உலகளவில் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனம்..; ஒருமைப்பாட்டை விதைக்க ஜிவி. பிரகாஷ் வாய்ஸ்

உலகளவில் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனம்..; ஒருமைப்பாட்டை விதைக்க ஜிவி. பிரகாஷ் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashகைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து இசையமைப்பாளர், பாடகர் ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6.30 நிமிடங்கள் ஒலிக்கும் பேரனாய்ட் பாடல், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி திரைப்படத்தின் டீஸரும் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

ஒருபுறம் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்கிற கோஷங்கள் உலகம் முழுவதும் பல்வேறு தளங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமைந்துள்ளது.

உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு அதன் வரிகள் வலிமை சேர்த்துள்ளது . முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன.

ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்கிற வலியுறுத்தல், அவரது குரல் மூலம் வலுவாகப் பதிவாகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாடலின் கருவும் அதன் வரிகளும் அப்படியே பொருந்திப் போகின்றன.

அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி பேசுகையில்,

“நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஸிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
.
ஏடிஜியின் ‘பேரனாய்ட்’ பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையை முன்வைக்கிறது. வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை உரக்கச் சொல்கிறது.

பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு ஒமர் குட்டிங் உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

“நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் மிக ஆழமானதாக அமைந்துள்ளது.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் இந்த பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும். புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பாடலில் பங்காற்றியது குறித்து கூறிய ஒமர் குட்டிங்…

“முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.

மாற்றத்திற்கான உங்களின் பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தைப் போக்குங்கள்.. நானும், என்னைப் போன்ற கலைஞர்களும் எங்கள் தளங்களை உண்மையான மாற்றத்தை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும் முயற்சியில் இந்தப் பாடல் என்பது ஒரு பகுதியே” எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது…

“திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு உச்சக்கட்ட அனுபவம்.

சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்” என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில்..,

“ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறது.. ” என்றார்.

Actor GV Prakash to make Hollywood debut with Trap City

புத்தாண்டுக்கு கொண்டாட்டத்திற்கு தடையில்லை..; விடுடா வண்டியை பாண்டிச்சேரிக்கு.. என்ஜாய்..!

புத்தாண்டுக்கு கொண்டாட்டத்திற்கு தடையில்லை..; விடுடா வண்டியை பாண்டிச்சேரிக்கு.. என்ஜாய்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

new year celebrationகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு…

புதுச்சேரி மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

“கிறிஸ்துமஸ் விழாக்கள் வழக்கம் போல் நடத்தப்படும். இரவு நேரங்களில் கிறிஸ்தவ சமயத்தினர் பிரார்த்தனை செய்ய எந்தவித தடையும் கிடையாது.

பொங்கல் விழாக்களில் மக்கள் முறையாக கொண்டாடலாம்.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை விதிமுறைகளை கடைபிடித்து ஹோட்டல்களில் 200 பேர்கள் இருக்கலாம்.

புதுச்சேரி புத்தாண்டு அன்று கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடலாம்.

அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. தடை விதிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.

இந்த இரண்டு விதிமுறைகள் காவல் துறையினர் முறையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

Pondicherry government allowed new year celebrations with some guideline

ரஜினி கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக கமல்..? ரஜினி ரசிகர்கள் கமலுக்கு ஓகே சொல்வார்களா?

ரஜினி கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக கமல்..? ரஜினி ரசிகர்கள் கமலுக்கு ஓகே சொல்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalதேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் கமல்.

“எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி டார்ச் சின்னம் வேண்டாம் என கூறியுள்ளனர்.

எனவே மீண்டும் சின்னத்தை பெற சட்டப் போரட்டம் நடத்துவோம்.

மக்களை வறுமை கோட்டிற்கு மேல் அல்லாமல், செழுமை கோட்டிற்கு மேல் வைப்பதே எங்களின் ஒரே நோக்கம்

தேர்தல் பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டதால் ரஜினியுடன் பேசவில்லை. என்றார் கமல்.

