‘சில சமயங்களில்’ படம் உருவாக என்ன காரணம்? – பிரியதர்ஷன் பேச்சு

priyadharshanபிரபு தேவா ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கும் படம் ‘சில சமயங்களில்’

இதில் பிரகாஷ்ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன், வருண், சண்முகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வெறும் 23 நாட்களில் படமாக்கியுள்ளார் பிரியதர்ஷன்.

இளையராஜா பிண்ணனி இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவை சமீர் தாஹிர் செய்ய, கலையை சாபு சிரில் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரியதர்ஷன் பேசியதாவது….

“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது.

மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது.

‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’ என்று கூறினார் இயக்குனர் பிரியதர்ஷன்.

Overall Rating : Not available

Related News

Latest Post