மோகன்லால்-சூர்யா கூட்டணியில் பிரபல தெலுங்கு நடிகர்

மோகன்லால்-சூர்யா கூட்டணியில் பிரபல தெலுங்கு நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கேவி. ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கிறது..

சில தினங்களுக்கு முன் இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது மற்றொரு கேரக்டரில் அல்லு சிரிஷ் என்ற பிரபல தெலுங்கு நடிக்கவுள்ளாராம்.

இத்தகவலை இயக்குனர் கே.வி. ஆனந்த தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Actor Allu Sirish teams up with Mohanlal in Suriya 37

mohanlal suriya allu sirish

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence celebrated 1st Anniversary of his mothers templeராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.

கோயில் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப் படுத்தவும் உள்ளார்.

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தனது ஆஸ்ரமத்தில் படிக்கும் குழந்தைகள் மத்தியில் பூஜை நடத்தப்படுகிறது.

அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.

அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

Raghava Lawrence celebrated 1st Anniversary of his mothers temple

Julias Eyes படத்தை 2 மொழிகளில் ரீமேக் செய்யும் கமல் பட ஒளிப்பதிவாளர்

Julias Eyes படத்தை 2 மொழிகளில் ரீமேக் செய்யும் கமல் பட ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Spanish language movie Julias Eyes remake in Tamil and TeluguJULIA’S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய JULIA’S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றிபெற்றது.

ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது.

ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார்.

தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.
கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்தரிவாடு, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும் தமிழில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த கபீர் லால்.
இத்திரைபடத்தை பற்றி கபீர் லால் பேசும்போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இத்திரைபடம். இதை இந்தியாவிற்கும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்ய போகிறேன்.
பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
விரைவில் Julia’s Eyes திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் தமிழிலும் தெலுங்கிலும் ஆரம்பித்துவிடும் எனவும் தெரிவித்தார்.

Spanish language movie Julias Eyes remake in Tamil and Telugu

இரும்புத்திரை ரிலீஸான முதல் நாளே வெற்றிவிழா கொண்டாடிய விஷால்

இரும்புத்திரை ரிலீஸான முதல் நாளே வெற்றிவிழா கொண்டாடிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal celebrated Irumbu Thirai success party on 1st day of its releaseவிஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத் திரை படத்தை மித்ரன் இயக்கியுள்ளார்.

பட தடைகளை தாண்டி இப்படம் நீண்ண்ண்ண்ணட  நாட்களுக்கு பிறகு கடந்த மே 11ஆம் தேதி (நேற்று) வெளியானது.

இப்படத்தில் ஆதார் கார்டூ, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில திட்டங்களுக்கு முறைமுக தாக்குதல் இருப்பதால் பா.ஜ.க-வினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் விஷால் வீட்டை முற்றுகையிடப்போவதாகவும் அறிவித்தனர் இதையொட்டி விஷால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை நேற்றே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Vishal celebrated Irumbu Thirai success party on 1st day of its release

மே 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம விருந்து

மே 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Productions 1st movie 1st look poster on 15th Mayகுறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் சிவகார்த்திகேயன்.

நடிகர், பாடகர் என்ற வலம் வந்த இவர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியாகவும் வளர்ந்துள்ளார்.

இதுவரை 12 படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ராஜேஷ் இயக்கும் 13வது படத்தில் நடித்து வருகிறார்.

மற்றொரு புறம் தயாரிப்பாளராகி படத்தையும் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மே 15ஆம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan Productions 1st movie 1st look poster on 15th May

தனி மெஜாரிட்டியில் ரஜினி; உளவுத்துறை ரிப்போர்ட்டால் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

தனி மெஜாரிட்டியில் ரஜினி; உளவுத்துறை ரிப்போர்ட்டால் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Survey Report Rajinis political party will win in 150 constituency in TN electionஅரசியல் வருவது உறுதி. ஆனால், கட்சியை இப்போது அறிவிக்க மாட்டேன் என ஆணித்தரமாக சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.

அண்மையில் நடந்த காலா இசை வெளியீட்டில் கூட அரசியல் அறிவிப்பு இருக்கும் என பலர் எதிர்பார்த்தனர்.

ஆனால், நல்ல நேரம் வரும் போது சொல்வேன் என பேசினார்.

இது ஒரு புறமிருந்தாலும், ரஜினியின் அரசியல் பல பேருக்கு அடிவயிற்றை கலக்கி வருகிறதாம்.

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு ரஜினி சென்றிருந்தார்.

அப்போது 234 சட்டசபை தொகுதிகளிலும், ரஜினிக்கு செல்வாக்கு எப்படி உள்ளது? என்ற, ‘சர்வே’ உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டதாம்.

அதில், 150 தொகுதிகளில், ரஜினிக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, தலித் சமுதாய ஓட்டுகள் 15%; மொழி வாரியாக உள்ள சிறுபான்மையினர் ஓட்டுக்கள் 8%; மற்ற சமுதாய ஓட்டுகள் 15% அவருக்கு கிடைக்குமாம்.

அதாவது, 35 முதல், 40 சதவீத ஓட்டுக்கள், ரஜினி கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது அந்த சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசியலை எதிர்க்கும் அரசியல்வாதிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்களாம்.

முக்கியமாக இந்த சர்வே ஆளுங்கட்சிக்கு இது பேரதிர்ச்சியாம்.

எனவே ரஜினியை விமர்சிக்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

அதன்படிதான் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‘ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்’ என, கிண்டலாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

அவரின் அந்த பேச்சுக்கு ஒரு சமுதாயத்தினரின் எதிர்ப்பு தெரிவிக்க அதன் பின்னர் அவர் மனோரமா ஆச்சி பற்றிதான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்.

இனி இதுபோன்ற கடும் விமர்சனங்களை ரஜினி சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

Survey Report Rajinis political party will win in 150 constituency in TN election

More Articles
Follows