இணையத்தில் வைரலாகும் நீது சந்திராவின் டாப்-லெஸ் வீடியோ

இணையத்தில் வைரலாகும் நீது சந்திராவின் டாப்-லெஸ் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Neetu Chandras hot video goes viralஅழகுடன் கூடிய திறமை, கவர்ச்சி, ஆக்சன் என எந்தவிதமான ரோல்கள் என்றாலும் அசால்ட்டாக செய்யக் கூடியவர் நடிகை நீது சந்திரா.

யாவரும் நலம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர், தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் கவர்ச்சி உடையில் முதுகை காட்டியப்படியே பின்னாடியே வாங்க என்று அழைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Neetu Chandras hot video goes viral

ஓபிஎஸ் பாணியில் ஜெயலலிதா சமாதியில் சிவா தியானம்

ஓபிஎஸ் பாணியில் ஜெயலலிதா சமாதியில் சிவா தியானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilpadam 2point0 news updatesசிஎஸ். அமுதன் இயக்கிய ‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு நாளை (டிசம்பர் 11) சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இன்று டிசம்பர் 10 இப்படத்தின் நாயகன் சிவா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிவா பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ்படம் 2.O’ படக்குழு, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதில் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது.

அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்த டிசைன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.

‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamilpadam 2point0 news updates

2.0 ரிலீஸ் தாமதத்திற்கு காரணமான நிறுவனம் மீது வழக்கு பதிவு.?

2.0 ரிலீஸ் தாமதத்திற்கு காரணமான நிறுவனம் மீது வழக்கு பதிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 Release date postponed updatesஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘2.0’.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
2018 ஜனவரியில் வெளியாகவிருந்த இப்படத்தை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸின் தாமதத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து படக்குழுவினர் கூறியிருப்பதாவது…

அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் ‘2.0’ படத்தின் பிரதான காட்சிகள் கிராபிக்ஸை கொடுத்திருந்தோம்.

இதற்கான 90% பணமும் அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை.

மேலும், அவர்கள் அளித்த பணிகளைப் பார்த்தபோது சுமார் 50% பணிகளைத்தான் முடித்திருந்தார்கள்.
இதனால் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தற்போது அவர்களுக்கு அளித்த காட்சிகளை, 100 ஷாட்களாகப் பிரித்து சுமார் 10 நிறுவனங்களுக்கு அளித்து மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதனால் மட்டுமே தாமதம். இரவு-பகல் பாராது அனைவருமே ஏப்ரல் வெளியீட்டுக்கு உழைத்து வரும் சூழல் தற்போது ஏற்பட்டுவிட்டது.

தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து, அமெரிக்க நிறுவனம் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டதாகவே கருதுகிறோம். பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகள் செய்து, ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு நிறுவனம் இப்படி செய்யும் என நினைக்கவில்லை.

இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

2point0 Release date postponed updates

வியாழன் சென்டிமெண்ட்படி விசுவாசம் பிரீ-புரொடக்சன் பூஜையுடன் தொடக்கம்

வியாழன் சென்டிமெண்ட்படி விசுவாசம் பிரீ-புரொடக்சன் பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siva started Viswasam movie pre production work with Poojaஸ்ரீரடி பாபாவின் தீவிர பக்தராக மாறிவிட்டார் அஜித். எனவே அவருக்கு உகந்த வியாழக்கிழமை படி எந்தவொரு நல்ல காரியம் என்றாலும் அதை செய்து வருகிறார்.

மேலும் வி எழுத்திலும் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதால் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களில் நடித்தார் அஜித்.

தற்போது அதே சென்டிமெண்ட்ப்படி விசுவாசம் என்று தன் அடுத்த படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட சிவா, தற்போது படப்பிடிப்புக்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கி விட்டார்.

அதன்காரணமாக, கடந்த வியாழக்கிழமை அன்று டெக்னீசியன்களை வைத்து சிறிய அளவில் ஆபீஸ் பூஜை போட்டு வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

இந்த துவக்க விழாவிலும் வழக்கம்போல் அஜித் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.

Siva started Viswasam movie pre production work with Pooja

விஷால் புகார் எதிரொலி; ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் மாற்றம்

விஷால் புகார் எதிரொலி; ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Nagar Election Official Replaced After Row Over Vishals Disqualificationஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து இவர் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அவர்களை சந்தித்து பேசினார்.

இது பல்வேறு சர்ச்சைகளை தமிழக அரசியலில் கிளப்பியது.

இதனையடுத்து தேர்தல் அலுவலர் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனால் அவர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக புதிதாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை வரவேற்றுள்ள விஷால் கூறியுள்ளதாவது…

ஆர்கே நகர் இடைதேர்தலில் எனது மனு பரிசீலனையின் போது எழுந்த சர்ச்சைகளை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருதுகிறேன். நான் தேர்தலில் நிற்கிறேனோ இல்லையோ, இதன் மூலம் இனியாவது ஆர்கே நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கையில் நானும், ஆர்கே நகர் மக்களும் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

RK Nagar Election Official Replaced After Row Over Vishals Disqualification

2018ல் தன் காதலரை மணக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன்.?

2018ல் தன் காதலரை மணக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shrutihaasan will marry his London based Boy friend Michael Corsaleகோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று கலக்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் அண்மையில் சுந்தர் சி.யின் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தில் இருந்து விலகினார்.

தற்போது தன் தந்தை கமல்ஹாசன் இயக்கி தயாரிக்கும் நடிக்கும் சபாஷ் நாயுடு படம் மட்டுமே இவரது கைவசம் உள்ளது.

இந்நிலையில், தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சோல் என்பவருடன் சென்னையில் நடந்த ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது தனது தந்தை கமலுக்கு தன் காதலரை அறிமுகம் செய்து வைத்துள்ளாராம்.

இதற்கு முன்பே தன் அம்மா சரிகாவுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாராம்.

தற்போது ஸ்ருதிஹாசனுக்கு 31 வயது ஆகிறது.

எனவே அடுத்த வருடம் இவரது திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது.

Shrutihaasan will marry his London based Boy friend Michael Corsale

More Articles
Follows