தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது
இதனையடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7ல் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.
அத்துடன் பதவியேற்க புதிய அமைச்சர்கள் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார் ஸ்டாலின்.
இதனையடுத்து நாளை மறுநாள் மே 7ஆம் தேதி காலை 9 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.
MK Stalin set to take oath as CM on May 7