னைக்கு வந்து ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடினார்.

மேலும் செய்தி டிவி சேனலுக்கும் பேட்டியளித்தார். அப்போது வயது குறைவாக இருந்தாலும் யோகி காலில் விழுவது என் வழக்கம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி பெங்களூருக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்கு ராகவேந்திரா ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த்

இதனிடையில் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைவதற்கு முன்பு கண்டக்டராக பணிபுரிந்த போது உள்ள பணிமனையை பார்வையிட்டார்.

அங்கு தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ரஜினியை பார்த்த பணிமனை ஊழியர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு நலம் விசாரித்தனர். அங்கு பழைய சிவாஜி ராவ் ஆகவே தன்னை அவர் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

(ரஜினி உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த்

Rajinikanth met Sivaji Rao working place at Bengaluru

பிரபஞ்சம் எனக்கு கொடுத்த பரிசு.; தலைவர் அப்பா ரஜினிக்கு நன்றி – வசந்த் ரவி

பிரபஞ்சம் எனக்கு கொடுத்த பரிசு.; தலைவர் அப்பா ரஜினிக்கு நன்றி – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் வசந்த் ரவி, ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வசந்த் ரவி

அதில், ‘ஜெயிலர்’ எனது சினிமா பயணத்தில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக மாறியுள்ளது. நான் இத்தனை வருடங்களாக இந்த துறையில் கற்ற முழு அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் உறுதி ஆகியவற்றிற்கு இந்தப் படம் அங்கீகாரம் கொடுத்து, என்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது!!.

ஆகஸ்ட் 11, 2017 அன்று, இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என ‘தரமணி’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆகஸ்ட் 10, 2023 அன்று, ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைத்தது என இவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகவே நான் பார்க்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. “எனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே இடைவிடாத ஊக்கம் மற்றும் ஆதரவை அளித்த ‘தலைவர்’ ரஜினிகாந்த் (அப்பா) சாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்” பதிவிட்டுள்ளார்.

வசந்த் ரவி

heartfelt Thanks to the Rajini appa says vasanth ravi tweets

LGM படத்தை அடுத்து தோனி தயாரிக்கும் புதிய பட அப்டேட்

LGM படத்தை அடுத்து தோனி தயாரிக்கும் புதிய பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து தமிழில் வெளியான படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)).

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த ‘எல்.ஜி.எம்’ படம் ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சாக்ஷி டோனி தன் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தனது இரண்டாவது படைப்பை தரமானதாக உருவாக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sakshi Dhoni is in the process of hearing the story for his next film

More Articles
Follows