குஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி

குஷி ஸ்டைலில் 100% காதல் இருக்கும்… – ஜிவி. பிரகாஷ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashதெலுங்கில் வெற்றிப் பெற்ற 100% லவ் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

தெலுங்கில் இப்படத்தை சுகுமார் இயக்க நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர்.

2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்நிலையில் தமிழில் இப்படத்தின் பூஜையுடன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

100% காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து இசையமைக்கிறார்.

இயக்குநர் சுகுமார் தயாரிக்க, எம்.எம். சந்திரமெளலி என்பவர் இயக்குகிறார்.

நாயகியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார்.

டட்லி ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தை அடுத்த 2018ல் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இப்படம் விஜய் நடித்த குஷி பட ஸ்டைலில் இளமை துள்ளலாக இருக்கும் என நாயகன் ஜிவி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் கவர்மெண்ட் ரேட்; நோ பார்க்கிங்; அம்மா வாட்டர்…- விஷால்

தியேட்டரில் கவர்மெண்ட் ரேட்; நோ பார்க்கிங்; அம்மா வாட்டர்…- விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Council President Vishal order 7 conditions to Theatre ownersமத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு முன்பு அமுல்படுத்தியது.

ஆனால் ஜிஎஸ்டி வரியுடன் தற்போது சினிமா டிக்கெட்டுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி 10% விதித்துள்ளது.

எனவே இந்த வரியை ரத்து செய்யக் கோரி, தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த வரியை நீக்கும்வரை புதிய படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனால் அடுத்த வாரம் தீபாவளி (அக். 18) தேதி அன்று படங்கள் வெளியாகுமா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்றுமுதல் (13 அக்டோபர், 2017) முதல் சில விதிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார்.

அவை…

  1. அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கப்படவேண்டும்
  2. கேண்டீனில் MRP விலைக்குதான் உணவு பொருட்களை விற்கவேண்டும்
  3. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
  4. தண்ணீர் கொண்டு வர பொது மக்களை அனுமதிக்கவேண்டும்
  5. கார், பைக் உள்ளிட்டவைகளுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
  6. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
  7. மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

என விஷால் அறிவித்துள்ளார்.

இந்த விதிமுறைகளை தியேட்டர்கள் அதிபர்கள் கடைப்பிடிப்பார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி..?

Producer Council President Vishal order 7 conditions to Theatre owners

 

சத்யா தயாரிக்கும் படத்தில் இணையும் சிநேகன்-ஓவியா

சத்யா தயாரிக்கும் படத்தில் இணையும் சிநேகன்-ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music sathyaகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றாலும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் ஓவியாதான்.

பெண்களில் இவர் என்றால், ஆண்களில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் கவிஞர் சிநேகன்தான்.

தற்போது பிக்பாஸ் அலை தமிழகத்தில் ஓய்ந்துவிட்டாலும், அதில் நன்றாகவே நடித்த நட்சத்திரங்களுக்கு சினிமாவில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓவியாவும் சினேகனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்தை இசையமைப்பாளர் சத்யா தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

படத்தின் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Oviya and Lyricist Snehan teamsup with Music director Sathya

கார்த்தியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குநர்?

கார்த்தியை இயக்கும் சிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குநர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan with remo directorவினோத் இயக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இப்படத்தை நவம்பரில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இதை தொடர்ந்து ரஜத் இயக்கத்தில் ரகுல் பிரித்திசிங் உடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி.

இந்நிலையில் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படமான ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Karthi teams up with Remo movie director Bakkiyaraj Kannan

அனிருத் பிறந்தநாளில் சூர்யா விருந்து; அஜித் போல் ஏமாற்றமாட்டாரே?

அனிருத் பிறந்தநாளில் சூர்யா விருந்து; அஜித் போல் ஏமாற்றமாட்டாரே?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tsk 2nd singleவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு என்ற 2வது சிங்கிள் பாடலை அனிருத்தின் பிறந்தநாள் அன்று அதாவது வருகிற அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

ஒரு முன்னணி நடிகரின் பட பாடலை அனிருத் பிறந்தநாள் அன்று வெளியிடுவது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாம்.

கடந்த 2015ஆம் ஆண்டு இதுபோல் அஜித்தின் வேதாளம் பட பாடல்கள் அனிருத்தின் பிறந்தநாள் (அக் 16) அன்று வெளியிடுவதாக அறிவித்து திடீரென அவர்களின் வியாழக்கிழமை சென்டிமெண்ட் படி (அக். 15) தேதி வெளியிட்டனர்.

அஜித்தை போல் அனிருத் ரசிகர்களை சூர்யா ஏமாற்றமாட்டார் என்றே தெரிகிறது.

ஏனென்றால் தானா சேர்ந்த கூட்டம் சென்டிமெண்ட் பார்க்காது என நம்பலாம்.

Thaana Serndha Kootam movie 2nd single release on Anirudh Birthday

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

http://tamil.cinecoffee.com/news/vedhalam-team-cheat-anirudh-on-his-birthday/

தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 10000; விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 10000; விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For first time in Producer council Vishal announces Diwali bonus as Rs 10000பண்டிகை என்றால் போனஸ் இல்லாமல் இருந்தால் எப்படி சமாளிப்பது என்பதே பலரின் கேள்வியாக இருக்கும்.

எனவே தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அரசும் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் போனஸ் தொகை கொடுப்பார்கள்.

இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் சங்கமும் தங்கள் உறுப்பினர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

இதை சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு பட்டாசும், இனிப்பும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் விஷால் தலைமையிலான அணி தொகையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அதற்கான விண்ணப்பங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

For first time in Producer council Vishal announces Diwali bonus as Rs 10000

More Articles
Follows