சித்தார்த்-ஜிவி.பிரகாஷ்-சசி இணையும் படத்தலைப்பு

சித்தார்த்-ஜிவி.பிரகாஷ்-சசி இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siddharth GV Prakash Sasiபாலா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் மற்றும் ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’ மற்றும் ‘100% காதல்’ ஆகிய படங்கள் ஜிவி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ளது.

இதனையடுத்து சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஜிவி.பிரகாஷ்.

இப்படத்திற்கு ‘ரெட்டை கொம்பு’ எனப் பெயரிட்டுள்ளனர்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வழக்கம்போல நாயகன் ஜிவிபி.யே இசையமைக்கிறார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக்கா மெர்சல்..?

அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக்கா மெர்சல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal aboorva sagothargalநேற்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனது.

இதன் மூலம் சில ரசிகர்களுக்கு இருந்த சில சந்தேகங்கள் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளது உறுதியாகிவிட்டது.

எனவே இதனை வைத்து கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்துடன் ஒப்பீட்டு வருகின்றனர்.

அதில் அப்பா கமல் மற்றும் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பார்கள். அப்பாவை கொன்ற கமலை சர்க்கஸில் உள்ள குள்ள கமல் பழிவாங்குவார்.

சர்க்கஸ் கமல்தான் இங்கே மேஜிக் மேன் விஜய் எனவும், மெக்கானிக் கமல்தான் இங்கே டாக்டர் விஜய் எனவும் கூறப்படுகிறது.

ஸ்ரீவித்யா கேரக்டரில் நித்யா மேனனும், ஆச்சி மனோரமா கேரக்டரில் கோவை சரளாவும் என்பது போல் சித்தரித்துள்ளனர்.

வில்லன் நாகேஷ் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யாவும் கௌதமி கேரக்டரில் காஜலும், ரூபிணி கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளதாக படங்களை ஒப்பிட்டு டிசைன் செய்துள்ளனர்.

அந்த கதையை இன்றைய சூழலுக்கு ஏற்ப அட்லி மாற்றியிருப்பதாகவும் இணையங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான விடை தெரிந்துவிடப் போகிறதுதானே..

விவேகம் வில்லனை மெர்சல் வில்லன் இப்படி கலாய்க்கலாமா..?

விவேகம் வில்லனை மெர்சல் வில்லன் இப்படி கலாய்க்கலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sj suryah and vivek oberoiஇயக்குனராக ஜொலித்த எஸ்ஜே. சூர்யா தற்போது நடிப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய்யின் மெர்சல் மற்றும் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

ஸ்பைடர் படம் செப்டம்பர் 27ஆம் தேதியும் மெர்சல் படம் அக்டோபரிலும் ரிலீஸ் ஆகிறது.

இப்படங்கள் குறித்த ஒரு பேட்டியில் எஸ்ஜே சூர்யா கூறியதாவது…

ஸ்பைடர் படத்தில் டார்க் வில்லன். ஆனால் மெர்சல் படத்தில் கிளாஸ் வில்லன் ரோல்.

மெர்சல் படத்தில் 3 விஜய்க்கும் நான்தான் வில்லன்.

விஜய்யுடன் எப்போதும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். நான் நன்றாக நடித்தால் அவரே நடிச்ச மாதிரி பாராட்டுவார் விஜய்.

இந்தப்படம் ஹீரோவுக்கு ஜால்ரா அடிக்கிற படமாக இருக்காது . எனவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

விவேகம் படத்தில் வில்லன் விவேக் ஓபராய் என்றாலும் அவர் அஜித்தின் புகழ் பாடிக் கொண்டே இருப்பார் என்பது இங்கே கவனித்தக்கது.

இப்போ டைட்டிலை படிங்க. புரியும்.

இணையத்தை மெர்சலாக்கிய டீசர்; 19 மணிநேரத்தில் ஒரு கோடியை தாண்டியது

இணையத்தை மெர்சலாக்கிய டீசர்; 19 மணிநேரத்தில் ஒரு கோடியை தாண்டியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal teaser recordமெர்சல் டீசர், மெர்சல் படங்கள், மெர்சல் செய்திகள், மெர்சல் விஜய் பன்ச், நீ பற்றவைத்த நெருப்போன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ பட டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

அதில் விஜய் பேசிய “நீ பற்றவைத்த நெருப்போன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்” என்ற பன்ச் டயலாக் தற்போது இணையத்தை பற்ற வைத்து வருகிறது.

மேலும் படத்தின் மேக்கிங் அருமையாக உள்ளதாக டீசரை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘மெர்சல்’ டீஸருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 90 விநாடிகள் – 25000, 3 நிமிடங்கள் – 50000, 7 நிமிடங்கள் – 75000, 10 நிமிடங்கள் – 1 லட்சம், 15 நிமிடங்கள் – 150000, 19 நிமிடங்கள் – 175000, 22 நிமிடங்கள் – 200000 என லைக்குகளை கடந்துள்ளது.

மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு லைக்குகளை குவித்த டீசர் என்ற பெருமையை ‘மெர்சல்’ பெற்றுள்ளது.

தற்போது டீசர் வெளியாகி 12 மணி நேரத்திலேயே ரியல் டைமில் 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று கடந்துள்ளது.

இதுவரை வேறு எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை என கூறப்படுகிறது.

மேலும், 685k பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சற்றுமுன் 19 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

லைசன்ஸ் இல்லாமல் குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய் மீது 3 வழக்கு

லைசன்ஸ் இல்லாமல் குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய் மீது 3 வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jaiஎங்கேயும் எப்போதும், சென்னை28, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்.

இவர் நண்பர்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார்.

மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார்.
அடையாறு பாலம் அருகே வந்தபோது இவரது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

விபத்து பற்றி பொதுமக்கள் வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஜெய் மீது காரை வேகமாக ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரது ஆடி காரையும் பறிமுதல் செய்து திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகர் ஜெய்யை போலீஸார் கைது செய்து சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.

மேலும் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலம் ரத்து செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

திரு. வி.க. பூங்கா பட பைனல் லுக் போஸ்டரை வெளியிட்டார் மாரியப்பன்

திரு. வி.க. பூங்கா பட பைனல் லுக் போஸ்டரை வெளியிட்டார் மாரியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thiru Vi Ka Poonga Final Poster Release (5)ஒரு படம் உருவாகும்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு வருவது இப்போது டிரெண்டாகி வருகிறது.

முதன்முறையாக ஒரு படத்தின் பைனல் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர்.

அதுபற்றிய செய்தி வருமாறு….

தி பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்.

அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.

எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம்.

அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்று கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார்கள். அம்மா இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. அவருக்கு இந்த தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை.

சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. பணம் இல்லாமல் விளையாட்டை தொடர முடியாமல் இருந்திருக்கிறது.

2012ல் பாஸ்போர்ட் கிடைக்காமல் ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு தவறியிருக்கிறது.

அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.

இவ்விழாவில் மாரியப்பனை படக்குழுவினர் தங்க சங்கிலி அணிவித்து கௌரவித்தனர்.

Padma Shri Mariyaappan launched Thiru Vi Ka Poonga movie Final Look Poster

Thiru Vi Ka Poonga Final Poster Release (1)

More Articles
Follows