3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

கடந்த 2020ல்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்கள்…

(1). வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020

(2). விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020

(3). அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 19 நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவரது உரையில்…

நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.

ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

என பேசினார் பிரதமர் மோடி.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறன்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்”.

இவ்வாறு கார்த்தி பதிவிட்டுள்ளார்.

Actor Karthi thanked prime minister modi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *