100% காதல் செய்ய லண்டன் பறக்கும் ஜி.வி.பிரகாஷ்-லாவண்யா

100% காதல் செய்ய லண்டன் பறக்கும் ஜி.வி.பிரகாஷ்-லாவண்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 percent Kadhal first look releasedநாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘100% லவ்’.

இதன் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் லாவண்யா திரிபாதி நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘100% காதல்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

எம்.எம்.சந்திரமௌலி இயக்கும் இதன் சூட்டிங்கை 10% மட்டும் இந்தியாவிலும், மீதமுள்ள 90% காட்சிகளை லண்டனில் படமாக்கவிருக்கிறார்களாம்.

எனவே விரைவில் லண்டன் பறக்க உள்ளது படக்குழு.

படத்தின் ஹீரோவே இசையமைக்கும் இப்படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை டட்லி கவனிக்க, கலை இயக்கத்தை தோட்ட தரணி கவனிக்கிறார்.

100 percent Kadhal first look released

சேரியில தங்கி பாருங்க கமல் அப்போ தெரியும்… திருமாவளவன்

சேரியில தங்கி பாருங்க கமல் அப்போ தெரியும்… திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Kamalhassan stays in slum areas then he will know says Thirumavalavanகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை தமிழகத்தில் எழுப்பியுள்ளது.

இதில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் ஓவியாவைப் பார்த்து சேரி பிஹேவியர் (சேரியில் வசிப்பவர்களின் வழக்கம்) என திட்டினார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது…

சேரி பகுதிகளில் கமலும், பிக் பாஸ் போட்டியாளர்களும் ஒரு நாள் தங்கி பார்த்தால் அவர்களின் நற்பண்புகள் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

If Kamalhassan stays in slum areas then he will know says Thirumavalavan

சிவகார்த்திகேயன் பைக்கில் ஒட்டப்பட்ட பிரபலத்தின் ஸ்டிக்கர்

சிவகார்த்திகேயன் பைக்கில் ஒட்டப்பட்ட பிரபலத்தின் ஸ்டிக்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran stillsமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், ஸ்நேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில், தன் சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசி வருகிறாராம்.

இப்படத்தின் ஸ்டில்கள் படக்குழுவினரால் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சிவகார்த்திகேயன் ஒரு குப்பத்து மக்களுடன் அமர்ந்துள்ளது போல உள்ளது.

மேலும் மற்றொரு படத்தில் நயன்தாராவை வண்டியில் வைத்து அழைத்து செல்வது போல் உள்ளது.
அந்த பைக்கில் காசி குப்பம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் கூடவே, பிரகாஷ்ராஜின் போட்டோ ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.

சூர்யா பிறந்தநாளில் தெரியவரும் சர்ப்ரைஸ் இதுதானா..?

சூர்யா பிறந்தநாளில் தெரியவரும் சர்ப்ரைஸ் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaநடிகர் சூர்யா தன் பிறந்தநாளை வருகிற ஜீலை 23ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார்.

அன்றைய தினத்தில் அவர் நடிப்பில் உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

மேலும் மற்றொரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்றது தயாரிப்பு தரப்பு.

அது சூர்யா அடுத்து நடிக்கவுள்ள இயக்குனர் செல்வராகவனின் படத்தின் தலைப்பாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இன்னும் ஒரு வாரம்தானே பாஸ். வெயிட் பண்ணி பார்த்துடுவோம்.

சிறந்த வில்லன் பிரகாஷ்ராஜ்; நான் இல்லையா.? – வெங்கடேஷ் வருத்தம்

சிறந்த வில்லன் பிரகாஷ்ராஜ்; நான் இல்லையா.? – வெங்கடேஷ் வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Venkateshகடந்த 2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்காக விருதை தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும், திறமையான கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இயக்குனர் சுசீந்திரனும், தன் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என தன் ஆதங்கத்தை ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கடேஷ் அவர்களும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2009-ல் சிறந்த வில்லன் ‘வில்லு’ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ்க்கு கிடைத்துள்ளது.

அப்படியென்றால், அங்காடித் தெருவில் நான் ஏற்ற கதாபாத்திரம் வில்லன் இல்லை குணச்சித்திரம் என்பது தெளிவாகியது எனக்கு..! உங்களுக்கு நண்பர்களே…? என்று தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ‘அங்காடித் தெரு’ படத்தில் நடித்த எனக்கு சிறந்த குணசித்திர விருதாவது கொடுத்திருக்கனும்.

அதே படத்தில் நடித்த மகேஷுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதாவது கிடைத்திருக்கனும்” என இது தொடர்பான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கமல்; அவனெல்லாம் ஒரு ஆளா…? அமைச்சர் அன்பழகன் ஆவேசம்

கமல்; அவனெல்லாம் ஒரு ஆளா…? அமைச்சர் அன்பழகன் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TamilNadu Minister Anbazhagan angry speech about Kamalhassanகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‘தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் அதிகளவில் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கமலின் இந்தக் கருத்துக்கு, தமிழக அமைச்சர் ஜெயக்குமார்… ”பிக்பாஸை பிரபலப்படுத்த தமிழக அரசின்மீது சேற்றை வாரி வீசுகிறார் கமல்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், மற்றொரு அமைச்சரான அன்பழகன் இதுகுறித்து கூறியதாவது…

”கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் ஆளே கிடையாது” என்று கமலை ஒருமையில் விமர்சித்தார்.

இதற்கு, கமல் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

TamilNadu Minister Anbazhagan angry speech about Kamalhassan

More Articles
Follows