Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice – Run Away”

Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice – Run Away”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balajiஒரு பிரபல பொன்மொழி இருக்கிறது “நமது பெருங்கவலைகள் பலதும் நாம் அதிகமாக யோசிப்பதால் உண்டாவது” என்று. நமது தற்போதைய அச்சகரமான சூழ்நிலை இதை அப்பட்டமாய் நிரூபிக்கிறது. இணைய ரேடியோவில் Jiosaavn நிறுவனத்தின் RJ பாலாஜி தொகுத்து வழங்கும் “Mind voice நிகழ்ச்சியில் (Run away) “தெறித்து ஓடு” எனும் தலைப்பில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பற்றி கலப்பாக பேசியிருக்கிறார்.

இந்த கொரோனா வைரஸை பற்றியே எல்லோரும் பேசி வரும் நிலையில் அச்சமும் சூழ்ந்து வர, அதனை விட பெரும் பகடியாய் வெறொன்று மாறியுள்ளது. எல் கே ஜி படத்தில் ஒரு காட்சியில் “ஓடு வைரஸே” என வைரஸ்க்கு எதிராக போராடும் காட்சி வரும். நாஸ்டடார்மஸ் முன்கணிப்பு போல் அது தற்போது உண்மையாகியுள்ளது. சில இளைஞர்கள் பட்டாளம் “ஓடு கொரோனா ஓடு” என ஓங்கி சத்தம் போட்டு போராடி வரும் காமெடி நிகழ்ந்துள்ளது.

இதனை அப்படியே தன் நிகழ்ச்சியில் இணைத்து கலாய்த்துள்ளார் RJ பாலாஜி. இதில் உச்சபட்ச கலாய்ப்பாக இந்த கூட்டத்தில் ஒருவர் கடுமையாக தும்மினால் என்னவாகும் என்று கேட்டது பெரும் நகைச்சுவையாக அமைந்தது. மேலும் அவர் ‘கடந்த ஞாயிறு இரவுக்காட்சி நானும் பஞ்சுமிட்டாயும் சத்யம் திரையரங்கில் தப்பாட் ( Tappaad) படத்திற்கு போயிருந்தோம். சத்யம் திரையரங்கின் அடையாளம் மசாலா பொடி தூவிய பாப்கார்ன்.

ஆனால் அது தூவும்போது ஒருவருக்கு தும்மல் ஏற்பட, அங்கிருந்தவர் அவருக்கு கொரோனா இருக்கிறது என கலாட்டா செய்து விட பெரும் பிரச்சனையாகவும், கலகலப்பானாதகவும் ஆகிவிட்டது. நாம் பயப்படும்படி சூழ்நிலை ஒன்றும் கடினமானதாக இல்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்ததிகளை நம்பாமல் அதிகம் யோசிக்காமல் இருந்தாலே போதும்’ என்றார்.

நண்பர் அஜித் டிரெண்ட்.; தல ரசிகர்களையும் தன் வசப்படுத்திய தளபதி

நண்பர் அஜித் டிரெண்ட்.; தல ரசிகர்களையும் தன் வசப்படுத்திய தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithநேற்று மார்ச் 15 மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இதில் நடிகர் விஜய் பேசும்போது… தன் நண்பர் அஜித்தை போல கோட் சூட் உடையணிந்து வந்ததாக குறிப்பிட்டு பேசினார்.

இதனையடுத்து ‘நண்பர் அஜித்’ என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் & அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டாக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

பெரும்பாலும் விஜய் & அஜித் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போடாத நாட்களே இல்லை.. அதுவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி அடித்து கொள்வர்.

ஆனால் நேற்று முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆக…. நண்பர் அஜித் என்ற வார்த்தை மூலம் தல ரசிகர்களையும் தன் வசப்படுத்தி விட்டார் தளபதி.

சிம்பு-தனுஷ்-மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கணேஷ்.?

சிம்பு-தனுஷ்-மிஷ்கின் கூட்டணியை இணைக்கும் ஐசரி கணேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhansuhஎல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து வருகிறார் ஐசரி கே கணேஷ்.

இந்நிறுவனம் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

இந்தக்கதையை தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உதவி செய்வதற்காக விஷால் மற்றும் கார்த்தி இருவரும் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

அந்த படத்திற்கு வெள்ள ராஜா கருப்பு ராஜா என்று பெயரிட்டு இருந்தனர்.

பிரபு தேவா இத்திரைப்படத்தினை இயக்குவதாக இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பற்றி அவதூறு.; மன்னை சாதிக் கைது

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பற்றி அவதூறு.; மன்னை சாதிக் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mannai sathikமன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா.

பேஸ்புக், டிக் டக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர் இவர்.

இதன் காரணமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

களவாணி, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தவறாக சித்தரித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீஸ் சாதிக் பாஷாவை கைது செய்துள்ளனர்.

சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சியிலுள்ள மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Uriyadi vijayakumarமூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.
விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைகதை-வசனம் எழுதுகிறார்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின்
நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
உரியடி விஜயகுமார்
பசுபதி
மற்றும் பலர்

தயாரிப்பு: மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார்
கதை, இயக்கம்: போஸ் வெங்கட்
திரைகதை, வசனம்: பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு: இனியன் ஜே ஹாரிஸ்
படத்தொகுப்பு: ஜியான் ஸ்ரீகாந்த்
கலை: சிவசங்கர்
இசை: ஹரி சாய்
பாடல்கள்: விவேகா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் தமிழக அரசுக்கு லாரன்ஸ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrenceஅனைவருக்கும் வணக்கம்!
—————————————-
இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும்
“கொரோனா வைரஸ்” தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க,
இந்தியாவிலேயே
முதன்மை மாநிலமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை,
துரிதமாகவும்
மிகத் தீவிரமாகவும் எடுத்து,
“கொரோனா வைரஸை”
கட்டுக்கள் வைத்திடுவதற்காக
சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு “எடப்பாடி” பழனிச்சாமி சார் அவர்களுக்கும், , மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும்
மனப்பூர்வமான பாராட்டுக்கள்!

பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது,
எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ,
அதேபோல,
ஒரு விஷயத்தில்
அரசு சரியாக செயல்படுகிற போது
பாராட்ட வேண்டியதும் நமது கடமை!

தமிழக அரசை பாராட்டுகிற அதே சமையம்,
பொதுமக்களாகிய நாமும்
அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்!
உயிர் நலன் காப்போம்!
நன்றி!

அன்புடன்……
ராகவா லாரன்ஸ்.

More Articles
Follows