Official ஞானவேல் ராஜாவுக்காக ‘அருவா’ எடுக்கும் சூர்யா & ஹரி

Official ஞானவேல் ராஜாவுக்காக ‘அருவா’ எடுக்கும் சூர்யா & ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya teams up with director Hari for Aruvaaசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று அவரின் 38வது படமாகும்.

இதனையடுத்து ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதை சிவா இயக்குவார் எனவும் படக்குழு அறிவித்தது.

ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை சிவா இயக்க சென்றுவிட்டதால் சூர்யா மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்டுடியோ கிரீன்.

இப்படத்திற்கு ‘அருவா’ என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பொதுவாகவே ஹரி படங்களில் சுமோ மற்றும் அருவா இல்லாமல் இருக்காது. இப்போது டைட்டிலேயே அருவா உள்ளது. எனவே அதன் வீச்சு பலமாக இருக்கும் என நம்பலாம்.

இது நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம்.

இயக்குநர் ஹரியின் 16-வது படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Actor Suriya teams up with director Hari for Aruvaa

2K1 KIDS எதிர்காலம்?; மாண்புமிகு ஆத்விக்கு போஸ்டர்; அஜித் கண்டிப்பாரா?

2K1 KIDS எதிர்காலம்?; மாண்புமிகு ஆத்விக்கு போஸ்டர்; அஜித் கண்டிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith son Aadvik birth day poster made controversy அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு அனோஷ்கா (பிறந்த வருடம் 2008) ஆத்விக் (பிறந்த வருடம் 2015) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் ஆத்விக்கின் பிறந்த நாள் மார்ச் 2 நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி அஜித்தின் ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டிங் செய்ய தொடங்கியுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் சில இடங்களில் விழா ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.

Aadvik Ajith latest photos

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த போஸ்டரில் 2.1K Kids in எதிர்காலமே..! மாண்புமிகு திரு. ஆத்விக் அஜித்குமார்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடித்துள்ளனர்.

இந்த வாசகத்தின் பின்னால் தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற படங்களும் இடம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடலாம். அவரின் குடும்பத்தாரின் பிறந்தநாளை கூட கொண்டாடலாம் தவறில்லை.

ஆனால் 5 வயதே ஆகும் ஒரு சின்ன குழந்தையை மாண்புமிகு என்பதும் எத்தகைய தவறான செயலாகும்.

மாண்புமிகு என்ற சொல் அரசு பதவிகளில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதை ஒரு குழந்தைக்கு பயன்படுத்துவதால் அதுபோன்ற செயல்களில் பலரும் நாளை ஈடுபடக்கூடும்.

மேலும் மதுரை ரசிகர்களை தொடர்ந்து அவர்களுக்கு போட்டியாக மற்றொரு பிரிவினர் இந்தியாவின் முதல் குடிமகனே… பாராளுமன்றத்தின் பலமே… என்ற சொற்களை பயன்படுத்த கூடும்.

தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் அஜித். ஆனால் அவரின் ரசிகர்களின் செயல்களால் அவருக்கும் அவப்பெயர் வர வாய்ப்புண்டு.

அஜித் ஜோடியாக காலா நாயகி; வில்லனாக தெலுங்கு நடிகர்!

இதற்கு முன்பே தினம் தினம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மிகவும் கீழ்த்தரமான வாக்கியங்களை பயன்படுத்தி டிரெண்ட் வருகின்றனர்.

இதை அஜித்தோ விஜய்யோ கண்டிப்பதில்லை. இவர்கள் மௌனமாக இருப்பதால் இது தினம் தொடர்கிறது.

அஜித் போஸ்டர் வந்தால் விஜய் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அதுபோல் விஜய்க்கும் நடக்கிறது.

அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போதும் அஜித் ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்தனர். அதற்கு எதிராக இவர்களும் டிரெண்ட் செய்தனர்.

தல தளபதி இருவரும் வாய் திறந்தால் அல்லது அறிக்கை விட்டால் தான் இதற்கு முடிவு உண்டாகும். அப்போது தான் ரசிகர்கள் நிச்சயம் அமைதி காப்பார்கள்.

தான் சம்பந்தப்பட்ட பட விழாவுக்கே வராத அஜித் இதை கண்டிப்பாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அமைதியாக இருப்பதால் ஒருவேளை அவர்கள் இதுபோன்ற செயல்களை ஆதரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.

நாளை சமுதாயம் ஒரு தவறான பாதைக்கு சென்ற விடக்கூடாது என்ற ஆதங்கமே இந்த பதிவு.

