தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் இரு வேடங்களில் நடித்த ‘வாலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா.
இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘குஷி’ என்ற படத்தை இயக்கி அந்தப் படத்தையும் வெற்றி படமாக்கி காட்டினார்.
இதன் பின்னர் நியூ’ படத்தின் மூலம் அவரே கதையின் நாயகனாக அறிமுகமானார்.
இதன் பின்னர் சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். அந்த படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில் திடீரென இசை படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார்.
இதன் பின்னர் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை ஒரு குணச்சித்திர நடிகராகவும் காட்டினார்.
மெர்சல், டான், மாநாடு உள்ளிட்ட படங்களை வில்லனாக நடித்தும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார்.
அண்மையில் இவர் நாயகனாக நடித்த கடமையை செய் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்த வருகிறார்.
இந்த நிலையில் 52 வயதாகும் எஸ் ஜே சூர்யாவிற்கு அவரது குடும்பத்தார் பெண் பார்த்து வருவதாக தெரியவந்துள்ளது.
தற்போது பெண் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் அது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Actor and director SJ Surya’s wedding update