தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு சவால் விடும் வகையில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் தமிழிலும் வெளியானது.
என்னதான் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தாலும், இந்தி படங்கள் தமிழகத்தில் ஓடாது என சிலர் நினைத்திருந்தனர்.
ஆனால் அவர்களின் நினைப்பை தூள் தூளாக்கி சிக்ஸர் அடித்து வருகிறார் இந்த தோனி.
தமிழகத்தில் மட்டும் 205 அரங்குகளில் தமிழ் பதிப்பையும் 27 அரங்குகளில் இந்தி பதிப்பையும் திரையிட்டனர்.
இந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
மேலும் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.
விரைவில் இப்படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என கூறப்படுகிறது.