Ajith son Aadvik birth day poster made controversy

Ajith son Aadvik birth day poster made controversy

 

சுதா ரகுநாதன் முன்னிலையில் வேல்ஸ் மகா உத்சவ் கலைவிழா

சுதா ரகுநாதன் முன்னிலையில் வேல்ஸ் மகா உத்சவ் கலைவிழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sudha Ragunathan participated in Vels Maha Utsav 2020முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் மாபெரும் வேல்ஸ் மகா உத்சவ் 10-ஆம் ஆண்டு கலைவிழா நிகழ்வு பிப்ரவரி 29 அன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.

இக்கலைவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கர்நாடக இசைக்கலைஞரும் பின்னணிப் பாடகியுமான திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் விழா நிகழ்வினைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.

மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் சிறப்பான இசைப் பங்களிப்பினை வழங்கிய சிறப்பு விருந்தினர், மாணவர்கள் கலைத்திறன் மட்டுமல்லாது கல்வியிலும் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

பின்னர் நடைபெற்ற கலைவிழாவில் வேல்ஸ் ராகாஸ் இசைமாணவர்கள் 70 பேர் பங்கேற்ற இசை நிகழ்வு மற்றும் வேல்ஸ் நாட்டியாலயா மாணவர்கள் 501பேர் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் வேலம்மாள் மாணவர்கள் அரங்கேற்றிய ஆரோக்கியம் தரும் யோகாசனா நிகழ்வு நடைபெற்றது.மற்றும் 701 ஓவிய மாணவர்களின் கண்கவர் ஓவியங்கள் இடம்பெறும் மாபெரும் ‘வர்ணா ‘ ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.

வேலம்மாள் பள்ளி நடத்திய இம்மாபெரும் கலைவிழா நிகழ்வு மாணவர்களின் பல்கலைத் திறன்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

Sudha Ragunathan participated in Vels Maha Utsav 2020

கோடையை தெறிக்க விட வரும் விஜய் சூர்யா விக்ரம் தனுஷ்

கோடையை தெறிக்க விட வரும் விஜய் சூர்யா விக்ரம் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kollywood top actorsதீபாவளி, பொங்கலை போன்று கோடை விடுமுறையும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

படமே பார்க்காதவர்கள் கூட கோடை விடுமுறையில் நிச்சயம் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்காக பெரிய படங்களை வெளியிட காத்திருப்பர் தயாரிப்பாளர்கள்.

இந்தாண்டு 2020 கோடை விடுமுறையில் விஜய், சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி மற்றும் விக்ரம் ஆகியோரத்து படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

மாஸ்டருக்கு அனுமதி மறுப்பு; கோவப்பட்டு கோவை செல்லும் விஜய்..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி இருவரும் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் மே மாதம் முதல் தேதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படமும் கோடையில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் – ரஜினிகாந்த்

எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் – ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில், முரசொலி, பெரியார் பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

இது பெரும் சர்ச்சையானது. பெரியார் அமைப்புகள் ரஜினிக்கு தெரிவித்தன.

ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி பேட்டியளித்தார்.

இதனையடுத்து ரஜினியின் போயஸ் கார்ட்ன் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கிட்டதட்ட ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இனி பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரஜினியை, நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு சந்தித்து பேசினார். அப்போது, ரஜினியின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் 5 போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதனை 3 ஆக குறைக்க முடிவு செய்துள்ளனர்.

முதல் நாளிலேயே பட பட்ஜெட் வசூலானது; தியேட்டர்களை திணற வைத்த ‘திரௌபதி’

முதல் நாளிலேயே பட பட்ஜெட் வசூலானது; தியேட்டர்களை திணற வைத்த ‘திரௌபதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

draupathiமோகன் இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட் மற்றும் ஷீலா நடிப்பில் நேற்று வெளியான படம் திரௌபதி.

ஜூபின் இசையமைக்க, மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் டிரைலர் வெளியானபோதே சாதி பற்றிய படம் என பரபரப்பாக பேசப்பட்டது. பல அரசியல் அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்தன. இதுவே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைய எதிர்பார்ப்பு எகிறியது.

பாகம ராமதாஸ், பாஜக எச். ராஜா உள்ளிட்டவர்கள் பட ரீலீசுக்கு முன்பே படத்தை பார்த்து கருத்து தெரிவித்தனர்.

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

இந்த நிலையில் இது வெளியான தியேட்டர்கள் திருவிழா கோலம் கண்டது.

முக்கியமாக புதுச்சேரி, கடலுர், சிதம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட பல தியேட்டர்களில் சில அமைப்புகள் மொத்த டிக்கெட்டையும் புக்கிங் செய்து படத்தை பார்த்து கண்டு களித்துள்ளனர்.

இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 70 லட்சத்தை கூட தாண்டவில்லையாம்.

ஆனால் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 1 கோடியை கடந்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

திரௌபதி படத்தில் முன்னணி நடிகர்கள் இல்லாத நிலையில் இதன் வரவேற்பை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

More Articles
Follows