களரி படத்திற்காக மீண்டும் ஹீரோ ரூட்டில் கிருஷ்ணா

களரி படத்திற்காக மீண்டும் ஹீரோ ரூட்டில் கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor Krishnaகழுகு, யட்சன், பண்டிகை உள்ளிட்ட பல படங்களில் தனி ஹீரோவாக நடித்த கிருஷ்ணா, முதன்முறையாக அர்ஜீனின் நிபுணன் படத்தில் வில்லனாக நடித்தார்.

தற்போது மீண்டும் ஹீரோ ரூட்டில் பயணிக்க தொடங்கிவிட்டார்.

இவர் நடிப்பில் அடுத்து உருவாகிவரும் படம் களரி.

நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’.

இதில் கிருஷ்ணாவுடன் வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த்.

ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தை தொகுக்கிறார். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி வி பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் கூறியதாவது…

‘களரி என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது.

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.” என்றார்.

பாமக ராமதாஸின் பேரன் குணாநிதியும் சினிமாவுக்கு வந்துட்டார்

பாமக ராமதாஸின் பேரன் குணாநிதியும் சினிமாவுக்கு வந்துட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PMK Ramadoss grandson starring A Stroke of Dissonance Short Filmடாக்டர் ராமதாஸ் அவர்களின் பேரன் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸின் ஒன்று விட்ட சகோதரனுமான (cousin) குணாநிதி, ‘A Stroke Of Dissonance’ என்ற முப்பது நிமிட குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்க உள்ளார். பல சர்வதேச திரை விழாக்களில் இக்குறும்படம் பங்கேற்கவுள்ளது.

இது குறித்து குணாநிதி பேசுகையில், ” சிறு வயதிலிருந்தே நடிப்பு பயிற்சி பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். நடிப்பில் எனக்கு என்றுமே பேரார்வம் இருந்துள்ளது.

‘Theatre lad’ சார்பில் நிறைய மேடை நாடகங்கள் மற்றும் வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். எனது இந்த ‘A Stroke Of Dissonance’ ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே கொண்ட 30 நிமிட குறும்படம்.

சரியான உந்துதல் கிடைக்காமல் தவிக்கும் ஒரு போராடும் வயலின் கலைஞனை பற்றிய ஒரு திரில்லர் கதை இது.

இந்த கதாபாத்திரத்திற்காக ஜெர்மனியை சேர்ந்த ஒரு வயலின் கலைஞரிடம் நான்கு மாதங்கள் வயலின் பயின்றேன். எனது நடிப்பு ஆர்வத்திற்கு எனது குடும்பத்தினர் எனக்கு முழு ஆதரவு தந்துள்ளனர்.

என் தாத்தா தான் நான் நடிப்பு பயிலும் பட்டறையில் சேர்ந்து முறையாக பயில வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார்.

சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் மேலும் மேலும் பயின்று, தமிழ் சினிமாவின் கால்பதித்து எனது உழைப்பின் மூலம் வெற்றிபெற முனைப்போடு உள்ளேன்” என்றார் குணாநிதி.

இப்படத்தை மறைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ‘ராம்போ’ ராஜ்குமாரின் மகன் ‘ராம்போ’ வெங்கட் இயக்கியுள்ளார்.

PMK Ramadoss grandson starring A Stroke of Dissonance Short Film

தொங்கல் உடலை பிஃட்டாக்கும் வடிவேலு; மீண்டும் வரும் இம்சை அரசன்

தொங்கல் உடலை பிஃட்டாக்கும் வடிவேலு; மீண்டும் வரும் இம்சை அரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu working out for Imsai Arasan 23M Pulikesi Part 2சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

இதனை இயக்குனர் ஷங்கர் தயாரித்து இருந்தார்.

இதன் இரண்டாம் பாகத்தையும் ஷங்கரே தயாரிக்க, வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியது.

இதன் பணிகள் தொடங்கும் நேரத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் வடிவேலு.

தற்போது அங்குள்ள காட்சிகளை முடித்துவிட்டு திரும்பிய வடிவேலு, தற்போது உடல் எடையை குறைக்க தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

விரைவில் வடிவேலுவுடன் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்பாகத்தில் அமைச்சராக நடித்த இளவரசுவிடம் அரசன் வடிவேலு தன் உடல் சற்று தொங்கலாக இருக்கும். எனவே சிக்ஸ்பேக் உடலை ஓவியமாக வரைய சொல்வார்.

தற்போது அதுபோல் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Vadivelu working out for Imsai Arasan 23M Pulikesi Part 2

vadivelu six pack

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதிரடி முடிவுகளை எடுக்க விஷால் திட்டம்?

