காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறல்..; அறைகூவல் விடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.

காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறல்..; அறைகூவல் விடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paranoidதயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் இசையை உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தில் லீட் சிங்கிளான ‘பேரனாய்ட்’ பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

6 நிமிடங்களுக்கும் சற்று கூடுதலாக ஒலிக்கும் பேரனாய்ட், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி டீஸர் அண்மையில் வெளியானது.

இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது.

ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்ற கோஷங்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமையும். துணிச்சலான முடிவும் கூட.
உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளது அதன் வரிகள். முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன.

ஜி.வி.பிரகாஷ்… கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரும் குரல் வலுவாகப் பதிவு செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இது பொருத்தமானதாக உள்ளது.

அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி, “நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஜிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன்.

இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்” என்றார்.
ஏடிஜியின் பேரனாய்ட் பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையைக் கடத்துகிறது.

வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கையை உரக்கச் சொல்கிறது. ஒமர் குட்டிங் பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

“நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. “என்ற பாடலின் வரிகள் எவ்வளவு ஆழமானவை.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும்.

புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.
பாடலில் பங்காற்றியது குறித்து ஒமர் குட்டிங், “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.

அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுங்கள்.

மாற்றத்திற்கான உங்களி பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தை நிறுத்துங்கள். இந்தப் பாடல் மூலம் நானும் என்னைப்போன்ற கலைஞர்களும் மாற்றத்தை உண்டாக்கும் பேரியிக்கமாக கைகோர்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது, “திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு மயக்கும் அனுபவம்.

சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்” என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில்..,

“ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட கோரிக்கை வைக்கிறது.

Paranoid first single from Trap City releases today

‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுக்கு ஜோடியான ‘திரௌபதி’ ஷீலா

‘மண்டேலா’ படத்தில் யோகிபாபுக்கு ஜோடியான ‘திரௌபதி’ ஷீலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu sheela rajkumarஅழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார்.

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த “டூ லெட்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.

தமிழில் டூலெட், திரௌபதி என ஒருபக்கம் வெற்றிகளை தட்டிக்கொண்டே…
இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார்.

சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.

“மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற படம் மிகச்சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது.

ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன். புதிய முயற்சி என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குப்பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன.

தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.

அதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன்.

இந்தியன்-2 படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

ஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

பெரும்பாலும் என்னுடைய படங்கள் அனைத்துமே அறிமுக இயக்குநர்களுடன் தான் அமைந்திருக்கிறது.

எல்லோருக்கும் அவரவர் முதல் படம் என்பதால் கதையையும் கதாபாத்திரங்களையும் சரி வலுவாக அமைத்திருப்பதால் எனக்கான கதாபாத்திரங்களும் அப்படியே அமைந்து விட்டது எனது அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம்.

“டூ லெட்”, “கும்பளங்கி நைட்ஸ்”, படங்களுக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர்.

நானும் எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

டூ லெட் படம்தான் ஒரு நடிகையாக அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது. அந்தப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப்பார்த்த மோகன்லால் மேனேஜர் மூலமாக எனக்கு மலையாளத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதற்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர்.

ஆனாலும் திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்துகொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்..

நான் அந்தப்படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள்.

அந்தப்படத்தில் நடித்த மலையாள நகைச்சுவை நடிகர் சௌபின் சாஹிர், ஒரு காட்சியில் எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக, அவர் என்னிடம் வந்து, தான் எப்படி நடிக்கப் போகிறேன் எப்படி காலில் விழப் போகிறேன், உங்களுக்கு இது சரியாக இருக்குமா என்பதையெல்லாம் முன்கூட்டியே என்னிடம் பகிர்ந்து கொண்டு நடித்தார். அதற்கு ஏற்றபடி நடிப்பதற்கு எனக்கும் வசதியாக இருந்தது.

என்னை பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை..

எனக்கு நன்றாக நடனம் ஆடத்தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.

அதேசமயம் கதையம்சத்துடன் என்னைத்தேடி வரும் படங்களில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. பாசிட்டிவ் மட்டுமல்லாமல் நெகடிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன்.

எப்போதும் பசியோடு இருக்கும் ஒரு கலைஞராக இருக்கவே நான் விரும்புகிறேன்.. எனக்கு ஃபுல் மீல்ஸ் தரும் கதைகளோடு இயக்குநர்கள் தேடி வரும்போது அதை எப்படி நான் மறுக்க முடியும்..?

“மண்டேலா” படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்..

சமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, நான் என்னைக்குமே காமெடியன் தான் என்று கூறியிருந்தார்.. ஆனால் என்னை பொருத்தவரை காமெடி நடிகர்கள் எல்லோரும் ஹீரோதான் என்று சொல்வேன்..

அவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.

அதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும் விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்களை சொல்ல வேண்டுமென்றால் படத்தின் கதையை சொல்ல வேண்டியிருக்கும்..

அதனால் இந்தப் படம் வெளியான பின்பு இந்த படத்தில் நடித்த அனுபவங்களை தனி பேட்டியாக கொடுக்கும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

இந்த கொரோனா தாக்கம் சினிமாவை மட்டுமில்ல, தனி மனித வாழ்க்கையும் நன்றாகவே அசைத்துப் பார்த்துவிட்டது. எப்போதும் துறுதுறுவென ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு, இந்த ஆறு மாதங்கள் கொஞ்சம் சவால் தான்.. இருந்தாலும் இந்த சமயத்தில் புத்தகங்கள் நிறைய படித்தேன்.. மனதில் தோன்றியதை எழுதவும் ஆரம்பித்தேன்..

நமக்கு இதெல்லாம் வருமா, எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் என சந்தேகப்பட்ட சில விஷயங்களை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்க இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டேன். அவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்த உதவியது இந்த லாக் டவுன்” என பாசிடிவ் விஷயங்களை பகிர்ந்தார் ஷீலா ராஜ்குமார்.

Actress Sheela Rajkumar plays female lead in Yogi Babu’s Mandela

இப்போ இல்லனா எப்பவுமே இல்ல..; விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா.. – ரஜினி வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள்

இப்போ இல்லனா எப்பவுமே இல்ல..; விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா.. – ரஜினி வீட்டு முன்பு திரண்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini fans in poes gardenகொரோனா தொற்று அச்சம், அவரின் உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்து வருகிறது.

இதனால் ரஜினி ரசிகர்களே செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையிலும்.. தன் உடல்நிலை பற்றி வெளியான (போலி) அறிக்கையில் கூட உண்மை இருந்ததாக தெரிவித்தார்.

இதனால் பல ஊடகங்களில் இதுவே விவாதப் பொருளாக மாறியது.

இந்த நிலையில் இன்று காலை ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு முன்பு அவரது ரசிகர்கள் திரண்டனர்.

அப்போது அவர்கள் ஊடகங்களிடம் தங்கள் தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.

“தமிழகத்தை ஆள வா…. ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்… இப்போ இல்லனா எப்பவுமே இல்ல.. விவசாயிகள் துயர் துடைக்க வா தலைவா… ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்… உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைத்தனர்.

மேலும் இது போன்ற வாசக போஸ்டர்களை சென்னை நகரில் பல முக்கிய பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

Rajinikanth fans gathered at Poes Garden

‘என்ஜிகே’ படைத்த சாதனையை முறியடித்த ‘சூரரைப் போற்று’.

‘என்ஜிகே’ படைத்த சாதனையை முறியடித்த ‘சூரரைப் போற்று’.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதன் டிரைலர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது-

தற்போது 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைக் நெருங்கி கொண்டுள்ளது.

இதற்கு முன் சூர்யாவின் ‘என்ஜிகே’ படம்தான் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையை படைத்திருந்தது.

அந்த டிரைலருக்கு 1 கோடியே 29 லட்சம் பார்வைகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru beats NGK’s records

மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

மணிரத்னத்தின் ‘நவரசா’.. அரவிந்த்சாமி, கவுதம் மேனன் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 9 குறும்படங்களை ‘நவரசா’ என்ற தலைப்பில் வெளியிட உள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்.

இந்த 9 குறும்படங்களை அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரவீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த படங்களில் 40 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளனர்.

இந்த குறும்படங்கள் “கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொரோனா சமயத்தில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வழங்க ‘நவரசா’ தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விரைவில் நவரசா ரிலீஸ் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.

navarasa directors
9 Kollywood directors joins for Mani Ratnam’s Navarasa

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

பெங்காலி ரீமேக்கில் இணையும் ராம் & தனஞ்செயன்.; ஹீரோஸ் யாரு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார் தனஞ்செயன்.

இப்படத்தை அடுத்து பெங்காலி மொழியில் சூப்பர் ஹிட்டான ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய ‘வின்சி டா’ என்ற படத்தின் தமிழில் ரீமேக் உரிமையை பெற்று அதை தமிழில் படமாக்கவுள்ளார்.

இப்படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ராம் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் தனஞ்செயன்.

டபுள் ஹீரோ படமான இப்படத்தில் நடிக்கவுள்ள ஹீரோக்கள் யார்? என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.

Director Ram and Producer Dhananjayan joins for Vinci Da Tamil remake

vinci da

More Articles
Follows