விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

விஜய் ஆண்டனி ரியல் லைப் ஹீரோ..; ‘கோடியில் ஒருவன்’ நாயகி ஆத்மிகா டபுள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரித்துள்ள படம் ‘கோடியில் ஒருவன்’.

ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் கவனித்துள்ளார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

விஜய் ஆண்டனி…

”கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார்.

எதிர்காலத்திலும் அவருடன் பணிபுரிவேன்.

ஆத்மிகா திறமையான நடிகை. அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.

நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது” என்றார்.

ஆனந்த் கிருஷ்ணன்…

‘மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார் விஜய் ஆண்டனி.

கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டராக நடித்துள்ளார்.

இந்த அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையை மாற்றும் கேரக்டரில் நடித்துள்ளார்.” என்றார்.

ஆத்மிகா…

”கொரோன காலத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க வந்தார்.

அவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

தனஞ்செயன் கூறுகையில்…

”கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.

ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்”

இவ்வாறு கலைஞர்கள் (படக்குழுவினர்) பேசினர்.

Actress Aathmika praises vijay antony

‘ஜகா’ வாங்காமல் ஹீரோவாக கமிட்டானார் ‘ஆடுகளம்’ முருகதாஸ்

‘ஜகா’ வாங்காமல் ஹீரோவாக கமிட்டானார் ‘ஆடுகளம்’ முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர்களை ஒரு கட்டத்தில் சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்ப்பது கோலிவுட் இயக்குனர்களின் பழக்கம்.

இந்த கட்டத்திற்குள் பெரும்பாலும் எல்லாம் காமெடியன்களும் வந்து விடுவார்கள்.

ஒரு சில காமெடியன்கள் ஜகா வாங்கி விடுவார்கள்.

தற்போது ஆடுகளம் முருகதாசும் ஹீரோவாகிவிட்டார்.

‘ஆடுகளம்’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்து பிரபலமானவர் முருகதாஸ். அதன்பிறகு இவரை ஆடுகளம் முருகதாஸ் என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இவரின் புதிய பட தகவல்கள் இதோ..

ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘ஜகா’.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்.

ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை பன்னாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ் தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்…

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது…

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி
அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது
ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி

காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்.
.
மேலும் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து பின்னப்பட்ட முருகதாஸ் கதாபாத்திரம் புதுமையாக இருக்கும் என்றார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் தொடங்கி கொடைக்கானலில் மிகுந்த பனிப்பொழிவுக்கு நடுவே அண்மையில் நடந்து முடிந்தது.

விரைவில் அடுத்த கட்ட பணிகள் தொடங்குகிறது.

தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்.

இசை சாய் பாஸ்கர்
படத்தொகுப்பு ராம் செழியன்
பாடல் சதிஷ்
தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம்
மக்கள் தொடர்பு A. ஜான்

Comedy actor Aadukalam Murugadoss turns hero

மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல்..: வீல் சேரில் வந்து பிரசாரம் செய்வேன்.. – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மீது தாக்குதல்..: வீல் சேரில் வந்து பிரசாரம் செய்வேன்.. – மம்தா பானர்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் & புதுச்சேரியை போல மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

வருகிற மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதகாரி போட்டியிடுகிறார்.

அதன்படி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு , மாலையில் ரியாபாரா என்ற பகுதியில் பிரசாரம் செய்ய வந்துள்ளார் மம்தா.

அதற்கு முன்பு அங்குள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வந்த மம்தா தன்னை சிலர் (4-5 பேர்) தாக்கியதாக கூறினார்.

இதில் காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாவலர்கள் தூக்கி கொண்டு காரில் ஏற்றினர்.

கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மம்தா மீது ஏற்பட்ட தாக்குதல் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை கண்டித்து, திரிணமுல் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தே மம்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் … “என் காரின் அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன்.

அதில், கை, கால் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஓரிரு நாள்களில் மீண்டும் பணிக்கு திரும்புவேன்.

என் காயத்தால் பிரசாரம் பாதிப்படைய கூடாது. சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன்.

அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது”.

இவ்வாறு வீடியோவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

West Bengal CM Mamata Banerjee ‘attacked’ in Nandigram

சுசீந்திரன் இயக்கும் படத்தில் 3வது முறையாக இணையும் ஆதி & நிக்கி

சுசீந்திரன் இயக்கும் படத்தில் 3வது முறையாக இணையும் ஆதி & நிக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதி மற்றும் நிக்கி கல்ரானி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘சிவுடு’

யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி & ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . (தெலுங்கு திரைப்படம் ).

இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார்.

இசை – ஜெய்
ஒளிப்பதிவு – R வேல்ராஜ்
எடிட்டர் – மு .காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் – சேகர் B
நடனம் – ஷோபி
சண்டை பயிற்சி – தினேஷ் காசி
பாடல்கள் – சந்திரபோஸ்
இணை இயக்கம் – திருப்பதி ராஜா, T இளங்கோ

Aaadhi and Nikki galrani joins for 3rd time

எந்த கட்சிக்கு போறதுன்னே தெரியாம இருந்தேன்..; பாஜக-வில் எல்லாமே கிடைக்கும்.. – காமெடி நடிகர் செந்தில்

எந்த கட்சிக்கு போறதுன்னே தெரியாம இருந்தேன்..; பாஜக-வில் எல்லாமே கிடைக்கும்.. – காமெடி நடிகர் செந்தில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அதிமுக-வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் செந்தில்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019-ல் செந்தில் தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டவர் இவர்

அமமுக கட்சி பணிகளில் ஈடுபாடு இல்லாமல் செந்தில் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் அந்த கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

இந்த நிலையில், நடிகர் செந்தில் இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், பாஜகவில் இனைந்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

“ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன்.

அதன்பின்னர் எந்த கட்சிக்கு போவது என தெரியாமல் இருந்தேன்.

நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். பாஜக ஒரு நல்ல கட்சி.

எல்லோருக்கும் என்ன வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் .

இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்.

நாட்டு மக்களுக்கு பாஜக நல்லது செய்யும். ஊழலற்ற ஆட்சியாக பாஜக உள்ளது”

இவ்வாறு செந்தில் பேசினார்.

Comedy actor Senthil joins BJP

JUST IN மறக்காம ஓட்டு போட ‘டாக்டர்’ அட்வைஸ்.; ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

JUST IN மறக்காம ஓட்டு போட ‘டாக்டர்’ அட்வைஸ்.; ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’. இதில் வருண் என்ற பெயரில் நடிக்கிறார்.

இப்படம் மூலமாக பிரியங்கா மோகன் என்பவர் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இந்த மாதம் மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

தற்போது தமிழகம் புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது.

ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே மறு ரிலீஸ் தேதி அறிவிக்காமல் படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்தனர்.

இப்போது தேர்தல் முடிந்த பிறகு ரம்ஜானை முன்னிட்டு படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இப்போதும் சரியான தேதியை அறிவிக்கவில்லை.

ரம்ஜான் மே 14 வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே அப்போது டாக்டரை எதிர்ப்பார்க்கலாம்.

இது பற்றிய அறிவிப்பில்… “மறக்காம ஓட்டு போடுங்க.. ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது” என அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan’s Doctor release date announced

More Articles
Follows