சமாரா விமர்சனம்.. VIRUS vs BIO WAR

சமாரா விமர்சனம்.. VIRUS vs BIO WAR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம் உருவான ‘சமாரா’ படம் தற்போது தமிழில் வெளியாகியுள்ளது. பரத் மற்றும் ரஹ்மான் நடித்துள்ளனர்.

ஒட்டு மொத்த படத்தையும் காஷ்மீரில் படம் பிடித்துள்ளார் இயக்குநர் சார்லஸ் ஜோசப்.

கதைக்களம்…

முன்னாள் இராணுவ அதிகாரி பினோஜ் வில்யா தீவிரவாதிகளுடன் போரிடும்போது விஷ வைரஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்.

ஆனாலும் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் தனிமையில் வசிக்கிறார். காரணம் இவரின் கோர முகத்தை பார்த்து மனைவி மகளுடன் பிரிந்து செல்கிறார்.

பருவ வயதை அடைந்த மகள் காதலில் விழுகிறார். இந்த நிலையில் உடல் தேவைக்காக ஒரு விபச்சாரி பெண்ணை அழைத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் பினோஜ்.

இப்படியான சூழ்நிலையில் ஒரு நாள் இவரின் மகள் சஞ்சனா பனிமலையில் இயற்கை காட்சிகளை படமாக்கி கொண்டிருக்கும்போது திடீரென கால் தடுமாறி விழுகிறார். அப்போது ஏற்கனவே பனிமலையில் இரு உடல்கள் சடலங்கள் கிடைக்கிறது. அந்த சடலத்துடன் சஞ்சனாவின் முகம் ஒட்டும்போது சடலத்தில் உள்ள வைரஸ் இவர் மீது தொற்றிக் கொள்கிறது.

இந்த சூழ்நிலையில் காவல்துறை அதிகாரி ரகுமான் விசாரிக்க வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? இந்தியாவில் வைரஸ் எப்படி வந்தது? ஏற்கனவே பாதிக்கப்பட்ட தந்தைக்கும் வைரசுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? இதனை முறியடிக்க சமாரா எப்படி வந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தில் வித்தியாசமான டாக்டர் கேரக்டரில் வருகிறார் பரத். இவரது கேரக்டர் திடீரென வந்து திடீரென காணாமல் போகிறது. ஆனால் அதை காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் சரி செய்திருக்கலாம்.

நேர்மையான கம்பீரத்துடன் போலீஸ் கேரக்டரில் ரகளை செய்கிறார் ரகுமான். இவரது அறிமுகம் அசத்தல். முழுக்க முழுக்க பனிமலைகளில் காட்சிகளை படமாக்கியுள்ளதால் அதற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்துள்ளார் காஸ்டியூமர்.

கோர முக கேரக்டரில் பினோஜ். ஒரு நடிகனை ரசிகர்களிடம் அடையாளப்படுத்துவது முகம் தான். அதனை இப்படி காட்டுவதற்கு அந்த நடிகருக்கு வந்த தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இவரின் மகளாக நடித்துள்ள சஞ்சனா கொள்ளை அழகு. உதட்டழகிலும் கண்ணழகிலும் அந்த காஷ்மீர் குளிரிலும் நம்மை சூடேற்றுவார் போல.

இவர்களுடன் ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ் வில்லியா, வீர் ஆர்யன், மீர் சர்வார், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், நீட் சௌத்ரி, ஷபரீஷ் வர்மா, விவியா சாந்த் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்கள்…

எம்.கே.சுபாகரன் மற்றும் அனுஜ் வர்கீஸ் வில்லியதத் தயாரித்துள்ளனர்.

சினு சித்தார்த்த் ஒளிப்பதிவு செய்ய அயூப் கான் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தீபக் வாரியர் இசையமைக்க, கோபி சுந்தரின் பின்னணி இசையமைத்துள்ளார்.

காஷ்மீர் அழகை பார்க்க காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் இந்த படத்தை பார்த்தால் போதும் என சமாரா ஒளிப்பதிவாளர் சவால் விடுத்துள்ளார்.

அதுபோல் திரில்லர் காட்சிகளுக்கு ஏற்ப போலீஸ் விசாரணைக்கு ஏற்ப பின்னிசையை கொடுத்திருக்கிறார் கோபி சுந்தர்.

