‘விஷ்ணுவர்தனுக்கு பிறகு அதிகம் டார்ச்சர் செய்தவர் ஃபெரோஸ்’ – கிருஷ்ணா

‘விஷ்ணுவர்தனுக்கு பிறகு அதிகம் டார்ச்சர் செய்தவர் ஃபெரோஸ்’ – கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandigai krishnaடீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’.

ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது.

படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன்.

மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.

அங்காடி தெரு படத்தை போல படம் முழுக்க வரும் ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் எனக்கு கொடுத்தொருக்கிறார் இயக்குனர் ஃபெரோஸ். என் கேரியரில் அடுத்த கட்டத்துக்கு கூட்டி செல்லும் படமாக இருக்கும்.
கிருஷ்ணா சாருடன் கிரகணம், பண்டிகை உட்பட மூன்று படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன், அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்றார் நடிகர் பிளாக் பாண்டி.

பண்டிகை படத்தின் போஸ்டர், மற்றும் டீசர் பார்த்தவுடன் தயாரிப்பாளரிடம் பேசி இந்த படத்துடன் என் பயணத்தை துவக்கினேன். படத்தை வாங்கும் போது யாரும் போட்டுக் காட்ட தயங்குவார்கள்.

ஆனால் விஜயலக்‌ஷ்மி, ஃபெரோஸ் படத்தை போட்டுக்காட்டி, என் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டனர். கிருஷ்ணாவின் கேரியரில் கழுகு, யாமிருக்க பயமேன் படங்கள் என்ன பெயரை பெற்றுத் தந்ததோ அதை இந்த படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.

ஃபெரோஸ் ஒரு ஸ்டைலிஷ் இயக்குனர். அவர் எங்கள் பேனருக்கு அடுத்த படத்தை இயக்கி தர வேண்டும். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரித்த விஜயலக்‌ஷ்மிக்கு பாராட்டுக்கள். படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்ல எல்லா வேலைகளையும் செய்து வருகிறோம்.

படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறோம் என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ்.

முதலில் ஃபெரோஸ் வேறு ஒரு கம்பெனிக்கு ஒப்பந்தமாகி இருந்தார். எனக்கு பொறாமையாக இருந்தது. அப்புறம் தான் ஒரு நாள் விஜயலக்‌ஷ்மி என்னை ஹீரோவாக நடிக்க கூப்பிட்டார்.

என் வாழ்க்கையில் முதல் முறையாக முதல் பாதி இயக்குனர் ஃபெரோஸ் சொன்னார், இரண்டாம் பாதியை தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி சொன்னார். சிக்ஸ் பேக் எதுவும் வைக்க தேவையில்லை என ஃபெரோஸ் சொன்னார்.

வழக்கமாக நடிப்பது மாதிரி நடிக்க கூடாது என என்னை ரொம்ப டார்ச்சர் செய்து விட்டார். விஷ்ணுவர்தனுக்கு பிறகு என்னை அதிகம் டார்ச்சர் செய்தது ஃபெரோஸ் தான்.

நாயகிகளுக்கு கண்கள் எப்போதுமே அழகு. ஆனந்திக்கும் அது பெரிய பிளஸ். மாயா வரைக்கும் மகேஷ் பல படங்களை சிறப்பாக கொண்டு சேர்த்திருக்கிறார். இந்த படத்தையும் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன் என்றார் நாயகன் கிருஷ்ணா.

நான் நடிக்க போகிறேன் என்று சொன்ன போது என் குடும்பம் உட்பட எல்லோரிடத்திலும் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், படம் தயாரிக்கப் போகிறேன் என்றதும் எல்லோரும் வேண்டாம் என அறிவுரை கூறினர்.

கிருஷ்ணா என் நண்பன், படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான். கேரவன் கூட போகாமல் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறான். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களிடையே ஒரு பெரிய போட்டியே இருந்தது.

ஒவ்வொருவரும் சிறப்பான, தரமான படமாக கொடுத்திருக்கிறார்கள். எங்களை விட ஆரா சினிமாஸ் மகேஷ் தான் மிகவும் தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசை என்றார் தயாரிப்பாளர் விஜயலக்‌ஷ்மி.

