ஆழமான காதல்… ஒன்பது குழி சம்பத் விமர்சனம் – 3.25/5

ஆழமான காதல்… ஒன்பது குழி சம்பத் விமர்சனம் – 3.25/5

நடிப்பு – பாலாஜி மகாராஜா, நிகிலா விமல், அப்புக்குட்டி, இந்திரன்
இயக்கம் – ஜா. ரகுபதி
இசை – வி.ஏ. சார்லி
ஒளிப்பதிவாளர் – கொளஞ்சிகுமார்
எடிட்டர் – தீனா
வெளியீடு.. ஆன்லைன்
தயாரிப்பு – 80-20 பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் : ரஞ்சித் குமார் பாலு மற்றும் ஜிகே. திருநாவுக்கரசு

கதைக்களம்…

‘ஒன்பது குழி’ கோலி விளையாட்டில் கில்லி இப்பட நாயகன் பாலாஜி.

வேலை வெட்டிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி கொண்டிருக்கிறார். வீட்டில் அம்மா மட்டும்தான். ஆனால் அம்மாவிடம் பேசாமலேயே 14 வருடங்களை கடந்துவிடுகிறார்.

அதே ஊரில் வசிக்கும் கல்லூரி மாணவி நிகிலா விமல் (இவருக்கு இதுதான் முதல் படம்.. இதில் தான் அறிமுகம்)

நாயகி நிகிலாவை பாலாஜி காதலிக்க, வீட்டிற்கே சென்று பெண் கேட்கிறார். ஆனால் காதலை மறுத்து பாலாஜியை துடைப்பத்தால் அடித்துவிடுகிறார் நிகிலா.

இதனால் தற்கொலை செய்துக் கொள்ள துணிகிறார் பாலாஜி.

பின்னர் தன் தற்கொலையால் அவளுக்கு கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் சம்பத் (பாலாஜி மகாராஜா). கிராமத்து இளைஞனுக்கு உரிய அதே கெத்து. வெட்டி பந்தா. ஊதாரித்தனமான முரட்டுக்காளையை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

நாயகியாக நிகிலா விமல். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதற்கேற்ப தன் கேரக்டரின் வலியை உணர்ந்து நடித்திருக்கிறார். மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பாலாஜியின் நண்பனாக அப்புக்குட்டி. நிறைய காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பாலாஜி அம்மா, நாயகியின் பெற்றோர், நிகிலாவின் அண்ணா ஆகியேரின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது. அச்சு அசல் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வி.ஏ.சார்லியின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சியில் நாயகன் பாடும் இழவு பாடல் தேவையற்றது. எடிட்டர் வெட்டி எறிந்திருக்கலாம்.

படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர்தான். கொளஞ்சிகுமார் கைவண்ணத்தில் காட்சி அத்தனையும் அழகு.

படத்தை இயக்கியிருப்பவர் ரகுபதி. வழக்கம்போல காதல் கதை என்றாலும் படத்தின் க்ளைமாக்சில் எதிர்பாராத ஒன்றை கொடுத்திருப்பது பாராட்டு.

இதுபோல காதல் கதைகளில் க்ளைமாக்ஸ் நெகட்டிவ்வாக இருப்பது ஏனோ? ஆனால் அதுவே ரசிகர்கள் மனதை ரணமாக்குகிறது. வாழ்த்துக்கள் சார்.

ஆக மொத்தம்… ஒன்பது குழி சம்பத் – ஆழமான காதல்

Comments are closed.