மீண்டும் மகிழ்விக்க ஆர்கே. உடன் இணைகிறார் வடிவேலு

மீண்டும் மகிழ்விக்க ஆர்கே. உடன் இணைகிறார் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK and Vadiveluஷாஜி கைலாஷ் இயக்கத்தில், பிரபாகர் வசனம் எழுத, ஆர்கே, நீது சந்திரா, இனியா, கோமல் ஷர்மா, சுஜா வாருணி, ஆர் கே செல்வமணி, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

கிட்டத்தட்ட இருநூறு திரையரங்குகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிறது வைகை எக்ஸ்பிரஸ்.

அப்படம் வெளியாகும் முன்னமே தனது தயாரிப்பில் அடுத்த படத்தை தொடங்குகிறார் ஆர்கே.

மக்கள் பாசறை வழங்கும் அடுத்த படத்தை ஆர் கே நடிக்க ‘தண்ணில கண்டம்’ படத்தின் இயக்குனர் எஸ் என் சக்திவேல் இயக்குகிறார்.

எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய படங்களில் ஆர் கே-வடிவேலு காம்பினேஷன் கலக்கியெடுத்தது.

அதிலும் வடிவேலு ஏற்ற வண்டு முருகன் கேரக்டர் படுபிரபலம். அதனை யாரும் எளிதில் மறக்க முடியாது.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் “நீயும் நானும் நடுவுல பேயும்” படத்துக்காக இணைகிறது.

வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி எடுக்கவிருக்கிறாராம்.

கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, சென்னை, கேரளா, மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

சாந்தனுவை ரகசியமாக கண்காணித்த பார்த்திபன்

சாந்தனுவை ரகசியமாக கண்காணித்த பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanu Parvathi Nairஇயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது.

பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், தனுஷ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

“பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, ‘நான் கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன்.

நாளை முதல் படப்பிடிப்பு’ என்று கூறினார்’. ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தனமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார்.

அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சாந்தனு.

Parthiban Secretly observed Shanthanu

kin movie

ஜிவி. பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ் இணையும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’

ஜிவி. பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ் இணையும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and ArunRaja Kamaraj‘நெருப்புடா’, ‘வர்றலாம் பைரவா வா…’ ஆகிய பரபரப்பான பாடலுக்கு சொந்தக்காரர் அருண்ராஜா ராஜா.

இவரே பாடல்களை எழுதி பாடுவதால் இவரது காட்டில் அடை மழைதான்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இவர் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை எழுதியுள்ளார்.

இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இதுபோல் பாடல் வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

GV Prakash teams up with ArunRaja Kamaraj to support Jallikattu

சூர்யா இல்லாமல் மீண்டும் இணையும் ‘24’ படக் கூட்டணி

சூர்யா இல்லாமல் மீண்டும் இணையும் ‘24’ படக் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman and Vikram Kumar may join for Akhil new telugu Projectதெலுங்கில் மனம், தமிழில் யாவரும் நலம் மற்றும் 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

சூர்யா படத்தை தொடர்ந்து இவர் அடுத்த இயக்கவுள்ள படம் பற்றிய தகவல்கள் வந்துள்ளது.

இதில் அகில் அகிநேனி ஹீரேவாக நடிக்கிறாராம். இவர் நாகார்ஜீனா-அமலா தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படப்பூஜை ஜனவரி 14ஆம் நடைபெறவுள்ளது.

இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் சார்பாக நாகர்ஜுனா தயாரிக்கவிருக்கிறாராம்.

AR Rahman and Vikram Kumar may join for Akhil new Project

‘பைரவா’ ப்ராப்ளம் ஓவர்… ‘தளபதி’க்கு வந்தது ‘தல’ப்பாகையோடு போச்சு

‘பைரவா’ ப்ராப்ளம் ஓவர்… ‘தளபதி’க்கு வந்தது ‘தல’ப்பாகையோடு போச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Keerthy Sureshவருகிற ஜனவரி 12ஆம் உலகமெங்கும் விஜய் நடித்துள்ள பைரவா படம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் இப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

காரணம் அங்கு நடைபெற உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் ஸ்டிரைக் என்பதை முன்பே தெரிவித்திருநதோம்.

ஆனால் தற்போது அப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதால், பைரவா ரிலீஸ் எந்தவித ப்ராப்ளமும் இருக்காது என்பது தெரியவந்துள்ளது.

இதனால் தளபதியின் தலைக்கு வந்த பிரச்சினை தலைப்பாகையோடு போச்சு என் ஆனந்த மழையில் உள்ளனர் கேரள விஜய் ரசிகர்கள்.

ஆனாலும் பேச்சுவார்த்தை நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்-58 படத்தை இயக்கும் ‘புறம்போக்கு’ டைரக்டர்.?

அஜித்-58 படத்தை இயக்கும் ‘புறம்போக்கு’ டைரக்டர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithசிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தை முடித்துவிட்டு, யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் அஜித்? என்ற கேள்வி பலநாட்களாக கோலிவுட்டை வலம் வருகிறது.

விஷ்ணுவர்தன் அல்லது ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என பலரும் கூறி வந்தனர்.

இதனிடையில், பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானது.

“ஆனால் இது முற்றிலும் வதந்தி. ஒரு படத்தை நிறைவு செய்த பின்னரே, தன் அடுத்த படத்தை அஜித் முடிவு செய்வார்” என அஜித் தரப்பில் கூறப்படுள்ளது.

More Articles
Follows