நிறைய ஹீரோக்களிடம் கதையை சொல்லியிருக்கிறேன், எல்லாம் ஓகே ஆகினாலும் படத்தை தொடங்கவே முடியவில்லை. அப்போது தான் படத்தை நாங்களே தயாரிக்க முடிவு செய்தோம்.

கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் தான் இந்த கதைக்கு வேண்டும் என முன்பே முடிவு செய்தேன், அது சாத்தியமானது. தெரு சண்டையை மையமாக கொண்ட கதை என்பதால் ஸ்டண்ட் மாஸ்டரின் வேலை ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது, அதை அன்பு அறிவு சிறப்பாக செய்து கொடுத்தனர்.

படத்தை முழுதாக பார்ப்பதற்கு முன்பே நம்பிக்கை வைத்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்த ஆரா சினிமாஸ் மகேஷ் சாருக்கு நன்றி. படத்தை அவர் சிறப்பான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறேன்.

நிறைய பேர் டீசர், டிரைலர் பார்த்து விட்டு ஃபைட் கிளப் படத்தின் காப்பியா என கேட்கிறார்கள். இது தெரு சண்டையை மையமாக வைத்து சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

சென்னை அண்ணா நகரில் நான் பார்த்த இரண்டு கேங் சண்டை போடுவார்கள். அவர்கள் எதிர்கள் கிடையாது, சண்டை முடித்து விட்டு நண்பர்களாக கிளம்பி செல்வார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். அது தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றார் இயக்குனர் ஃபெரோஸ்.

நடிகர் நிதின் சத்யா, நாயகி கயல் ஆனந்தி, எடிட்டர் பிரபாகர், கலை இயக்குனர் ரெமியன், ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் விக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

After Vishnu Vardhan director Feroz torture me lot says Krishna

pandigai movie team

தமிழில் பேசுவேன்; தண்ணீர் கேட்பேன்… பெங்களூரில் விஷால் பேச்சு

தமிழில் பேசுவேன்; தண்ணீர் கேட்பேன்… பெங்களூரில் விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal speech‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் வெளியிட நடிகர் சிவராஜ்குமார் இசை தட்டை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்ட்ரல் டவுன் ஹாலில் இவ்விழா சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

ஆனால், சிவராஜ்குமார் அவர்கள் அவசரமாக வெளியூர் பயணம் சென்றதால் சிவராஜ்குமார் அவர்கள் கலந்து கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது.

பெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால் விஷால், விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள்.

“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை.

எங்களுக்கே தண்ணீர் இல்லை” என்று தங்களுடைய பேச்சில் குறிப்பிட்டார்கள்.

அதனை தொடந்து இவ்விழாவில் விஷால் பேசும் போது…

“உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு. என்றுகூறி போக்குவரத்து நெரிசலால் இங்கு வருவதற்கு காலதாமதமாகிவிட்டது.

கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும், தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாக பெருமையடைகிறேன்.

தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை.

அதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் அனைவரும் இந்தியாவில் இருக்கிறோம். எங்களுடைய உரிமையைக் கேட்கிறோம், அதை தவறு என்று எவராலும் சொல்ல முடியாது.

அதே வேளையில், கர்நாடகாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது உங்களுடைய கடமை. அதேபோல் தமிழகத்திலும் கர்நாடக மக்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமை. மொத்தத்தில் அனைவருமே இந்தியர்கள். வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது.

இந்தியா என்று வரும் போது அனைவருமே ஒன்று தான். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.

ஏன் தமிழர்கள் என ஒதுக்கி, தண்ணீர் தர மாட்டோம் என்கிறீர்கள். கர்நாடகாவுக்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. எங்களுக்கும் உரிமையிருப்பதால் கேட்கிறோம். தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.

கர்நாடகாவிலிருந்து எந்தவொரு தயாரிப்பாளரும் தமிழகத்துக்கு வந்து படம் தயாரித்தால், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக செய்து தர தயாராக இருக்கிறோம்” என்று பேசினார் விஷால்.

