தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சரத்குமார் இரு வேடங்களில் நடித்த நாட்டாமை படத்தில் மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்ற டயலாக்கை கவுண்டமணி பேசுவார்.
இப்போது அந்த வார்த்தையே டிஆர். குரலில் பாடலாகியுள்ளது.
இதன் விவரம் வருமாறு…
நீல்கிரிஸ் ட்ரீம் என்டேர்டைன்மெண்ட் “நீல்கிரிஸ் முருகன்” தயாரிக்கும் திரைப்படம் “கூத்தன்” இதில் புதுமுக நாயகனாக நடிக்கிறார் ராஜ்குமார்,பாலாஜி இசையமைக்க எழுதி இயக்குகிறார் வெங்கி.A.L.
டி.ஆர் பாடல் பாடினாலே சோசியல் மீடியாவில் வைரல் தான்.
இதை அறிந்த நிறைய தயாரிப்பாளர்கள் டி.ஆர் வீட்டில் படையெடுத்து வருகிறார்கள்.
ஆனால் டி.ஆர்ரோ தனக்கு பாடலின் மெட்டும் வரிகளும் பிடித்திருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் காட்டுகிறார்.
இந்நிலையில் கூத்தன் பட குழு மற்றும் இசையமைப்பாளர் பாலாஜி அவரை முதலில் அணுகிய போது நோ என்று சொன்ன அவர் பாடலின் மெட்டை கேட்ட உடன் குஷியாகிவிட்டார்.
மேலும் இந்த பாடலை யார் பாடினாலும் சூப்பர் ஹிட் ஆகக்கூடிய மெட்டும் வரியும் தான் இந்த “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” என்று கூறினார்.
ஆனால் இசையமைப்பாளர் பாலாஜி, சார் நீங்கள் இந்த பாடலை பாடவேண்டும்மென்றுதான் நான் இசையமைத்தேன்.
வேறுயாரையும் வைத்து இந்த பாடலை ஓலிப்பதிவு செய்ய விருப்பமில்லை என்று கூறியவுடன் அதை கேட்டு நெகிழ்ந்து போன டி.ஆர் நானே இந்த பாடலை பாடுகிறேன் என்று ஒப்புக்கொன்டு மெர்சலாக பாடிக் கொடுத்திருக்கிறார்.
என்னதான் ஜாலி பாடல் ஆக இருந்தாலும் ஒரு வரி செண்டிமெண்ட் இதில் வைத்துயிருந்தார்கள் “ஒன்னும் இல்ல ரத்தத்தில சொந்தம் தான் டா மொத்தத்தில” என்ற ரோகேஷ் எழுதிய வரியை பாடி முடித்தவுடன் கண்கலங்கி டி.ஆர் இந்த வரிகளை நான் பாடவில்லை மைக்கின் முன் நடித்திருக்கிறேன் என்று அவர் கூறியவுடன் நெகிழ்ந்துப்போனது கூத்தன் படக்குழு.
இந்த பாடலை மிக பெரிய பொருட் செலவில் பிரமாண்ட அரங்கில் அசோக் ராஜா நடன அமைப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் படமாக்க இருக்கிறார்கள்.
TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHAN