சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

சிம்பு-வடிவேலு கூட்டணியை மீண்டும் இணைக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu vadiveluஉதயநிதியின் ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார்.

அப்பட நாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார்.

இதனை அடுத்து சிம்பு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

சிம்புக்கு பெரிய மனசு சார்..;. ‘ஓ மை கடவுளே’ மூடில் அசோக் செல்வன்

தற்போது ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பு முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு-மிஷ்கின் கூட்டணி திரைப்படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஹரி இயக்கிய் ‘கோவில்’ படத்தில் சிம்பு-வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dirty Ajith Fans; சும்மாவே இருப்பீங்களா..? அஜித்துக்கும் மேனேஜருக்கும் கஸ்தூரி கேள்வி

Dirty Ajith Fans; சும்மாவே இருப்பீங்களா..? அஜித்துக்கும் மேனேஜருக்கும் கஸ்தூரி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri ajith fans fightஅரசியல் ரீதியாக ட்வீட்டுகளை போட்டு, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை கஸ்தூரி.

இந்த நிலையில், கஸ்தூரி குறித்து, அஜித் ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சிலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர்.

எனவே அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது ட்வீட்டில், அஜித் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க? உங்க ரசிகர்கள் இப்படி கேவலமா ஆபாசமா பேசுவதை கண்டிக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார்.

மேலும், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும், இதனை தடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விகடன் விருது

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விகடன் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

மேலும் சமூக சேவையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.

அகரம் ஃபவுண்டேசன் (Agaram Foundation) மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அகரம் ஃபவுண்டேசன் செயல்பட்டு வருகிறது.

சூர்யாவின் சேவைகளை பாராட்டி சிறந்த மனிதருக்கான விகடன் விருது வழங்கப்பட்டுள்ளது.

விகடன் விருது குறித்து சூர்யா கூறியிருப்பதாவது…

94 ஆண்டுகளாக சாமானியர்களின் குரலாக ஒலிக்கிறது விகடன்.

முதல் தலைமுறையினராக கல்வி வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் செய்துவரும் பணிகளுக்கு உறுதுணையாய், விகடன் விருது அளித்திருப்பது உற்சாகம் தருகிறது.

சமூக மாற்றத்திற்காக அகரமுடன் கைகோர்த்திருக்கும் ஒவ்வொரு கரங்களின் சார்பாக இந்த விருதைப் பெற்று மகிழ்கிறேன்.

விகடனுக்கும், தமிழ் மக்களின் அன்பிற்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

suriya vikatan award

காமெடி நடிகர் லோகேஷ் பாபுவை சந்தித்து நிதியுதவி அளித்த விஜய் சேதுபதி

காமெடி நடிகர் லோகேஷ் பாபுவை சந்தித்து நிதியுதவி அளித்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi adithya tv lokeshசின்னத்திரை & பெரிய திரை என கலக்கி வருபவர் நடிகர் லோகேஷ் பாபு.

ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இவர்.

காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி & சிம்பு.; இயக்குனர் இவரா.?

தற்போது இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனைக்கு சென்று இவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது பண உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING நாளை அரசியல் கட்சியை அறிவிக்க ரஜினிகாந்த் திட்டம்

BREAKING நாளை அரசியல் கட்சியை அறிவிக்க ரஜினிகாந்த் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி விரைவில் அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதனையடுத்து பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது தெரிவிப்பார்.

இதனால் தமிழக அரசியலே சூடு பிடிக்கும்.

ஆனால் அரசியல் கட்சி தொடங்காத காரணத்தினால் ரஜினியை கிண்டல் செய்து நிறைய செய்திகள் வரும்.

இந்த நிலையில் சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

அப்போது அரசியல் கட்சியை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது்

அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் ரஜினியின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !

நட்பின் பெருமை சொல்லும் “ஜிகிரி தோஸ்து” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jigiri dosthuநட்பு உலகம் முழுதும் இந்த உறவு எங்கும் நிறைந்திருக்கும். நட்பின் உறவை சொல்லும் கதைகள் உலக அளவில் அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடக்கூடியதாகும். கதையின் மையம் காரண காரணிகள் நட்பின் மையமாக இருப்பின் அது உலக பார்வையாளர்களின் விருப்பமிக்க படைப்பாக மாறிவிடும். இப்படி உலக ரசிகர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் நட்பின் மையத்தில், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் குமார் “ஜிகிரி தோஸ்து” எனும் கமர்ஷியல் படத்தை உருவாக்கவுள்ளார்.

தன் திரைப்பயணத்தை நடிகராகவும் குறும்பட இயக்குநராகவும் 2012 ல் தொடங்கிய விக்னேஷ் குமார் ஐந்து விருது வென்ற குறும்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக வெளிச்சம் பெற்றார். தன் கதை
சொல்லும் இயக்கும் திறமை மட்டுமல்லாமல் 9 குறும்படங்களில் முக்கியமாக கால் நூற்றாண்டு காதல், மேளம் செல்லும் தூரம், திறந்த புத்தகம், யாத்ரிகன், மற்றும் ஃபேஸ்புக் நீங்க நல்லவரா? கெட்டவரா?ஆகிய குறும்படங்களில் நடித்து சிறந்த நடிகராகவும் கவனம் பெற்றார். மேலும் லைகா தயாரிப்பாக உருவாகிய இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்தில் அவரது உதவியாளராக வேலை பார்த்து திரைப்பட இயக்க நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் அப்படத்தில் முக்கியமான சிறு பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

2018 ல் SIIMA விருதுகளில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதையும் வென்றுள்ளார். மேலும் 2017 Behindwoods Gold Medal க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜிகிரி தோஸ்து திரைப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் விக்னேஷ் குமார் நடிக்க இவருடன் பிக் பாஸ் புகழ் ஷாரிக் ஹசன் நடிக்க நாயகியாக ரட்சசன், அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி நடிக்கிறார். இவர்களுடன் வீ ஜே ஆஷிக், பவித்ரா லக்‌ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம் ( எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றவர் ), ஜாங்கிரி மதுமிதா ( ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா படப்புகழ்),RNR மானோகர், சரத்( விஜய் டீவி KPY புகழ் ) ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் குமார் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கி நடிப்பதுடன் ஜோஷ் K, SB ஆர்ஜுன் மற்றும் ஹக்கா J ஆகியோருடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அஷ்வின் விநாயகமூர்த்தி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு படப்புகழ் RV சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத்தொகுப்பு செய்ய மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார். KRAFTSWORKS நிறுவனம் DI மற்றும் CG செய்கிறது. ஒலியமைப்பு சரவணகுமார் செய்ய சுதன் பாலா பாடல்கள் எழுதுகிறார்.

More Articles
Follows