இதுவரை தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற எவரும் இது மாதிரி பேசியதில்லை. விஷாலின் வெளிப்படையான பேச்சால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

நிகழச்சியை முடித்தபின் புனித்ராஜ்குமார் அவருடைய வீட்டிற்கு சென்று மறைந்த அவருடைய தாயார் படத்திற்கு விஷால் மலர் துவி மரியாதை செலுத்தினார்.

Vishal speech in Bangaluru at Raghuveera movie audio launch

காலா ஹிந்தி பதிப்பில் மட்டும் என்ன ஸ்பெஷல்.?

காலா ஹிந்தி பதிப்பில் மட்டும் என்ன ஸ்பெஷல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Kaala hindi version some new shots will be taken separatelyசூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இரண்டாம் கட்ட காலா பட சூட்டிங்கை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு, பின்னர் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வருவதே நாம் அறிந்ததே,

இந்நிலையில் இதன் இந்தி பதிப்பில் மட்டும் அங்குள்ள ரசிகர்களை கவர்வதற்காக சில மாற்றங்களை செய்து உருவாக்கவிருக்கிறார்களாம்.

மேலும் ஹிந்தி பதிப்பில் ரஜினியே சொந்த குரலில் டப்பிங் பேச இருக்கிறாராம்.

பா. ரஞ்சித் இயக்கிவரும் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

In Kaala hindi version some new shots will be taken separately

‘காலா பாஸ்ட்; 2.0 லேட்.?’ ரஜினி ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன.?

‘காலா பாஸ்ட்; 2.0 லேட்.?’ ரஜினி ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala robot rajiniஒரே நேரத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மற்றொரு பக்கம் ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மேலும் தாமதம் ஆவதால், இப்படம் 2018 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், ‘காலா’ திரைப்படம் 2018 ஜனவரி 15 பொங்கல் தினத்தில் வெளியாகும் எனவும் செய்திகள் வெளியானது.

ஆனால், இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

மேலும், ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மது இது போன்ற வதந்திகளை மறுத்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் கேட்டபோது அவர்களோ…

இரண்டுமே எங்கள் தலைவரின் படம்தான். இரண்டு வெவ்வெறு கதைக்களத்தை கொண்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வரட்டும். இரண்டும் மாபெரும் வெற்றி பெறும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

இரண்டும் 2018ஆம் ஆண்டில் வெளியாவதால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்” என்கின்றனர்.

Rajinikanths 2point0 and Kaala movie release date rumours

சென்னை-28 ஸ்டைலில் விஜய் மில்டனின் அடுத்த படம்

சென்னை-28 ஸ்டைலில் விஜய் மில்டனின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay milton is next film will be based on Basket Ballதமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை 28, வல்லினம், ஈட்டி ஆகிய படங்களை அதற்கு உதாரணமாக சொல்லாம்.

இந்நிலையில் பாஸ்கட்பால் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் விஜய் மில்டன்.

ஜூலை 10ஆம் தேதி இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒளிப்பதிவாளரான விஜய்மில்டன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ‘கோலிசோடா’, 10 எண்றதுக்குள்ள, கடுகு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் எனபது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Director Vijay milton is next film will be based on Basket Ball

சூர்யா பிறந்த நாளில் மீண்டு(ம்) வரும் அஞ்சான்; ஆர் யூ ரெடி.?

சூர்யா பிறந்த நாளில் மீண்டு(ம்) வரும் அஞ்சான்; ஆர் யூ ரெடி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjaan suriyaசூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது லிங்குசாமியின் பன்ச் டயலாக் எனலாம்.

ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லிங்குசாமி, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கியிருக்கிறேன்” என்று சொன்னார்.

ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு அவர் சொன்னதை போல இல்லை என்பதால் அனைவரும் படத்தை ஓவராக கலாய்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் சூர்யாவின் பிறந்த நாளில் ஜூலை 23 அன்று ரிலீஸ் செய்கின்றனர்.

ஆனால், இது தமிழ்நாட்டில் அல்ல; கேரளாவில் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows