தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்களில் விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் இருவரும் கிட்டதட்ட 6,7 படங்களையாவது கையில் வைத்துள்ளனர்.
இவர்களைப் போல் நடிகைகளில் வரலட்சுமியும் கிட்டதட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, `மாரி 2′, கன்னி ராசி, ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன.
இந்நிலையில் ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்றவராக வரலட்சுமி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை பார்தோம்.
இப்படத்திற்கு ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினர் படக்குழுவினர்.
இப்படத்தலைப்பானது கமலின் 100வது படமாகும்.
எனவே கமலின் அனுமதிக்காக காத்திருந்தனர்.
தற்போது இந்த தலைப்புக்கு கமல் ஓகே சொல்லிவிட்டாராம்.
எனவே விரைவில் இந்த தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட காத்திருக்கிறதாம்.