*கூத்தன்* படத்திற்காக கை கோர்த்த பிரபு-விஜய்சேதுபதி

*கூத்தன்* படத்திற்காக கை கோர்த்த பிரபு-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay Sethupathy launches Koothan movie single trackதயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கூத்தன்.

ஏ.எல்.வெங்கி இயக்கியுள்ள இப்படம் சினிமா துறையில் உள்ள ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரபு ஓரிரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

இந்நிலையில் கூத்தன் பட அறிமுகப்பாடலை விஜய்சேதுபதி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

“கூத்தனம்மா கூத்தன், கூத்தனம்மா கூத்தன்” என்று தொடங்கும் இந்த பாடலை பாலாஜி இசைக்கு வேல்முருகன் பாடியுள்ளார்.

Actor Vijay Sethupathy launches Koothan movie single track

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா.? ஸ்ரீரெட்டியை கண்டிக்கும் பாரதிராஜா

ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா.? ஸ்ரீரெட்டியை கண்டிக்கும் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bharathiraja slams Actress Sri Reddy on her allegationsபாலியல் ரீதியாக திரையுலகினர் பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என அண்மையில் தெரிவித்தார்.

இதனிடையில் திரையுலகில் பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

இவரது அண்மை பேட்டியில்…

‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்துள்ளது.

அப்படி இருக்கும்போது அதனை வைத்து அவர் விளம்பரம் தேடி வருகிறார். இதற்காக ஒட்டு மொத்த சினிமா துறையை அவர் குறை சொல்லக்கூடாது’.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Bharathiraja slams Actress Sri Reddy on her allegations

சென்சார் பிரச்சினைக்கு பயந்து குறும்படம் எடுத்த வெங்கட்பிரபு

சென்சார் பிரச்சினைக்கு பயந்து குறும்படம் எடுத்த வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabhu turns a short filmmaker with Masha Allah Ganeshaஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது.

அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் (வெப் சீரிஸ) மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ள குறும்படமான *மாஷா அல்லா… கணேசா* என்ற குறும்படமும் இணைந்துள்ளது.

படம் பற்றிய ஒரு பார்வை..

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த குறும்படம் மும்பையில் நடந்த இந்து-முஸ்லீம் கலவரங்களை பற்றி, முக்கியமான ஒரு திருப்பத்துடன் பேசுகிறது.

இந்துக்களுடன் பல ஆண்டுகளாக அமைதியாக சேர்ந்து வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெண் மற்றும் அவரது குழந்தைகள் திடீரென அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடப்பட்ட கலவரங்களில் சிக்குகிறார்கள்.

வன்முறையில் இருந்து தப்பிக்க, தங்களுக்கே தெரியாமல் அவர்கள் ஒரு இந்து கோவிலின் கருவறைக்குள் அடைக்கலமாகிறார்கள். மத மற்றும் இனவாத ஒற்றுமை பற்றிய வலுவான ஒரு செய்தியை இந்த குறும்படம் வெளிப்படுத்துகிறது.

இப்படம் குறித்து வெங்கட்பிரபு பேசியதாவது…

பொதுவாக குறும்படங்களை இயக்கிவிட்டு வெள்ளித்திரை படங்களை இயக்குவார்கள்.

நான் சினிமா படங்களை இயக்கிவிட்டு இப்போது குறும்பட இயக்கியுள்ளேன்.

இந்த படமாக இருந்தால் நிச்சயம் சென்சாரில் அனுமதி கிடைத்திருக்காது” என பேசினார்.

Venkat Prabhu turns a short filmmaker with Masha Allah Ganesha

ரஜினி-அஜித்தை அடுத்து மம்முட்டியுடன் இணையும் பிரபல நடிகர்

ரஜினி-அஜித்தை அடுத்து மம்முட்டியுடன் இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk sureshமலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி.

இவர் அவ்வப்பது நேரடி தமிழ் படங்களில் நடித்து, சொந்த குரலில் டப்பிங் செய்தும் வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் அவர்கள் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார்.

RK Suresh joins with Mammootty with Pulimurugan director

நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன்.- ஸ்ரீரெட்டி

நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வேன்.- ஸ்ரீரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri reddyதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையை பகிர்ந்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் தனக்கு வாய்ப்பு தரவில்லை என அதிரடியான பாலியல் புகார்களை தினம் தினம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி.

இதனிடையில் வாராகி என்பவர் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி,

“மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த திரையுலகமே நின்றது.

ஆனால் நான் தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி இருக்கிறேன்.

என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை. தொடர்ந்து என்னை ஒரு விலைமாது போலவே சித்தரிக்கின்றனர்.

இதனால் தற்கொலை எண்ணமே மேலிடுகிறது. எனக்கான நீதி கிடைக்காத பட்சத்தில் என்னை நானே அழித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

பரபரப்பை ஏற்படுத்திய *பசுமை வழிச்சாலை* பெயரில் புதிய படம்

பரபரப்பை ஏற்படுத்திய *பசுமை வழிச்சாலை* பெயரில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pasumai Vazhi Salai Movie news updatesஉண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அவ்வப்போது திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் அரசியல் சார்ந்த படங்கள் என்றால் நம் இயக்குனர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.

அந்த வரிசையில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்திய பசுமை வழிச்சாலை (சேலம் சென்னை) என்ற பெயரில் ஒரு படம் உருவாகுகிறது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கும் 8 வழி பசுமைவழிச் சாலையை மையமாக வைத்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சத்வா புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் நிருபமா தயாரிக்கிறார் சந்தோஷ் இயக்குகிறார்.

இது 100 சதவிகிதம் உண்மையான கதை. சம்பந்தபட்ட மக்களின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்களுடன் தயாராகிறது.

வழக்கமான சினிமாவில் இருந்து மாறுபட்ட சினிமாவாக இருக்கும் என்கிறார் இயக்குனர் சந்தோஷ்.

Pasumai Vazhi Salai Movie news updates

More Articles
Follows