தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கூத்தன்.
ஏ.எல்.வெங்கி இயக்கியுள்ள இப்படம் சினிமா துறையில் உள்ள ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் பிரபு ஓரிரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.
இந்நிலையில் கூத்தன் பட அறிமுகப்பாடலை விஜய்சேதுபதி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
“கூத்தனம்மா கூத்தன், கூத்தனம்மா கூத்தன்” என்று தொடங்கும் இந்த பாடலை பாலாஜி இசைக்கு வேல்முருகன் பாடியுள்ளார்.
Actor Vijay Sethupathy launches Koothan movie single track