தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2003-இல் ரஜினி நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய படம் ‘சந்திரமுகி’.
பி வாசுகி இயக்கிய இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன் சார்பாக பிரபு தயாரிக்க வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பி வாசு தயாராகி வந்த நிலையில் இதில் நடிக்க மறுத்து விட்டார் ரஜினிகாந்த்.
எனவே தற்போது லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ படத்தை இயக்கி வருகிறார் பி வாசு.
இதில் முக்கிய வேடத்தில் ராதிகா & வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. கீரவாணி இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் இயக்கிய ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கணா என்பது குறிப்பிடத்தக்கது.