1961 ஆண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு நடனத்தில் வைரஸ் தொற்று பின்னர் எப்படி ஊடுருவியது என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஆனால் அதை சொன்ன விதத்தில் குழப்பமான கேரக்டர்களை வைத்துவிட்டார்.

வைரசை முறியடிக்கும் BIO WAR சமாரா என வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.

ஆக சமாரா… வித்தியாசமான முயற்சி

Samara movie review and rating in tamil

ஃ அக்கு விமர்சனம்… கர்மா இயக்குநர்

ஃ அக்கு விமர்சனம்… கர்மா இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு பிரபல இயக்குனரின் உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகின்றனர். இவர்களெல்லாம் கொல்லப்படும் நேரத்தில் சரியாக கொல்லப்படும் முறையை வரைந்து கொடுக்கிறார் கிறுக்கு ஓவியர்.

இந்த ஓவியருக்கும் கொலையாளிக்கும் என்ன தொடர்பு? கொல்லப்பட்ட உதவி இயக்குனர்கள் எல்லாம் நாயகன் ப்ரஜனின் நண்பர்கள். எனவே காவல் துறைக்கு பிரஜின் மீது சந்தேகம் வருகிறது.

இறுதியில் என்ன ஆனது? இயக்குனர் உதவி இயக்குனர்களை கொல்ல என்ன காரணம்? பிரஜின் நிரபராதி என்றால் குற்றவாளி யார்? ஓவியர் முன்பே கணிப்பது எப்படி.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக பிரஜின். செய்யாத குற்றத்தில் இருந்து தப்பமுடியாமல்.. பயந்து ஓடுவது பதட்டம் நவரசம் காட்ட முயற்சித்துள்ளார். இவரின் நண்பர்கள் நட்புக்கும் கதைக்கும் கை கொடுத்துள்ளனர்.

கலக்கப்போவது நிகழ்ச்சி சரத் ஏதோ வந்து செல்கிறார். அவருக்கு நகைச்சுவை கொடுத்து படத்திற்கு கலகலப்பு ஊட்டி இருக்கலாம்.

நாயகியாக காயத்ரி ரெமோ சினிமாவில் வாய்ப்பு தேடும் அப்பாவி இளம் பெண் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார் என்பதை தன் நடிப்பில் உணர்த்திருக்கிறார்.

சினிமாவில் ஆளுமை கொண்ட இயக்குனர்கள் நடிகைகளை / பெண்களை ஆள நினைப்பதை காட்சிகளில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஸ்டாலின். இவரே இயக்குனர் கேரக்டரில் நடித்திருப்பதால் அந்த உணர்வை சரியாக பிரதிபலிக்கிறார்.

மனநல நிபுணராக ராமநாதன், கிறுக்கு ஓவியராக வடக்குவாசல் ரமேஷ் உள்ளிட்டோர் கச்சிதம். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் சில காட்சிகள் ஓகே என்றாலும் பதட்டப்படும் காட்சிகளில் ஓவர் ஆக்டிங்.

டெக்னீசியன்கள்…

கதைக்கு ஏற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். தேவசூர்யா ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனத்தை செலுத்தி இருக்கலாம். இரவு நேரக் காட்சிகளில் பெரிதாக மெனக்கெடல் இல்லை என்பது தெரிகிறது.

படத்தை இயக்கிய வெ.ஸ்டாலின் படத்தில் இயக்குனராக முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வாய்ப்பு தேடும் பெண்கள் இப்படி தான் சினிமாவில் நடத்தப்படுகிறார்களா என்பதை இயக்குனர் தான் விளக்க வேண்டும்.

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘ஃ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

கர்மா ஒருபோதும் மன்னிக்காது என்ற கருத்தை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். ஆனால் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை கோட்டை விட்டுள்ளார்.

Akku movie review and rating in tamil

800 பட விமர்சனம்.. முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

800 பட விமர்சனம்.. முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னோட்டம்…

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை `800′ என்ற பெயரில் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கனிமொழி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

முதலில் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க இருந்தார். அதுபோல நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு வலுத்தது.

ஈழத்தில் நடைபெற்ற போரின்போது, சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தமிழீழப் (விடுதலைப்புலிகள்) போராளிகளை விமர்சித்து பேசியவர் முத்தையா முரளிதரன். எனவே, முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்க தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே விலகினார்.

இந்த 800 படத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பட நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார்.

கதைக்களம்..

நடிகர்கள் நாசரும் ஹரிகிருஷ்ணனும் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் முத்தையா முரளிதரன் படைத்த சாதனை சந்திந்த சோதனை ஆகியவை குறித்து உரையாடி கொண்டிருப்பதாக கதை நகர்கிறது.

பெரும்பாலும் ஒரு விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் போட்டிகளும் அவர்களின் வாழ்க்கை முறையும் ஏழ்மை வறுமை ஆகியவை தான் எதிரியாக உருவெடுத்து இருந்திருக்கும்.

ஆனால் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை பொருத்தவரை அவர் வாழ்ந்த இலங்கையும் அதில் அவ்வப்போது நடைபெறும் போர்க்களமும் அவரின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்தன.

மேட்ச் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென எழும் வெடிச்சத்தம் துப்பாக்கிச் சூடு மற்றும் சிங்களர்கள் போராட்டம் விடுதலைப் புலிகளின் போராட்டம் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.

சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட முத்தையா முரளிதரன் எதிர்கொண்ட சவால்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி அவர் படைத்த சாதனைகள் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

இலங்கையை தாண்டி நடைபெற்ற போட்டிகளுக்காக அவர் இந்தியா வந்தது ஆஸ்திரேலியா சென்றது என அனைத்தையும் நாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி.

அவரின் இல்லற வாழ்க்கை.. சந்தித்த பிரச்சனைகள்.. வளைந்த முழங்கை.. பங்கேற்ற போட்டிகள்.. என அனைத்தையும் சுவாரசியமாக கொடுத்துள்ளனர்.

கேரக்டர்கள்…

கிரிக்கெட் போட்டி வாய்ப்புகள் அமைந்தாலும் அதில் ஏற்படும் தடைகள் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது உடல் மொழியை மாற்றி கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் நாயகன் மதுர் மிட்டல்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நரேன் தோன்றியிருக்கிறார். இலங்கைத் தமிழ் கலந்த பாஷையை நரேன் பேசும்போது பிரபாகரன் பேசும் உணர்வை தருகிறது.

தலைவர் பிரபாகரனை மதுர்மிட்டல் சந்திக்கும்போது ‘ஆயுதத்தை எதிர்க்க ஆயுதம் ஏந்துவது சரியா?’ என கேட்கிறார். அந்த துணிச்சல் பாராட்டுக்குரியது.

அந்த நேரத்தில்.. மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது எப்படி சரியாக இருக்கும் ? என பிரபாகரன் கேட்பது சாட்டையடி.

ஒரு தமிழனாக வளர்ந்து இலங்கை நாட்டுக்காக அவர் விளையாடும்போது இரு இனத்திற்காகவும் அவர் பேசும் வசனங்கள் அவரின் நடுநிலையை காட்டுகிறது.

மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

முத்தையா முரளிதரனின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, குட்டி பையன் முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, கிரிக்கெட் கோச்சாக சரத் லோகிதஸ்வா, விடுதலைப்புலி பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக காஸ்ட்யூமர் சத்யா என அனைத்தும் கச்சிதம். கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் கேரக்டர் தேர்விலும் இயக்குனர் அக்கறை காட்டி இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்கள்…

ஜிப்ரான் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

1980 – 90களில் அமைந்திருந்த கிரிக்கெட் ஸ்டேடியம்.. அப்போது பயன்படுத்திய கார்கள்.. உடைகள், கிரிக்கெட் யூனிபார்ம் என அனைத்தையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர்.

முக்கியமாக முத்தையா முரளிதரன் பங்கேற்ற போட்டிகள் நடைபெறும் இடங்கள் நடைபெற்ற சம்பவங்கள் என அனைத்தையும் திரையில் வார்த்தைகளாக காட்டுவதால் படத்தை எளிதில் புரிந்து கொண்டு அதனுடன் பயணிக்க முடிகிறது.

பின்னணி இசை ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறது. ஒளிப்பதிவு காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரனின் பௌலிங் ஆக்‌ஷன் சர்ச்சை, போட்டிக்கு வந்த தடை, பின்னர் மீண்டு வந்தது ஆகிய சம்பவங்களை அழகாக படமாக்கி இருக்கின்றனர்.

பல சர்ச்சைகள் பல தடைகளை தாண்டி சாதனை படைத்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும்போது எவருடைய மனதும் புண்படாமல் சர்ச்சையை உருவாக்காமல் ஸ்ரீபதி இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆக 800 படம்… முத்தையா முரளிதரனின் சரித்திர கதை

800 movie review and rating in tamil

எனக்கு என்டே கிடையாது விமர்சனம்.. 4/5..; பார்ட் 2 எப்போ வரும்

எனக்கு என்டே கிடையாது விமர்சனம்.. 4/5..; பார்ட் 2 எப்போ வரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

நாயகி ஸ்வயம் சித்தா.. பணக்கார பெண்மணி. ஹைடெக் லைஃப் & நைட் பார்ட்டி இரவு பார்ட்டியை முடித்துவிட்டு வெளியே வந்து கார் புக்கிங் செய்கிறார்.

அவர் வீட்டுக்கு பயணிக்கும் வழியில் கார் டிரைவருடன் நட்பாக பேசுகிறார். இதனையடுத்து வீட்டில் கணவர் இல்லை வா என்னோடு வந்து சரக்கு அடிக்கலாம் என அழைக்கிறார். ஒரு பிகர் அழைக்கும்போது நாயகன் விக்ரம் ரமேஷும் ஓகே சொல்கிறார்.

நைட்டு.. போதை.. தனிமை அதிகமாகவே இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். காலையில் நாயகன் எழுந்து பார்க்கும் போது நாயகி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

வீட்டில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கும் போது தான் அந்த வீட்டிற்கு சாவி இல்லை.. பாஸ்வேர்டு லாக் மட்டும் தான் இருக்கிறது என்பதை அறிகிறார். அப்போது அங்கே வேறு ஒரு திருடனும் இருக்கிறான். அவர்தான் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.

இருவரும் ஒரு வழியாக பேசி வெளியே செல்ல நினைக்கும் போது அரசியல்வாதி மஸ்தான் உள்ளே வருகிறார். பின்னர் தான் மூவரும் வீட்டில் சிக்கிக் கொண்டதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

நாயகி எப்படி இறந்தார்? வீட்டில் இருந்து தப்பித்தார்களா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்..

படத்தின் நாயகன் இயக்குனர் என இரண்டு பொறுப்புகளையும் எடுத்து படத்திற்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் விக்ரம் ரமேஷ்.

நாயகி ஸ்வயம் சித்தா.. கொஞ்ச நேரம் தான் என்றாலும் அவரும் போதை ஏற்றி நம்மையும் போதைக்கு உள்ளாக்குகிறார்.

விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன் & சிவக்குமார் ஆகிய மூவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். விக்ரம் ரமேஷ் ஸ்மார்ட்டாக இருக்கிறார். இனி இவருக்கு வாய்ப்புகள் தேடி வரும்.

தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சின்ன கேரக்டர் என்றாலும் கவனிக்கும்படியான நடிப்பை கொடுத்திருக்கிறார். துருதுரு இளைஞராக தன்னை வெளிக்காட்டி இருக்கிறார்.

அரசியல்வாதி சிவக்குமார் நானும் சளைத்தவன் அல்ல என போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

டெக்னீசியன்ஸ்…

பொதுவாகவே ஒரு படம் ஹிட்டு கொடுத்தால் அடுத்த படத்தை எடுக்கும்போது ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று போஸ்டரில் பெயரிடுவார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஃப்ரம் தி டைரக்டர் ஆப் என்று இந்த படத்தின் பெயரை போடுகிறார்கள். இதிலிருந்து அவர்களின் நம்பிக்கை தெரிகிறது.

அது மட்டும் இல்லாமல் டைட்டில் கார்டிலும் வித்தியாசம் காட்டப்படுகிறது. இடையிடையே வந்து செல்லும் டைட்டில் கார்டுகளும் ரசிக்க வைக்கிறது.

தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்ய கலாச்சரண் இசையமைத்துள்ளார். ஒரே அறையில் படமாக்கினாலும் பல கேமரா ஆங்கிள்கள் கொடுத்து காட்சியை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். அதுபோல இறைச்சல் இசையை கொடுக்காமல் இதமாக கொடுத்து நம்மை உற்சாகமூட்டுகிறார் இசையமைப்பாளர்.

பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் இந்த படத்தை பார்த்து ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் என்பவர் வெளியிடுகிறார்.

ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

ஆக… எனக்கு என்டே கிடையாது.. இந்தப் படத்திற்கு எண்டு இருந்தாலும் பார்ட் 2 எப்போது வரும்? என இறுதியாக கேட்க வைக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ்.

Enaku Endey Kidaiyaathu movie review and rating in tamil

தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் வசீகரன் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் ‘தி ரோடு’. இதில் திரிஷா, மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, செம்மலர் அன்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

கிராமத்து ஆசாமி வேல ராமமூர்த்தி. இவரது மகன் ‘டான்சிங் ரோஸ் புகழ்’ சபீர் இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அங்கே பயிலும் ஒரு மாணவி இவரை காதலிக்கிறார்.

ஆனால் நான் ஒரு ஆசிரியர்.. உன்னை காதலிக்க முடியாது என சபீர் சொல்ல அவரை பழிவாங்க பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளிக்கிறார் மாணவி.

இதனையடுத்து சபீர் வேலை போகிறது. பிறகு வேறு வேலை தேடி செல்கிறார் சபீர். அரசு வேலைக்கு பணம் கொடுத்து அரசியல்வாதியிடம் ஏமாந்து விடுகிறார்.

இப்படியாக விரக்தியில் இருக்கிறார் ஷபீர். அடுத்ததாக என்ன செய்தார்.?

இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. நாயகி த்ரிஷா அவரது கணவர் சந்தோஷ பிரதாப் இவர்களின் மகன் கவின். த்ரிஷா கர்ப்பமாக இருப்பதால் அவரை விட்டுவிட்டு தன் மகனின் பிறந்தநாளை கன்னியாகுமரியில் கொண்டாட ரோடு வழி பயணமாக செல்கின்றனர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கவின்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நேசந்தி என்ற பகுதியருகே ஏற்படும் விபத்தில் மரணம் அடைகின்றனர்.

கணவன் மற்றும் மகனை இழந்த திரிஷா விபத்து நடந்து இடத்தை பார்வையிடும்போது அங்குள்ள மக்களை சந்திக்கிறார். அவர்கள் இந்த பகுதியில் இதுவரை பல விபத்தில் மரணங்கள் நடைபெற்றுள்ளன என்கின்றனர்.

இதனால் சந்தேகம் அடையும் த்ரிஷா தனது கணவருக்கு ஏற்பட்டது விபத்தா கொலையா என்பதை ஆராய விசாரணையில் இறங்குகின்றார். அதன் பின்னர் என்ன நடந்தது? ஷபீர் யார்? அதன் பிறகு என்ன செய்தார்? திரிஷாவுக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்ஸ்…

இடைவேளை வரை சாந்தமான த்ரிஷா இடைவேளைக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் காவல்துறையோ சட்டமோ கை கொடுக்காது நாமே களத்தில் இறங்கி போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவருக்கு தான் வலி தெரியும் மற்றவர்களுக்கு அந்த சம்பவம் ஒரு செய்தி என்பதை எம் எஸ் பாஸ்கர் பேசும் வசனம் காட்டுகிறது.

தோழிக்கு கை கொடுத்து கதைக்கும் கை கொடுத்து இருக்கிறார் மியா ஜார்ஜ். இவரது கணவராக விவேவ் பிரசன்னா. ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

வேல ராமமூர்த்தி & செம்மலர் அன்னம் ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

திரிஷாவின் கதை.. சபரின் கதை என மாற்றி மாற்றி காட்டிக் கொண்டே இருப்பதால் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்பது புரியவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் இல் அதற்கான விடை கொடுத்திருக்கிறார்.

இடைவேளை முடிந்து 1 1/2 நேரம் படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீளத்தை எடிட்டர் வெட்டியிருக்கலாம். ஒருவேளை பெரிய ரோடாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் இதில் மாணவிக்கு ஆசிரியர் மீது மாணவி பாலியல் தொல்லை பொய் புகார் கொடுப்பது வித்தியாசமானது. இப்படியும் சில மாணவிகளா என புரிய வைக்கிறது?! கிளைமாக்ஸ்சில் இந்த கதையின் திருப்பம் எதிர்பாராத ஒன்று.

டெக்னீசியன்ஸ்…

ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நெடுஞ்சாலை பயணம் நமக்கு நெடுந்தயரம் எனலாம். சாதாரணமாக காரில் ஜாலி ட்ரிப் என நினைக்கும் நாம் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கிறதா என வியக்க வைக்கிறது.

சாலை பயணமும் கல்லூரி காட்சிகளும் ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மிரட்டலான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ்.

அருண் வசீகரன் இயக்கியிருக்கும் இந்த படம் வித்தியாசமானது. அவர் அறிமுக இயக்குனர் என்றாலும் அது எங்கேயும் தெரியாத வண்ணம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரியது.

ஆக… தி ரோடு.. நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு

The road movie review and rating in tamil

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘இந்த கிரைம் தப்பில்ல’.

கதைக்களம்…

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின்னர் இறுதியாக இரண்டையும் இணைத்து ஒரு முடிச்சு போட்டு இருக்கிறார்.

ஒரு பக்கம்.. ஒரு பெண்ணை துரத்தி துரத்தி மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். அந்த நண்பர்களுக்கே தெரியாமல் தன் பெயரை மாற்றி சொல்லி மூவரையும் காதலிப்பதாக சொல்கிறார் நாயகி மேக்னா.

இந்த கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்… ஆடுகளம் நரேன் தலைமையில் சில இளைஞர்கள் சமூகத்திற்காக போராடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் காதலிப்பதாக சொன்ன 3 ஆண்களையும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வரச் சொல்கிறார் நாயகி மேக்னா. அங்கு மூவருக்கும் தண்டனை கொடுக்கப்படுகிறது.

அவர்கள் யார்? அவர்களை தண்டிக்க என்ன காரணம்.? இந்த பெண் யார்? ஆடுகளம் நரேன் அவரின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

அழகு மேனகையாக மேக்னா. தன் பெயருக்கு ஏற்ப அழகாக ஜொலிக்கிறார். ஆனால் அவர் 3 பேரை காதலிப்பதிலேயே அவரின் சூழ்ச்சி தெரிகிறது. இவரே கதையின் நாயகி என்பதால் கூடுதல் சிரமம் எடுத்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால்..??

மேக்னாவை சுற்றும் 3 ஆண்களுமே நாடகத்தனமான நடிப்பை கொடுத்துள்ளனர். நடிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

ஆடுகளம் நரேன் நன்றாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற வாருங்கள் என நாயகி இவரை அழைக்கிறார். ஆனால் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒரு சமூக போராளி பேசுவாரா? என்று தெரியவில்லை.

ஒரு குற்றவாளியை தண்டிக்க நாமும் ஒரு குற்றம் செய்யலாம் என சொல்ல வருகிறது இந்தக் கிரைம் தப்பு இல்லை.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.. சட்டம் ஒழுங்கும் சரியில்லை.. காவல் துறையும் பெண்களை பாதுகாக்கவில்லை என சொல்கிறார் இயக்குனர் தேவகுமார்.

கற்பழிப்புக்கு நிரந்தர தீர்வு குற்றவாளிகளை தண்டிப்பது மட்டும்தான். எனவே தண்டிப்பவர்களுக்கு ஆதரவாக இந்த க்ரைம் தப்பில்லை என்று சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் திரைக்கதை அமைத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவு பாடல்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. படத்தின் படத்தொகுப்பாளரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஆக இந்த கிரைம் தப்பில்லை.. படத்தை பார்க்கலேனாலும் தப்பில்லை..

Indha Crime Thappilla movie review and rating in tamil

More Articles
Follows