தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் தன் உடல் நலத்திற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது பூரண குணமடைந்து சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ளார்.
எனவே அவரை பலரும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் அவரை சந்தித்து உடம் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அந்த வீடியோ இணையங்களில் வைரலானது. அந்த வீடியோவில் விஜயகாந்தின் கன்னத்தை தழுவி ஒரு குழந்தையை போல் அவருக்கு வாழ்த்து சொல்லி வந்தார் ரஜினிகாந்த்.
இந்த வீடியோவை பதிவிட்டு இயக்குனர் சேரன் கூறியதாவது…
Cheran Pandian @cherandreams
இந்த மனிதநேயம்தான் ரஜினியிடம் எனக்கு பிடித்த முதல் விஷயம்.. அவரின் தழுவலும் அவர் விஜயகாந்த் அவர்களை கன்னத்தில் தொடும் உணர்வும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது… கண்ணீர் வரவைக்கும் வீடியோ… தூர இருந்து உங்களை ரசிக்கிறேன் மதிக்கிறேன்… அரசியல் தாண்டி… நீங்கள் நீடூடி வாழ்க. “
என பதிவிட்டுள்ளார்.
Director Cheran talks about Rajinikanth and Vijayakanth meeting