‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது

‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandigai movie stillsநிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ் இயக்கி இருக்கும் இந்த ‘பண்டிகை’ படத்தில், கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘பண்டிகை’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார்.

“எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அன்போடு அழைக்கின்றேன். இவர்கள் முன்னிலையில் எங்கள் ‘பண்டிகை’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.⁠⁠⁠⁠

மாநகரம் திரைப்படத்தை பற்றி பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் K.L !

மாநகரம் திரைப்படத்தை பற்றி பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் K.L !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanagaram movie stillsநேற்று எனக்கு மாநகரம் திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இளம் குழு ஒன்று மிக தெளிவான , தரமான ஒரு படத்தை உருவாக்கி உள்ளது. படம் ஆரம்பமாகும் முதல் பிரேமில் இருந்து இறுதி வரை படம் நம்மை கட்டி போடுகின்றது என்பது தான் உண்மை. இப்படத்தை பொறுத்தவரை கதையும் – படத்தை உருவாக்கியுள்ள விதமும் நம்மை வியக்கவைக்கிறது.ஒரு எமோஷனலான காட்சியை பேப்பரில் எழுதிவிட்டு அதை படமாக எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இயக்குநர் லோகேஷ் அவருடைய பாணியில் சரியாக செய்துள்ளார்.

படத்திருக்கு ஒளிப்பதிவு , பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கிறது. நிச்சயம் இவை அனைத்தும் காலம் கடந்து பேசப்படும். இப்படத்தில் சார்லி சார் , சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா , முனிஸ்காந்த் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு , எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரை இப்படத்தை தயாரிக்க முடிவெடுத்ததற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும்.

மாயா , ஜோக்கர் , காஷ்மோரா , இப்போது மாநகரம். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தென்னகத்தின் UTV Spot Boy என்று நம்மை பாராட்ட வைக்கிறது. இப்படத்தின் மொத்த குழுவையும் நான் இந்த மிகச்சிறந்த முயற்சிக்காக நான் பாராட்டுகிறேன். சினமாவை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் மாநகரம். இந்த படத்தை நிச்சயம் பார்த்து ரசியுங்கள். மாநகரம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். வருகிற மார்ச் 10 – ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது

தவறு செய்தால் ஒப்புக் கொள்கிறேன்… கமல் அதிரடி

தவறு செய்தால் ஒப்புக் கொள்கிறேன்… கமல் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamalhaasanதன் மனதில் பட்டதை எவருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பேசுபவர் கமல்.

அண்மைகாலமாக தமிழக அரசியல் க(நி)லவரம் குறித்து தடாலடியாக பேசி வருகிறார்.

எனவே ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகிறது.

இந்நிலையில் இவரது பெயரில் நீள் கவிதை ஒன்று வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

இது குறித்து கமல் கூறியதாவது…

Whatsappல் நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன்.

தப்பு எனதல்ல.செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும் by @ikamalhaasan என பதிவிட்டுள்ளார்.

 

 

இதுதான் கமல்ஹாசன் பெயரில் வந்த கவிதை…

சிங்கமில்லாக் காடு
**********************

செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது

மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது

உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது

புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!

வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்

திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!

ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!

அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!

நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!

காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!

காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!

தனுஷ்-ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவரா?

தனுஷ்-ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ranjith dhanushகபாலியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ரஞ்சித்.

இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இதில் ரஜினிக்கு நாயகியாக பிரபல நாயகி வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் டேட்ரீ பிக்சர்ஸ் படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு இசையில் அனிருத் பாட்டு… நண்பனின் நன்றிக்கடன்

சிம்பு இசையில் அனிருத் பாட்டு… நண்பனின் நன்றிக்கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and anirudhபிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத், தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல இசையமைப்பாளர் கம்போஸ் செய்யும் பாடல்களை பாடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அனிருத், சிம்பு இசையமைக்கும் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தில் அவர் கம்போஸ் செய்துள்ள ஒரு அதிரடி பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இந்த பாடலின் ஒலிப்பதிவு இன்று காலை நடைபெற்றது,.
ஏற்கனவே ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது தெரிந்ததே.

தற்போது அதற்கு நன்றிக்கடனாக சிம்பு இசையில் அனிருத் பாடியுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோசங்கர் உள்பட பலர் நடிக்கவுள்ள சக்க போடு போடு ராஜா’ படத்தை சேதுராமன் இயக்கவுள்ளார்.

விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷாலுக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor vishalதென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக செயல்பட்டு வரும் நடிகர் விஷாலுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் பதவிக்கு போட்டியிட எந்த வித தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கவுன்சிலில் போட்டியிட விஷால் அளித்த மனுவை தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டதை எதிர்த்து கேயார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் விஷாலின் மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சரியானதே என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரியின் முடிவுகளே இறுதியானது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

More Articles
Follows