இசை விழாவில் ரூ 20 லட்சத்திற்கான டிக்கெட்டுகளை விற்ற *கூத்தன்* தயாரிப்பாளர்

இசை விழாவில் ரூ 20 லட்சத்திற்கான டிக்கெட்டுகளை விற்ற *கூத்தன்* தயாரிப்பாளர்

koothan producerநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள்மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ் அவர்கள், ஜாக்குவார்தங்கம் அவர்கள், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய இசை வெளியீட்டில் பேசிய

பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டினர்.

இசை வெளியீட்டு விழா மேடையிலேயே

புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர்நீல்கிரிஸ் முருகன்

ஒரு மிகப்பெரும் பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைபிரமாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர நினைத்து இந்தப்படம் தயாரித்துள்ளேன். எந்தவிசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப்படத்தைஅனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என்நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்யஉள்ளேன். இதறகு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டைகொண்டு நீங்கள் தியேட்டர் சென்றால் ஒன்பது நாட்களில் எந்த தியேட்டர் செல்கிறீர்களோ அந்ததியேட்டரின் இந்தப்பட டிக்கெட்டை தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்குவாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்குநீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதைஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்தமேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கிறேன். இதைஅவர்கள் சந்தைப்படுத்துவார்கள் . ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன். இதன்மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம்மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். படத்தின் இசை விழாவிலேபடத்தின் விற்பனை தொடங்கி விட்டது. இந்த முறை எல்லோராலும் இனி பின்பற்றப்படும்என்றார். இது எல்லோரிடமும் பாரட்டை பெற்றதுடன் பரபரப்பையும் உண்டாக்கியது.

இதை அடுத்து பேசிய பிரபலங்கள் இத்திட்டத்தினை வெகுவாக பராட்டினர்.

ஹீரோ ராஜ்குமார் பேசியது

இந்தப்படத்தின் டைட்டிலே இயக்குனர் அவர் மனைவியிடம் கேட்டு கூத்தன் என அற்புதமானடைட்டிலாக வைத்தார். இந்தப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தில்பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பு என் தந்தையால் கிடைத்தது இதில்நான் என்னால் முடிந்த அளவிலான உழைப்பை தந்திருக்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம்வேண்டும். எனக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

நடிகை நமீதா பேசியது

மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மச்சாவேர்ட் உருவானது அப்படித்தான். ஹிரோ ராஜ் நீங்கள் மனோஜ் மூலம் அறிமுகமாகிறீர்கள்கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்.திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

கே பாக்யராஜ் பேசியது

நான் உள்ளே வரும்போது டீ ஆர் உணர்ச்சி பொங்க பாடிக்கொண்டிருந்தார். அவர் மேடைகளில்உணர்ச்சி வசமாக பேசிவிடுவதால் இங்கு வரவில்லை என்றார்கள். அதுவும் சரிதான். நான் இந்தமாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன்.ஆனால் இந்தப்படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.

டான்ஸ் சம்மந்தமான நாகேந்திர பிரசாத் இதில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒருபேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார். எல்லாவற்றிலும் மிகுந்ததிட்டமிடலுடன் இயங்குகிறார். இசை மேடையிலேயே வியாபாரத்தை தொடங்கிவிட்டார்.இதற்கு அவர் நண்பர்களுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். நாயகன் புதியவர் போல்இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். திட்டமிடலுன் இயங்கும் இக்குழு கண்டிப்பாகவெற்றிபெறும் என்று பேசினார்.

ஆர் கே செல்வமணி பேசியது

இந்தப்படத்தின் இயக்குநர் வெங்கியை முப்பது வருடமாக தெரியும். அவர் அப்போதே ஜீனியஸ்.எங்களுக்கே தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும். இயக்குநர் தயாரிப்பாளருக்குசண்டை வராதபடங்கள்

என்னைப் பொருத்த வரை விளங்காது.

என்னுடைய புலன் விசாரணை. படத்தில் ரிலீஸின் போது என்னை அலுவலக ரோட்டிலேயேவரக்கூடாது என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் பட ரிலீஸுற்கு பின் என்னை கூப்பிட்டுபாராட்டினார். அது போல் இந்தப்படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குபிறகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாயகனின் கண்கள்விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர் போல் இவரும் மிகப்பெரும் இடத்தை அடைவார்.எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசியது

கூத்தன் நாயகன் பிரமாதமாக நடனமாடியுள்ளார். அவர் ஒரு தமிழர் என்பதில் பெருமைகொள்கிறேன். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டாராக வர வேண்டும். இவர் வருவார். இது சின்னப்படம்கிடையாது. தயாரிப்பாளர் இதை மிகப்பெரும் படைப்பாக படைத்துள்ளார். படத்தில் பணிபுரிந்தஅனைவரும் நன்றாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தை எல்லோரும் தியேட்டரில் மட்டும்பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப்படம் நிச்சயமாக வெற்றி பெரும் என்றுபேசினார்.

