‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

babu reddyவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.

ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடிக்கவே, ஒருகட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன்.. ஆனால் பாபுரெட்டி பணத்தை திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார் பாபுரெட்டி.

இந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதன் காரணமாக, ஊரடங்கு என நிலைமையே மாறிவிட்டது. இதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த ‘ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜயராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார்.. இந்த விஜயராஜேஷ் ரங்கப்பா உடனே இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார். படத்தை இன்னொருவருக்கு விற்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதை கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசிய பாண்டியனுக்கு அவரது அட்வான்ஸ் தொகையை திருப்பித்திந்திருக்க வேண்டும்..

ஆனால் அப்படி செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, மலேசிய பாண்டியனுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ராஜபார்வை படத்தை OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. படத்தை தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை இந்த மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்பது மலேசியா பாண்டியனுக்கு தெரிவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் மலேசியா பாண்டியன்.. மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

ஆர்.கே.நகர் திரைப்படம் என்னை உத்வேகப்படுத்தியது – நடிகர் இனிகோ பிரபாகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

inigo prabakarஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.

சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே.நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அதிலும் ஆர்.கே.நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.

தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘ஆர்.கே.நகர் படத்தில் கிடைத்தது போன்ற சவாலான வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பீர்களா?’ என எனது ரசிகர்கள் பலர் என சமூக வலைதளத்தில் கேட்டிருந்தனர். அதற்கு ‘கண்டிப்பாக செய்வேன்’ என்று பதலளித்திருந்தேன். அவர்கள் கூறியது போன்றே அப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

நல்லது பண்றீங்க நல்லாவே பண்றீங்க.. மீட் பண்றோம்.. சித்த மருத்துவருக்கு ரஜினி பாராட்டு

நல்லது பண்றீங்க நல்லாவே பண்றீங்க.. மீட் பண்றோம்.. சித்த மருத்துவருக்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini veera babuகொரோனா நோயாளிகளை காப்பாற்ற அவர்களை முற்றிலும் குணமாக்க உலக மருத்துவர்களே போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால், இந்த நோயை எதிர்த்து கொரோனா களத்தில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கியவர் சித்த மருத்துவர் வீரபாபு.

சென்னை, சாலிகிராமத்திலுள்ள, ஜவஹர் கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கு மாநகராட்சி சிறப்பு மையத்தையும் அமைத்துள்ளது.

இங்கு, டாக்டர் வீரபாபு குழுவினர், ஆவி பிடித்தல், சூரிய குளியல், மூலிகை தேநீர், உள்ளிட்ட சித்தா உணவுகளை வழங்கி, இயற்கை சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சிகிச்சை முடிந்து 550 பேர், நலமுடன் வீடு திரும்ப 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 69 கொரோனா நோயாளிகளுக்கு நெகட்டிவ் முடிவை கொண்டு வந்தார் வீரபாபு.

இவரின் செயல்பாடுகள் பற்றி கேள்விப்பட்ட ரஜினிகாந்த், அவரை போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

ரஜினி பேச்சில்…

கொரோனா நோயாளிகளுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க. ரொம்ப நல்லாவும் பண்றீங்க.

டெஃபனெட்டா மீட் பண்ணணும். கொரோனா லாக் டவுன் முடியட்டும். மீட் பண்ணலாம்’ என்று பாராட்டி இருக்கிறார்.

வீரபாபு தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.

சென்னை மணப்பாக்கத்தில் உழைப்பாளி என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கினார். வெறும் 10 ரூபாய்க்கு உணவு வழங்கியும் வரும் இவர் சாலிகிராமத்தில் இரண்டாவது கிளையை தொடங்கி உள்ளார்.

என்னுடைய இன்ஸ்பிரேஷனே ரஜினிதான். அவரின் படங்களைப் பார்த்து ரசிகனாக மாறியவன் அல்ல நான்.

சாதாரண நிலையிலிருந்து உழைத்து முன்னேறியவர்.

இந்திய பிரதமரே அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கும் வகையில் தன் தகுதியை உயர்த்திக்கொண்டவர்.

அதான் அவர் நடித்த உழைப்பாளியை என் உணவகத்தின் பெயராக வைத்தேன்.” என பிரபல இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்பா மகள் பாசத்தை சொல்ல வரும் பிதா-க்கள் மிஷ்கின் & ‘பாக்ஸர்’ மதியழகன்

அப்பா மகள் பாசத்தை சொல்ல வரும் பிதா-க்கள் மிஷ்கின் & ‘பாக்ஸர்’ மதியழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskinஎக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் ‘பிதா’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.

மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘பிதா’ படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

இன்று காலை நடைபெற்ற சம்பிரதாயமான துவக்க விழா பூஜையில் ‘பிதா’ படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர்.

மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.

பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் ‘பிதா’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘சூரரை போற்று’ ரிலீசுக்கு முன்பே ரூ 25 கோடி லாபத்தை அள்ளிய சூர்யா

‘சூரரை போற்று’ ரிலீசுக்கு முன்பே ரூ 25 கோடி லாபத்தை அள்ளிய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya soorarai pottruசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’.

ஜிவி.பிரகாஷ் இசையமைக்க நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை படமாக்கி உள்ளனர்.

எனவே இந்த படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் இதன் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு செலவு 30 கோடி என்றும், அதன் தமிழ்நாட்டு உரிமை மட்டும் 55 கோடிக்கு வியாபாரமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் டி.வி. உரிமை இன்னும் விற்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

எனவே சூர்யாவின் லாபம் இன்னும் எகிறும் எனத் தெரிகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்யராஜ் & ஜெயராம் மகன்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் பாக்யராஜ் & ஜெயராம் மகன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sudha kongaraசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரை போற்று’ படம் கொரோனா பிரச்சினைக்கு பின்னர் வெளியாகவுள்ளது.

இதனிடையில் இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

நெட்ப்ளிக்ஸ் ஆன்லைன் ஓடிடி தளத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்.

இவருடன் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ஆணவக் கொலைகளை மையப்படுத்தி ஓர் ஆந்தலாஜி படமாக உருவாக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரிஸில் சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது.

More Articles
Follows