நாகேஷ் திரையரங்கம் படத்தை திரையிட நஷ்டஈடு வேண்டும்; ஆனந்த்பாபு வழக்கு

நாகேஷ் திரையரங்கம் படத்தை திரையிட நஷ்டஈடு வேண்டும்; ஆனந்த்பாபு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Anand Babu filed a case against Nagesh Thiraiyarangam releaseநாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிடத் தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார்.

சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார்.

மேலும் ஆனந்த்பாபு இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது.

ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Actor Anand Babu filed a case against Nagesh Thiraiyarangam release

nagesh thiraiarangam rajini

‘சினிமாவுக்கு குரல் கொடுக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார்?’ – டிஆர்

‘சினிமாவுக்கு குரல் கொடுக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார்?’ – டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini t rajendarமத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி இந்தியா முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசின் உள்ளாட்சி வரி விதிப்பால், தமிழக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனவே வரும் ஜீலை 3ஆம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என திரையுலகினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து டி. ராஜேந்தர் கூறியுள்ளதாவது…

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரையுலகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் யார் யாரோ எவ்வளவோ துறையில் ஆராய்ச்சி செய்து பிஎச்டி பட்டம் வாங்கியிருப்பார்கள்.
ஆனால் மக்கள் தலையில் எப்படி வரி விதிப்பது என்று ஆராய்ச்சி செய்து பிரதமர்  மோடி பிஎச்டி வாங்கி விட்டார். இந்த ஜி.எஸ்.டி வரி மக்களைப் பாதிக்கும். சினிமாவைச் சீரழிக்கும்.
மத்திய அரசே வடக்கை வாழ வைக்கவும் தெற்கைத் தீர்த்துக் கட்டவும் நினைக்காதே. சினிமாவுக்கு வரிவிதித்து பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்காதே.
தென்னகத்தை நசுக்காதே. திரை உலகத்தைப் பொசுக்காதே. நூறு ரூபாய் தாண்டினால் மத்திய அரசு 28 சதவிகிதம் வரி விதிக்குமாம் , மாநில அரசு கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிக்குமாம். இதர வரிகள் சேர்த்தால் 64 சதவிகிதம் அரசுக்கே கட்டிவிட்டால் மீதி இருப்பது என்ன?
இந்தக் கொடுமையை எதிர்த்து திரையுலகம் தாமதமாகவே குரல் கொடுப்பது ஏன் ?
ஆனால் நான்  முன்னாலேயே பேரரசு நூல் வெளியீட்டு விழாவில் இதை எதிர்த்துப் பேசினேன் .
துணிவாக முதலில் கமல் குரல் கொடுத்தார். அவருக்கும் எனக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் அவரது துணிவைப் பாராட்டுகிறேன்.
ஆனால் ரஜினி மெளனம் சாதிப்பது ஏன்? தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலிருந்த டி.சிவா சொன்னார். ரஜினி மோடிக்கு நெருக்கம் ஏதாவது செய்து விடுவார் என்று .
ஆனால் ரஜினி எதுவுமே செய்யவில்லை. வாயே திறக்கவில்லை. தன்னை வாழவைத்த தாய் சினிமா என்கிறார். தன்னைப் பெற்று வாழவைத்த சினிமாவையே காப்பாற்ற முன்வராத ரஜினியா தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்? ” இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

Why Rajini not rising his voice on GST issue on Cinema says TRajendar

மெர்சல் படத்தில் விஜய்யின் 3வது லுக் வெளியானதா?

மெர்சல் படத்தில் விஜய்யின் 3வது லுக் வெளியானதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayவிஜய் நடித்து வரும் மெர்சல் படத்தை அட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜீன் 22ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் 3 வேடம் ஏற்பதால், இன்னொரு லுக்கின் போஸ்டரும் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு டிசைனில் இதுதான் விஜய்யின் 3வது லுக் என ஒன்று வெளியானது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது….

3வது லுக் என்ற பெயரில் இண்டர்நெட்டில் வரும் ஸ்டில் உண்மையல்ல. நம்பாதீர்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Sri Thenandal Films‏Verified account @ThenandalFilms
We would like to clarify that the image claimed to be the third look of #Mersal circulating in the internet is fake.

Mersal movie Third look news updates

ரஜினியின் கையில் உள்ள டாட்டூ எதை குறிக்கிறது?

ரஜினியின் கையில் உள்ள டாட்டூ எதை குறிக்கிறது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth-sports-a-tattoo-in-kaalaரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், ஹீயுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினி ஒரு டானாக நடிப்பதை பார்த்தோம்.

இப்படத்திற்காக ரஜினியின் கையில் எஸ் (S) போன்ற ஓர் எழுத்து கொண்ட டாட்டூ ஒன்று வரையப்பட்டுள்ளதாம்.

இது படத்தில் அவரது மனைவியை அல்லது குழந்தையை குறிக்கிறதா? இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Did You Notice Tattoo of the Rajinikanth

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் தொகுப்பாளினி டிடி

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் தொகுப்பாளினி டிடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and DDசின்னத்திரையில் ஜொலிக்கும் போதே சினிமாவிலும் நடித்து வந்தார் திவ்யதர்ஷினி என்ற டிடி.

ஆனால் டிவியே இவருக்கு பெரிதும் கைகொடுக்க, அங்கேயே பாப்புலரானார்.

இதனிடையில் தனுஷ் தயாரித்து நடித்து இயக்கிய பவர் பாண்டி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார்.
இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் விக்ரமுடன் ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்த கேரக்டர் இவருக்கு பெயர் வாங்கித் தரும் என கூறப்படுகிறது.

டிஜிட்டல் குற்றங்களை அலசும் விஷாலின் ‘இரும்புத்திரை’

டிஜிட்டல் குற்றங்களை அலசும் விஷாலின் ‘இரும்புத்திரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumbu thirai movie stillsஅறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கும் ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் மற்றும் சமந்தா இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முழுக்க முழுக்க டிஜிட்டல் குற்றங்களைப் பின்னணியாக கொண்டு உருவாக்கி வருகிறாராம் இயக்குனர்.

சைபர் குற்றங்கள் எனப்படும் டிஜிட்டல் குற்றங்களான ஏ.டி.எம் மெஷின் கொள்ளை மற்றும் மோசடி உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இதன் கதைக்களத்தை அமைத்து இருக்கிறார்.

இப்படத்தில் நெகட்டிவ்வான கேரக்டரில் அர்ஜீன் நடித்து வருகிறார்.

இக்கேரக்டரில் முதலில் ஆர்யா நடிப்பதாக கூறப்பட்டது.

இக்கதை மிகவும் பிடித்துவிட்டதால் தயாரிப்பு பொறுப்பையும் விஷாலே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows