பிட்டு படம் பார்த்து ஆண்கள் வீட்டுல சொல்லி கொடுப்பார்களா..? இரண்டாம் குத்து-க்கு ஆதரவாக சாம்ஸ்

பிட்டு படம் பார்த்து ஆண்கள் வீட்டுல சொல்லி கொடுப்பார்களா..? இரண்டாம் குத்து-க்கு ஆதரவாக சாம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor chaams“இரண்டாம் குத்து” படத்திற்கு “கலாச்சாரம் கெட்டு விட்டது” “கண் கூசுகிறது” என்று பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து அந்த படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சாம்ஸ் தன் சில சந்தேகங்கள்… குழப்பங்கள்…

தியேட்டர்

——————

பிட்டுப்பட தியேட்டர்கள் நம் ஊரில் எதற்காக இருக்கிறது ? கலையை கலாச்சாரத்தை வளர்க்கவா அல்லது செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்கவா ?

எனக்கு தெரிந்து அங்கே ஆண்கள் மட்டும்தான் படம் பார்க்க வருகிறார்கள்… அதை ஆண்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொண்டால் போதுமா ? வீட்ல போய் சொல்லி கொடுப்பார்களோ ?

அந்த மாதிரி படங்களை பார்த்து மனம் சபலப்பட்டு தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று நினைத்தால் அதை எல்லாம் ஏன் இத்தனை நாட்கள் விட்டு வச்சிருக்கோம் ?

நம் கலாச்சாரத்தை கெடுத்து இருக்கும் ஏரியாவிற்கு கலங்கத்தை ஏற்படுத்தி பெண்கள் அந்தப்பக்கம் செல்வதற்கே தயங்கும் அந்தத் தியேட்டர்களை எதிர்த்து ஏன் யாருமே போராடவில்லை ?

இளமைக்காலத்தில் அதையெல்லாம் பார்த்து ரசித்தவர்கள் ( நான் உட்பட ) இன்று குரல் கொடுத்தால்… ஒரு வேளை வருந்தி திருந்தி விட்டோமோ ?

தொலைக்காட்சி

——————————-

பெரியோர் முதல் சிறியோர் வரை இருக்கும் வீட்டுக் கூடத்திற்குள் இருக்கும் டிவி பெட்டிக்குள் சென்சார் இல்லாமல் கண்ட கருமமும் வருகிறதே. புலம்புகிறார்களே தவிர அதை தடுக்கவோ தட்டிக் கேட்கவோ இதுவரை யாருமே வரவில்லை ? ஓ.. அதெல்லாம் பெரிய இடம்

முடியாது என்று விட்டு விட்டார்களோ ?

இணையதளம்

—————————-

டிவியை விட பல மடங்கு நெட் மூலமாக கம்ப்யூட்டரிலும் செல்லிலும் அநியாயத்திற்கு நம்மை கேட்காமலேயே சென்சார் செய்யப் படாஒமல் படு பயங்கரமாக வருகிறதே அது தவறாக தெரியவில்லையா ? அதற்காக யாரேனும் பொங்கி இருக்கிறார்களா ? அது இன்னும் மிகப்பெரிய இடம் என்று கண்ணை மூடிக்கொண்டு போகிறார்களோ ?

சினிமா

—————

பாகவதர் காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை படங்களில் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டிய விஷயங்களில் அளவு (புடவை to ஸ்விம் சூட்) மாறுபட்டுக் கொண்டே வருகிறதே

இதில் எது சரியான அளவு ?

குடிப்பதை போல காட்சியை படத்தில் வைத்து “குடி குடியை கெடுக்கும்” என சப்-டைட்டில் போடுவது போல ஆபாச காட்சியை வைத்து விட்டு “மன நலத்தை கெடுக்கும்” என்று சப்டைட்டில் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ?

‘யு’ சர்டிபிகேட் வாங்கிய படத்தில் சில சமயம் ‘ஏ’ சர்டிபிகேட் அளவிற்கு சில காட்சிகள் வந்து நெளிய வைக்கிறதே அது எப்படி ?

A சர்டிபிகேட் படங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் யாரையாவது பாதிக்கிறது என்பதால் பேசாமல் இனிமேல் U சர்டிபிகேட் படங்கள் மட்டுமே தயாரித்தால் என்ன ? அந்த U விற்கு அளவு என்ன ?

பொதுவான சில சந்தேகங்கள்

—————————————————–

ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களில் வருகின்ற ஆபாச காட்சிகளை பார்க்கவும் ரசிக்கவும் செய்யும்போது கெடாத கலாச்சாரம் பாதிக்காத நம் மனம் நம்மூர் காரன் செய்தால் கெட்டுவிடுமா ?

நம்ம ஊர் கலாச்சாரத்தை காப்பாற்றும் பல உத்தமர்கள் தாய்லாந்து சென்று வந்ததை குறிப்பாக பட்டாயா சென்று அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு வந்ததை ரகசியமாக பெருமை பேசிக் கொள்வார்கள் தானே ?

ஒருவர் தயாரிக்கிறார் பலர் நடிக்கிறார்கள் அரசாங்கம் நியமித்திருக்கிற சென்சார் போர்டு அதிகாரிகள் முறையான சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள் பல தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். பலர் பார்க்க தயாராக இருக்கிறார்கள். எல்லோரையும் விட்டுவிட்டு இயக்குனரை மட்டும் காய்ச்சுவது ஏனோ ?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றால் … யார் செய்தாலும் குற்றம் தானே ?

யானை அளவு விஷயம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எலி அளவை பிடித்து தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

அதுதான் புரியவில்லை ?

நிறுத்தினால் எல்லாவற்றையும் நிறுத்துவோம்…

தெளிய காத்திருக்கும்…

சாம்ஸ்

Actor Chaams supports Santhosh Jeyakumars Irandam Kuthu

திருப்பதி-மதுரை கோயில்களில் சிம்பு தரிசனம்..; முகத்தை மூடியபடி பறந்தார்!

திருப்பதி-மதுரை கோயில்களில் சிம்பு தரிசனம்..; முகத்தை மூடியபடி பறந்தார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu at madurai meenakshi templeவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

இந்த படத்திற்கு முன்பே சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்க சம்மதித்துள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறாரம் சிம்பு.

இந்த படத்தில் நடிப்பதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடல்எடையை 20 கிலோ குறைத்திருந்தார்.

இந்த படங்கள் வெளியாகாத நிலையில் அந்த படத்தை வெளியிட ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு.

செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் சிம்புவை படம்பிடிக்க முயன்றதால் முகத்தை முழுவதுமாக மூடியபடி வேகமாக காரில் ஏறி பயணித்தார் சிம்பு.

திருப்பதி வந்த நடிகர் சிம்பு ரூ.300 டிக்கெட் வாங்கி ஏழுமலையானை தரிசனம் செய்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu seeks blessings at Madurai and Tirupati temples

மீண்டும் விஜய்யுடன் மோத ரெடியாகும் கார்த்தி..?

மீண்டும் விஜய்யுடன் மோத ரெடியாகும் கார்த்தி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Karthiலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது.

கொரோனா பிரச்சினைகள் தீர்ந்த பிறகு 2021 பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என கார்த்தி அறிவித்தார்.

இந்த படத்தை ஒரு பண்டிகை நாளில் வெளியிட காத்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருந்தார்.

இதன்படி பார்த்தால் 2021ல் பொங்கலுக்கு ‘சுல்தான்’ படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

எனவே மாஸ்டர் திரைப்படமும் சுல்தானும் ஒரே நாளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதியதும் வசூல் வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Vijay and Karthi movies to clash on Pongal

‘பிரேக்கிங் பேட்’ வசனத்தை தன் அப்பா போட்டோவுடன் பதிவிட்டு துருவ் விக்ரம்

‘பிரேக்கிங் பேட்’ வசனத்தை தன் அப்பா போட்டோவுடன் பதிவிட்டு துருவ் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikramஆதித்ய வர்மா படத்தின் மூலம் தன் சினிமா கேரியரை ஆரம்பித்துள்ளார் துருவ் விக்ரம்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

தனது 2வது படத்திலேயே அப்பா விக்ரம் உடன் இணைந்து நடிக்கிறார் துருவ்.

இந்நிலையில் துருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இதில் தன் அப்பா விக்ரமுடன் இருக்கிறார்.

அதில்… ”அரை குறை வேலைகள் வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.

இது புகழ்ப்பெற்ற வெப் சீரியஸான பிரேக்கிங் பேட்டின் வசனமாகும்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Dhruv on Instagram shares Breaking Bad quote

எந்த டைரக்டருக்கும் செய்யாத ஒன்றை சுதா கொங்கராவிற்காக செய்த சூர்யா.!?

எந்த டைரக்டருக்கும் செய்யாத ஒன்றை சுதா கொங்கராவிற்காக செய்த சூர்யா.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya sudha kongaraசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30 தேதி நேரடியாக அமேசானில் வெளியாகிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

சுதா கொங்கரா இப்படம் குறித்து அண்மையில் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்…

”நான் இயக்கும் படங்களுக்கு, ஷூட்டிங் செல்லும் முன் கலைஞர்களுக்கு முழு ஸ்க்ரிப்ட் கொடுத்து படிக்க வைப்பேன்.

அதன்பிறகு ஒரு ஒர்க்‌ஷாப் நடக்கும்.

இந்த படத்திற்கும் அதான் செய்தோம்.

சூர்யா இதற்கு முன் இப்படி செய்ததில்லை.

தனது சினிமா கெரியரில் முதல் முறையாக இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார் சுதா.

Director Sudha Kongara praises Suriya

நவீரா சினிமாஸ் தயாரிப்பில் அகிலன் இயக்கும் படம்..; மீண்டும் ஹீரோவாக பிஸியாகும் ஜி.வி.பிரகாஷ்

நவீரா சினிமாஸ் தயாரிப்பில் அகிலன் இயக்கும் படம்..; மீண்டும் ஹீரோவாக பிஸியாகும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படத்தின் பூஜை வளசரவாக்கத்தில் இன்று நடைபெற்றது.

கொரோனா வழிமுறை பின்பற்றி இந்தப் படப்பூஜையில் அனைவரும் கலந்துக் கொண்டனர். பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்துவிட்டு, சில குறும்படங்கள் மற்றும் பல்வேறு முன்னணி படங்களின் கதை விவாதத்தில் கலந்து கொண்ட அகிலன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அகிலன் கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனே தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

முழுக்க காதலை மையப்படுத்திய க்ரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது.

இன்னும் இந்தப் படத்துக்குப் பெயரிடப்படவில்லை. ஆகையால் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று அழைக்கப்படுகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

நவீரா சினிமாஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. 55 நாட்களில் ஒட்டும்மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விரைவில் இதர நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். கண்டிப்பாக அவை அனைத்துமே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் இயக்குநர் அகிலன்.

தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:

இயக்குநர்: டி.வி.அகிலன்
தயாரிப்பு நிறுவனம்: நவீரா சினிமாஸ்
தயாரிப்பாளர்: இஷானி சஜ்மி சலீம்
நிர்வாக தயாரிப்பாளர்: பி .சூர்யபிரகாஷ்
இணை தயாரிப்பாளர்கள்: சாஜினாஸ் சலீம், சாதிக் சலீம்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவாளர்: எம்.ஏ.ராஜதுரை
எடிட்டர்: டி. சிவனாதீஸ்வரன்
கலை இயக்குநர்: தாமு
சண்டைக் காட்சிகளின் இயக்குநர்: டேஞ்சர் மணி
ஆடை வடிவமைப்பாளர்: சைத்தன்யா ராவ்
மேக்கப் : குப்புசாமி
பி.ஆர்.ஓ: யுவராஜ்

Work on GV Prakash’s romantic thriller film begins with pooja

More Articles
Follows