மேலும்… ரஜினியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா..? என்ற கேள்விக்கு, ரஜினி கேட்டுக் கொண்டால் மறுப்பதற்கில்லை” என தெரிவித்தார் கமல்ஹாசன்.

ரஜினியை தமிழக முதல்வராக பார்க்க வேண்டும் என 25 வருடங்களாகவே அவரது ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

கமலும் ரஜினியும் நண்பர்கள் என்பதாலும் தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை என ரஜினி கூறியிருப்பதாலும் கமலின் இந்த பதில் சாத்தியப்படலாம்.

அப்படியென்றால்… ரஜினி ரசிகர்கள் கமலுக்கு ஓகே சொல்வார்களா?

If Rajini requests, I can be the CM candidate, says MNM leader Kamal Haasan

சுரேஷ் ரெய்னா ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி உள்ளிட்ட 34 பேர் கைது

சுரேஷ் ரெய்னா ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி உள்ளிட்ட 34 பேர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh rainaபிரிட்டனில் புதிய கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது.

இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ட்ராகன் ஃபளை கிளப் என்ற இடத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நேரம் செலவிட்டதாக சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூஸன் கான், பாடகர் குரு ரந்தவா உள்ளிட்ட 34 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இத்துடன் கிளப்பைத் திறந்த குற்றத்துக்காக அந்த கிளப்பின் பணியாளர்களையும் கைது செய்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கிளப்பைத் திறந்து வைத்தல், சமூக விலகல், முகக்கவசம் அணிதல் என கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் இருந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரப்பி உயிருக்கு ஆபத்தை உண்டாக்குவது எனப் பல குற்றங்களுக்காக, 188, 269, 34 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Suresh Raina & Sussanne Khan arrested in a raid at a pub

அரை குறை ஆன்மிகம்.. ரஜினியின் சிஸ்டமே சரியில்லை..; தேர்தலில் போட்டியிடும் டிராஃபிக் ராமசாமி

அரை குறை ஆன்மிகம்.. ரஜினியின் சிஸ்டமே சரியில்லை..; தேர்தலில் போட்டியிடும் டிராஃபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth traffic ramasamyசமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமி. இவர் சென்னையில் வசித்து வருகிறார்.

தமிழகத்தில் முக்கியமாக சென்னையில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்கிறளவுக்கு பொதுநல வழக்குக்களை தொடர்ந்துள்ளார்.

பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் முதல் ஆளாக எதிர்ப்பவர் இவர் தான்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இவர் இதுபோன்ற தைரியமான நல்ல விஷயங்களை செய்து வருவதால் இவருக்கு மக்களிடையே நல்ல பெயர் உள்ளது.

மேலும் ‘டிராபிஃக் ராமசாமி’ என்ற இவரது பெயரில் ஒரு திரைப்படமும் உருவானது. அதில் எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருந்தார்.

இவருக்கு பல இடைஞ்சல்கள் வந்தபோதிலும் சமூக சேவையை தொடர்ந்து வருகிறார்.

இந்த நுலையில் வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் டிராபிக் ராமசாமி போட்டியிடவுள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுமாறு அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் வற்புறுத்தியதால் இவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டிராபிஃக் ராமசாமி பேசும்போது…

“ரஜினியின் ஆன்மிகம் அரை குறையாக உள்ளது. அவர் பள்ளி கட்டிடத்திற்கு வாடகை பாக்கி இருக்கு.. ரஜினியின் சிஸ்டமே சரியில்லை.”

இவ்வாறு டிராபிஃக் ராமசாமி பேசினார்.

Traffic Ramasamy slams Rajinikanth politics

கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற ‘பெண் உறுப்பு’..; டீடோட்டேலர் டீம் ஹாப்பி

கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற ‘பெண் உறுப்பு’..; டீடோட்டேலர் டீம் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் “பெண் உறுப்பு”.

அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார்.

பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது.

தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

பெண் உறுப்பு

Keerthy Suresh praises Pen Uruppu short film team

More Articles
Follows