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அதிரடி முடிவுகளை எடுக்க விஷால் திட்டம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal invited all producers to attend Urgent Producer Council meeting on 18th August 2017

தமிழ் சினிமா பல்வேறு விதமான பிரச்சினைகளை தினம் தினம் சந்தித்து வருகிறது.

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி, திருட்டு விசிடி, பெப்சி ஊழியர்கள் பிரச்சினை என பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது.

எனவே இதுகுறித்து பேச, நாளை ஆகஸ்ட் 18ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பதாவது:
தற்போது தமிழ் திரைப்படத் துறையில் நிலவி வரும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியிருப்பதால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தயாரிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vishal invited all producers to attend Urgent Producer Council meeting on 18th August 2017

 

நம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்

நம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maaruvoom Matruvom event photos (10)பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சியை ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பு திண்டிவனம் அடுத்த ஆவணிபூர் கிராமத்தில் வரும் 26-ம் தேதி நடத்த உள்ளது.

‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்கான மோஷன் போஸ்டர், இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. அவற்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

நம் நாட்டில் சுமார் 70 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகள் அழிந்துவிட்டன. 30 சதவீத பாரம்பரிய விதைகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கூறப்படுகிறது. மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரில் விஷம் பாய்ச்சுகிறோம்.

இதனால் மறைமுகமாக நாமும் விஷம்தான் உண்கிறோம். உண்மையில், உண்ணும் உணவு விஷமானதற்கு எதிரிகள் காரணமல்ல; நம் பேராசையும், உணவுப் பொருட்கள் வியாபாரமானதும்தான் காரணம். இந்த நிலை மாறவேண்டும்.

இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம். எஞ்சியுள்ள 30 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகளைக் காக்க ஒவ்வொருவரும் விவசாயியாக மாறுவோம்.

அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என் புதிய வீட்டின் மாடியில் இயற்கை உரங்கள் போட்டு, இயற்கை விதைகளைக் கொண்டு மாடித் தோட்டம் அமைக்கத் தொடங்கியுள்ளேன்.

உலக சாதனைக்காக மட்டுமல்ல; இயற்கை சார்ந்த உணவுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். இப்பணியில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு என் நற்பணி மன்றத்தினரையும் ஈடுபடுத்த உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். நடிகர் ஆரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Kamal and Actor Aari Promotes Heirloom Seeds

Maaruvoom Matruvom event photos (14)

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி கூட்டணிக்கு வெற்றியை தந்த திருவள்ளுவர்

தனுஷ்-சௌந்தர்யா ரஜினி கூட்டணிக்கு வெற்றியை தந்த திருவள்ளுவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vip2 Success meet photos (13)சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், விவேக், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வேலையில்லா பட்டதாரி2 படம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இப்படக்குழுவினர் மற்றும் இணைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் படக்குழுவினரை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது…

‘வேலையில்லா பட்டதாரி 2’ கதையை முழுமையாக முடித்து செளந்தர்யாவிடம் கொடுக்கும் போதே, இப்படத்தின் வெற்றி முதல் பாகம் அளவுக்கு அல்ல, ஆனால் நன்றாக இருக்கும் என்று முதல் நாளிலேயே கூறித்தான் பணிகளைத் தொடங்கினோம்.

முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.

இப்படத்துக்கு என ஒரு வெற்றியை வைத்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டி படம் வெற்றிடையந்ததில் சந்தோஷம். நல்ல விஷயங்கள் சொல்கிறோம், இப்படத்தின் மூலம் நேர்மறையான விஷயங்களை எடுத்துரைக்கிறோம் என நினைத்தேன்.

ஒரு சிலர் திறக்குறளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள்.

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திறக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கப் போகிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே.

அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.

இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது.

அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

எப்போதும் அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமே நிரந்தரம். ஒருவரைப் பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், பிடிக்கவில்லை என்றால் எதுவுமே பேசாமல் இருக்கலாம்.

பிடிக்கவில்லை என்பதற்காக வெறுப்பை விரும்ப வேண்டிய அவசியமில்லை. நிச்சயமாக அன்பு செலுத்துங்கள், அது மட்டுமே இந்த உலகிற்கு அதிகம் தேவை. உலகம் நிறைய எதிர்மறையான விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பெரிய பிரச்சினைகளைத் தாண்டி மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே, இயற்கை நம்மீது அன்பு செலுத்தும்.
‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை.

இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன் தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்.”

இவ்வாறு தனுஷ் பேசினார்.

Thirukural Thiruvalluvar is reason behind success of VIP2

Vip2 Success meet photos (17)

More Articles
Follows