தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனருமான சரத்குமார் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்த தகவல்கள் காட்டு தீயாய் பரவியது.
இதனால் ரசிகர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து சரத்குமாரின் மனைவி ராதிகா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது..
“சரத்குமார் அவர்களுக்கு மாரடைப்பு என்ற செய்தியில் உண்மையில்லை.
சரத் நலமாக இருக்கிறார். Food Poison (உணவு ஒவ்வாமை) மற்றும் தசை பிடிப்பால் சின்ன உபாதை ஏற்பட்டுள்ளது. அதுமட்டும்தான்.” என்றார்.
தற்போது நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.