உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட்

sonu soodஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது.

இந்த நோயாளிக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே என்ன செய்வது என தெரியாத அவர் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அந்த நபர் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையறிந்த சோனு சூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

உடனே ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

தற்போது அங்கு சிகிச்சை பெறும் அந்த நபர் உடல்நலம் தேறி வருகிறார்.

உயிர் காத்த ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Actor Sonu Sood Gets Critically Ill Covid-19 Patient Airlifted From Jhansi to Hyderabad

Overall Rating : Not available

Latest Post