நடிகை அர்ச்சனா அவர்கள் பேசியது

உலகில் முதலில் வந்தது கூத்துதான். கூத்தன் நல்ல தலைப்பு. தயாரிப்பளரின் முயற்சியில்நிறைய நேர்மை இருக்கிறது. நல்ல முறையில் படக்குழுவினர் உழைத்துள்ளார்கள். பாக்யராஜ்இந்தப்படத்தில் இருப்பது மிகப்பெரிய பிளஸ். பெண்களுக்கு கண்கள் அழகாக இருப்பதுமிகப்பெரிய பிளஸ். இந்தப்படத்தில் நாயகனின் கண்கள் வசீகரமாக இருக்கிறது. அவர்மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். உங்கள் தந்தை சினிமா உலகில் நிரந்தர இடத்தை பிடிக்கவேஇப்படத்தை தயாரித்துள்ளார். அதை மனதில் வைத்து பயணியுங்கள். மிகப்பெரிய வெற்றிஅடைவீர்கள். படத்தை தியேட்டரில் பாருங்கள் அதுதான் சினிமாவிற்கு செய்யும் மரியாதை.படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றார்.

இசை அமைப்பாளர் பால்ஜீ பேசியது

நான் திரைப்படக்கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே மேடையில் இருப்பவர்களை வியந்துபார்த்திருக்கிறேன். இவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது மிகப்பெரிய விசயம்.இந்தப்படத்தில் எல்லோரும் ரசிக்கக்கூடிய துள்ளலான இசையை தந்திருக்கிறோம். படம்டான்ஸை மையமாக கொண்டது என்பதால் அதை சுற்றி இசை அமைத்திருக்கிறேன்.எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்று பேசினார்.

பாடலாசிரியர் விவேகா பேசியது

நான் இப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்படத்தின் இசையமைப்பாளர்கன்னடத்தில் நிறைய இசையமைத்திருக்கிறார். எனது நெருங்கிய நண்பர். கதாநாயகன்அற்புதமாக நடனமாடியுள்ளார். அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார். தயாரிப்பாளர் அற்புதமனம்

படைத்தவர். ஒரு பாடல் பதிவிற்காக ஒரு ரிசார்ட்டிற்கு சென்றிருந்தோம். அங்கே அவரதுஇன்ஸ்டிடுயூட்டில் படித்தவர்கள் அவரை வந்து பார்த்தனர். உடனே ஈன்ற பொழுதினும்பெரிதுபவப்பவர் போல் மகிழ்ந்து அவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தார்.அந்தக்குணம் எனக்குமிகவும் பிடித்தது. இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்.

அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?

அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?

arjun‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு மிக பிரமாண்டமாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன்.

இந்த படத்தில் ‘Action King’ அர்ஜுன், ஜெகபதி பாபு , ஜாக்கி ஷெராஃப், ‘கோட்டா’ சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை
‘பேராண்மை’ , ‘பூலோகம்’, ‘மீகாமன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

‘க்ரைம் நாவல்’ மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க உள்ள கதாநாயகன் யார் என்பது விநாயகர் சதுர்த்தி அன்று அறிவிக்கப்பட உள்ளது.

யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்?

யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்?

Sivakarthikeyan fans reaction to Arun Vijays controversial tweetசிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதில் ஒரு காட்சியில் பாகுபலி பட நாயகன் போல தமிழ் மன்னராக வேடம் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.

இது அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் நடிகர் அருண்விஜய், இரவு நேரத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ” யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்ற வாசகங்களை பதிவிட்டு இருந்தார்.

இது சிவகார்த்திகேயனின் சீமராஜா வை குறிப்பிடும் வகையில் உள்ளதாக பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

நீங்கள் 20 வருடமாக சினிமாவில் இருக்கிறீர்கள். ஆனால் முன்னணி நடிகராக வரவில்லை. அதான் பொறாமை என ரசிகர்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜய்க்கு எதிராக பதிவிட்டனர்.

யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன்

ஒரு 6 மணி நேரத்திற்கு பிறகு இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார் அருண்விஜய்.

அதில் எனது டுவிட்டர் அக்கௌண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என பதிவிட்டார்.

இதன் பின்னர் தனது அடுத்த பதிவில்…

இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் சில நேரம் ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு முன்னதாக சீமராஜா விழாவில், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. பொறாமையும் இல்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. என சிவகார்த்திகேயன் பரபரப்பாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan fans reaction to Arun Vijays controversial tweet

பிக்பாஸை விட்டு வந்ததும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த டேனியல்

பிக்பாஸை விட்டு வந்ததும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த டேனியல்

Actor Danny and his lover Denisha got marriedப்ரெண்ட்டு ஃபீல் ஆயிட்டாப்ல… இந்த டயலாக்கை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

அதை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பேசி பேசி பிரபலப்படுத்தியவர் டேனியல்.

இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

சில தினங்களில் மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று நடிகர் டேனியலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியே வந்த உடனே அவர் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த ரகசிய திருமணம் என தெரிய வந்துள்ளது.

Actor Danny and his lover Denisha got married

இதயத்தை வருடும் படமாக *காற்றின் மொழி* இருக்கும்: வித்தார்த்

இதயத்தை வருடும் படமாக *காற்றின் மொழி* இருக்கும்: வித்தார்த்

Kaatrin mozhi movie will be close to your heart says Vidaarthதனித்துவமிக்க கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக நடிகர் விதார்த் இருந்து வருகிறார்.

இதற்கு, அவர் நடித்த குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குற்றமே தண்டனை போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

தற்போது அவர் நடித்து வரும் படம் காற்றின் மொழி. இந்த படத்தில் அவர் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார்.
நடிகர் வித்தார்த் சமீபத்தில் லயோலா கல்லூரியின் LECET-இல் நடந்த கலச்சார விழா ஒன்றில், BOFA மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பாளர் ஜி தனஞ்சேயனுடன் இணைந்து பங்கேற்றார்.

இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வித்தார்த் பேசுகையில்…

உங்களுக்கு எதையும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் காலேஜ் ஸ்டுடண்ட்டான உங்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரீஸ்களில் முன்னணியில் உள்ள பலர் லயோலாவில் பட்டம் பெற்றவர்கள் தான்.

நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றாலும், 1996ல் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த காலேஜில் இருந்து வெளியே வந்தவர் தான். அதனால் நான் இங்கு ஹாஸ்டலில் தங்கி இருப்பேன்.

இந்த ஹாஸ்டலில் கிடைக்கும் புரோட்டவை என்னால் மறக்கவே முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், நான் வித்தியாசமான கேரக்டர்களின் நடித்து வந்தாலும், யார் நல்ல கதையுடன் வருகிறார்களோ, அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க கதை தேர்வு செய்து வருகிறேன்.

எனது சமீபத்திய திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்த லயோலா கல்லூரியின் மாணவர்கள், எனது நடிப்புக்காக என்னை பாராட்டினார்கள்.

பாராட்டுகளே ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகபெரிய கவுரவமாகும் என்று இதுவே என்னை காற்றின் மொழி போன்ற படங்களில் நடிக்க செய்தது.

இந்த படத்தின் ஒரிஜினல் வெர்சன் படமான ‘Tumhari Sulu’ படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள்.
திடீரென ஒரு நாள் தயாரிப்பாளர் தனஞ்சேயன் சார், என்னை கூப்பிட்டு, இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த படத்தை பார்த்த பின்னர், என்னை அவர் அழைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் என்றார்.

காற்றி மொழி படம் குறித்து அவர் பேசுகையில், இந்த படம், சிம்பிளாக இருக்கும் என்பதோடு இதயத்தை தொடும் கதை அம்சத்துடன், அனைவரும் பொருந்து வகையிலும் இருக்கும், ஜோதிகா மேடத்துடன் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது.

டப்பிங் பணிகளின் போது ஒரு சில படங்களை முழு திருப்தி அளிக்கும் படமாக அமையும், ஆனால் காற்றின் மொழி படம் எனக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.

தயாரிப்பாளர் தனஞ்சேயன் பேசுகையில்…

நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றபோதும், இங்கு படிக்கும் மாணவரின் பெற்றோராக இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது.

எனது மகள் ரேவதி இங்கு படித்து 2015ம் ஆண்டில் பட்டம் பெற்றவர். உங்கள் படிப்பை சரியாக முடித்த பின்னர் உங்களுக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்ய வேண்டும், அந்த துறையில் சிறப்பாக பணியாற்றி முன்னேற வேண்டும் என்றார்.

Kaatrin mozhi movie will be close to your heart says Vidaarth

பெருதுளசி பழனிவேலின் 2018 ஜனவரி-ஜூன் வரை சினிமா செய்திகள்

பெருதுளசி பழனிவேலின் 2018 ஜனவரி-ஜூன் வரை சினிமா செய்திகள்

PRO Peruthulasi Palanivel launched book about 2018 Tamil Cinema newsசென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

இவர் தமிழ் திரைப்பட செய்திகள் அனைத்தும் “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் வருடாவருடம் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த 2016ம் ஆண்டு காலமானார்.

அவருடைய மறைவுக்குப் பிறகு, தென்னிந்திய சினிமா மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான, பெருதுளசி பழனிவேல் தொடர்கிறார்.

கடந்த வருடம் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து கடந்த ஆண்டு ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.

இந்நிலையில், சினிமாவிற்கான இந்த தகவல் களஞ்சியத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் “துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.

PRO Peruthulasi Palanivel launched book about 2018 Tamil Cinema news

More Articles
Follows