17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாராம் வைரமுத்து..! பிரபல பாடகி அதிர்ச்சி பேட்டி

17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தாராம் வைரமுத்து..! பிரபல பாடகி அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான வலம்வபவர் சின்மயி.

சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.

கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர்.

அதன்பிறகு, சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.

சில தினங்களுக்கு முன்னர் கூட பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்துவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது குறித்து புவனா சேஷன் அளித்துள்ள பேட்டியில், “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என்று பேசினார்.

17 women have made allegations against vairamuthu said bhuvana shesan

‘போர் தொழில்’ போன்ற அருமையான படங்களில் நடிக்கனும்.; சரத்குமாருக்கு K.T.குஞ்சுமோன் பாராட்டு

‘போர் தொழில்’ போன்ற அருமையான படங்களில் நடிக்கனும்.; சரத்குமாருக்கு K.T.குஞ்சுமோன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் இந்த வாரம் நேற்று (ஜூன்-9) வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’. படம் பார்த்த அனைவருமே படம் குறித்து பாசிடிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்..

குறிப்பாக சரத்குமாரின் நடிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

இந்த நிலையில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதற்கு பெயர்பெற்ற மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்
‘போர் தொழில்’ படத்தில் சரத்குமாரின் நடிப்பு ரொம்பவே யதார்த்தமாக இருந்தது என பாராட்டியுள்ளார்.

“இந்தியாவிலேயே யதார்த்தமாக நடிக்கும் சில நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். அவர் தொடர்ந்து இதுபோன்ற அருமையான படங்களில் நடிக்கவேண்டும் என வேளாங்கண்ணி அன்னையை பிராத்திக்கிறேன்” என பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சரத்குமாருக்கு தெரிவித்துள்ளார் K.T.குஞ்சுமோன்.

நடிகர் சரத்குமார் தமிழ்சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரிடம் இருந்த திறமையைக் கண்டு அப்போதே அவரை ஊக்குவித்தவர் தான் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அவரது தயாரிப்பில் வெளியான ‘வசந்த கால பறவை’, ‘சூரியன்’ ஆகிய வெற்றி படங்கள் குறுகிய காலத்தில் சரத்குமாரை தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

KT Kunjumon praises performance of Sarathkumar in Por Thozhil movie

‘லியோ’ படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

‘லியோ’ படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நான்கு நாட்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் டென்சில் ஸ்மித் பாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘டெனட்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்சில் ஸ்மித்

hollywood actor Denzil smith acting in vijay’s Leo

நடிகர் வருண் தேஜ்- நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த புகைப்படம் டிரெண்டிங்

நடிகர் வருண் தேஜ்- நடிகை லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த புகைப்படம் டிரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் வருண் தேஜ்.

இவர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் ஆவார்.

தமிழில் சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷனுடன் ‘மாயவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி.

லாவண்யா திரிபாதியும் தெலுங்கில் இளம் நடிகரான வருண் தேஜூம் ‘மிஸ்டர்’, ‘அந்தாரிக்சம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று (09-06-2023) ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.

இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Varun Tej and Lavanya Tripathi are engage photos trending

JUST IN ‘தண்டட்டி’ படத்திற்கு தடை கோரி ‘அண்டாவ காணோம்’ பட தயாரிப்பாளர் மனு

JUST IN ‘தண்டட்டி’ படத்திற்கு தடை கோரி ‘அண்டாவ காணோம்’ பட தயாரிப்பாளர் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’.

சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக லக்ஷ்மன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த நிலையில் விரைவில் ரிலீசாகவுள்ள ‘தண்டட்டி’ பட ரிலீஸுக்கு தடை விதிக்க கோரி ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரின் கடிதத்தில்… 2017 ஆம் ஆண்டில் அண்டாவ காணோம் என்ற படத்தை தயாரித்திருந்தேன். சில காரணங்கள் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது அந்தப் படத்தை வெளியிட முயற்சித்து வருகிறேன்.

இந்த நிலையில் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘தண்டட்டி’ படத்தின் கதையும் எங்களின் அண்டாவை காணும் படத்தின் கதையும் ஒரே போல இருப்பதாக அறிந்தேன்.

எனவே ‘தண்டட்டி’ படத்தின் ரிலீஸ்க்கு தடை விதிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Producer JSK letter to Producer Council to ban release of Thandatti

பிரபுதேவாவின் 2வது மனைவிக்கு பெண் குழந்தை.; மகிழ்ச்சியில் நடனமாடும் குடும்பம்

பிரபுதேவாவின் 2வது மனைவிக்கு பெண் குழந்தை.; மகிழ்ச்சியில் நடனமாடும் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் என இந்திய சினிமாவை கலக்கி வருபவர் பிரபுதேவா. தமிழில் விஜய்.. ஹிந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவரின் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

இவர் 1995 ஆம் ஆண்டில் தன்னுடைய குழுவில் நடனமாடிக் கொண்டிருந்த ரமலத் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் நயன்தாராவுடன் பிரபுதேவாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. எனவே நயன்தாராவை திருமணம் செய்யும் கொள்ளும் நோக்கத்தில் தன் மனைவி ரமலத்தை விவகாரத்து செய்தார் பிரபுதேவா. ஆனால் நயன்தாராவுடன் திருமணம் நடைபெறவில்லை.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் மும்பையில் தங்கியிருந்தார். அப்போது சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் நெருக்கம் ஏற்ப்பட்டது.

பின்னர் பிரபுதேவா – ஹிமானி சிங் இருவரும் ரகசிய முறையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்த நிலையில் 3 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா – ஹிமானி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனை முன்னிட்டு தான் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்ததாக கூறப்படுகிறது.

Actor Prabudeva became father of girl baby

கூடுதல் தகவல்…

சுந்தரம் டான்ஸ் மாஸ்டருக்கு ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் என மூன்று பேரும் மகன்களே.

தந்தையை போல பிரபுதேவாவுக்கு பிறந்த மூன்று பேரும் மகன்களே.

அதுபோல.. பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் மற்றும் தம்பி நாகேந்திர பிரசாத்துக்கும் பிறந்தது ஆண் வாரிசுகள்தான்.

தற்போது இந்த குடும்பத்தில் முதன்முறையாக ஒரு பெண் பிறந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

More Articles
Follows