தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.
போலியான டிக்கெட் அதிகமாக விற்கப்பட்டதால் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ‘லியோ’ படம் உலக அளவில் 400+ கோடிக்கு மேல் வசூலித்துள்ளதால் இதன் வெற்றி விழாவை கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் முடிவு செய்துள்ளார்.
அதன்படி நாளை நவம்பர் 1ம் தேதி மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா நடைபெற உள்ளது.
ஏற்கனவே பல சர்ச்சைகளால் லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தற்போது கடும் நிபந்தனைகளை படக்குழுவும் காவல் துறையும் விதித்துள்ளது.
அதன்படி மொத்தம் 5000 + 500 நபர்களுக்கு மட்டுமே விழா அரங்கில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் என்ட்ரீ பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் கேட் எண் 6 வழியாக உள்ளே வர வேண்டும். 4 மணிக்கு மேல் தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் ரசிகர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. அரங்கிற்குள்ளே வண்டிகள் நிறுத்த போதுமான இட வசதி உள்ளது. வண்டிகளை வெளியே நிறுத்தினால் அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் என்ட்ரி பாஸ் உடன் ஒவ்வொரு ரசிகரும் ஆதார் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பியை எடுத்து வர வேண்டும் என ரசிகர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் போதுமான பாதுகாப்புகளை தயாரிப்பு நிறுவனம் செய்திருக்க வேண்டும் என பல்வேறு அறிக்கைகளை காவல்துறையும் விதித்துள்ளது.
எத்தனையோ இசை & சினிமா விழாக்கள் தமிழகத்திலும் இந்தியாவில் நடைபெற்று உள்ளது. ஆனால் ரசிகர்கள் ஆதார் கார்டுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Aadhar card must for Leo success event entry