தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன்.
மோகன்லாலை வைத்து மட்டுமே 20 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் இவர்.
2007ல் காஞ்சிவரம் என்ற படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.
அண்மையில் இவர் இயக்கிய படம் சில சமயங்களில்.
இதில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண் உள்ளிட்ட பலரும் நடிக்க, இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.
சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபுதேவா ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோ இவற்றுடன் இணைந்து ஐசரி கணேசன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கிய இந்த படம் முதன் முதலாக தியேட்டரில் வெளியாகாமல் ஆன்லைனில் வெளியானது.
இது வணிக நோக்கம் இல்லாமல் விருதுக்காக அவர் இயக்கிய படம்.
தனக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவனின் தவிப்புதான் இப்படத்தின் கதை.
அந்த கேரக்டரில்தான் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் சிறப்பு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது.
முதலில் தியேட்டரில் வெளியிட நினைத்திருந்த இயக்குனர் தற்போது சூழ்நிலை சாத்தியமில்லை என்பதால் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை காண கட்டணம் செலுத்தி டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம்.
இதற்கு முன்பே ஒரு சில தமிழ் படங்கள் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A story about HIV Aids Sila Samayangalil movie released on Netflix