‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாத்தா’.. : ஜனகராஜ் நடித்த குறும்பட விமர்சனம்

‘தாத்தா ‘குறும்படம் விமர்சனம்

ஸ்டோரி…

தாத்தா ஜனகராஜ் தனது மனைவி ரேவதியுடன் (தனிக்குடித்தனம்) வசித்து வருகிறார்… தள்ளாத வயதிலும் ஒரு வீட்டின் செக்யூரிட்டியாக பணிபுரிந்து தனது வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் ஒரு நாள் அப்பாவிடம் தனது மகனை விட்டு செல்கின்றார்.

பேரன் வந்த சந்தோஷத்தில் தாத்தாவும் பாட்டியும் தலக்கால் புரியாமல் பேரனுக்காக ஒவ்வொரு விஷயமாக செய்கின்றனர். ஒரு கட்டத்தில் அவனுக்கு வீட்டில் போர் அடிக்கவே வேறு ஒரு வீட்டிற்கு சென்று விளையாடுகிறான்.

அப்போது ரிமோட் கார் ஒன்றை பார்க்கிறான்.. தனக்கும் ரிமோட் கார் வேண்டும் என தாத்தாவிடம் கேட்கவும் செய்கிறான்.. ஆனால் தாத்தாவிடமோ பணம் இல்லை..

அடுத்தது என்ன நடந்தது..? அடுத்து ஒரு நாள் மட்டுமே பேரன் இருப்பான் என்ற நிலையில் தாத்தா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் இந்த குறும்படத்தில் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஜனகராஜ், ஏ.ரேவதி, ரிஷி, ஞான ஷ்யாம் , மோனிஷ்,கயல் தேவராஜ் ,தீபா , முருகன் மந்திரம், ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேரன் ஆசைப்பட்ட ஒரு சிறிய ரிமோட் காராக இருந்தாலும் அதை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தாத்தாவிடம் மேலங்கி நிற்பதை ஒவ்வொரு காட்சியும் தன் கண்களில் கூட உணர வைத்து நடித்திருக்கிறார் ஜனகராஜ்.

இவரை நாம் பல படங்களில் காமெடியனாக மட்டுமே பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க தன் பேரனுக்காக உருகும் ஒரு தாத்தாவாக நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜனகராஜ் மீண்டும் படங்களின் நடிக்க வேண்டும் என்பதே இந்த குறும்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும்.

இது ஒரு சிறிய குறும்படம் என்றாலும் அதிலும் கூட அன்பு, பாசம், துயரம், பூரிப்பு என அனைத்தையும் அனாயாசமாக வெளிப்படுத்தி உள்ளார்.

அவரது மனைவியாக நடித்துள்ள ரேவதியும் பாசம் காட்டும் பாட்டியாக சிறப்பு.

பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாமும் இயல்பாக நடித்திருக்கிறார் முக்கியமாக தாத்தா கார் என்று அவன் சொல்லும் வார்த்தைகளில் ஒரு ஏக்கமும் பரிதவிப்பும் அழகாகவே தெரிகிறது .

ஜனகராஜின் மகனாக ரிஷி நடித்துள்ளார்.

ஜனகராஜுடன் பணியாற்றும் வாட்ச்மேனாக முருகன் மந்திரம் , பழைய பொருட்கள் வாங்கும் ‘காயலான் ‘ கடைக்காரராக யோகி தேவராஜ், பேன்சி ஸ்டார் கடைக்காரராக ராயல் பிரபாகர் நடித்துள்ளனர். ஒரு காட்சி என்றாலும் கவனிக்க வைக்கின்றனர்.

அது போல தன்னிடம் பணம் இல்லை என்றாலும் ஜனகராஜன் விருப்பத்திற்காக கடன் வாங்கி கொடுக்கும் முருகன் மந்திரமும் நம்மை கவர்கிறார்.

டெக்னீசியன்…

இயக்கம்- நரேஷ்,.ஒளிப்பதிவு – வினோத் ராஜா , இசை -அமினா ரஃபீக் – சந்தோஷ் , கலை இயக்கம் – வீரசமர் , எடிட்டிங் -நாஷ், உடைகள் – வாசுகி, மேக் அப் -கயல் , தயாரிப்பு நிர்வாகம் -எஸ். செளத்ரி.
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதா .எஸ் தயாரித்துள்ளார். இந்தக் குறும்படம் ஷார்ட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

குறும்படம் என்றாலும் எங்கும் குறை காணாதபடி அழகாக ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் வினோத் ராஜா..

முக்கியமாக பேரன் ஊஞ்சலாடு காட்சிகளிலும் அந்த வீட்டிற்குள் கேமரா செல்லும் அந்த காட்சியும் ரசிக்க வைக்கிறது.

தாத்தா பாட்டிகள் வாழும் பழைய காலத்து வீட்டை அழகாகவே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர்.

எடிட்டர் நாஷின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பு சிறப்பு.

இயல்பான வேகத்தில் பயணிக்கும் ஆற்றோட்டமான கதை கொண்ட படத்திற்குப் பக்கபலமாக அமினா ரஃபீக், சந்தோஷ் ஆகியோர் அமைத்த பின்னணி இசையும் அமைந்துள்ளது.

இயக்குநர் நரேஷ்.. சொல்ல வந்த விஷயத்தை அழகாக எளிமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. வயதானவர்கள் குழந்தைகளை போல நடந்து கொள்வார்கள் என்பது போல… குழந்தைகளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் தாத்தா பாட்டி நிச்சயம் இந்த 2K கிட்சுக்கு கூட ரொம்ப பிடிக்கும்..

THATHA shortfilm review

Legendary Actor #Janakaraj in #THATHA – heartwarming Grandpa-Grandson story now streaming only on #ShortFlix.

Movie link: shortflix.page.link/49de

@shortflixindia @Naresh_Dir_ @kavithareporter @cinemakaran_dop

அக்கரன் விமர்சனம் 3.5/5… அன்பான உக்கிரன்

அக்கரன் விமர்சனம் 3.5/5… அன்பான உக்கிரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்கரன் விமர்சனம் 3.75/5… ஆவேச உக்கிரன்

ஸ்டோரி…

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. இவரின் மனைவி இறந்து விடுகிறார்.. மனைவியின் போட்டோ மட்டும்?? (👸🏻😭) காட்டப்படுகிறது.

தாய் இல்லாத தன் இரண்டு மகள்களை பாசமாக வளர்த்து வருகிறார். மூத்தவள் வெண்பா.. 2வது மகள் பிரியதர்ஷினி.. அம்மா இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை & தங்கையை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் வெண்பா.

ஒரு கட்டத்தில் படிக்க சென்ற தன் இரண்டாவது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் எம் எஸ் பாஸ்கர். ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் எம் எஸ் பாஸ்கரை களத்தில் இறங்குகிறார்.

இவரது மகள் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? எங்கு சென்றார்? தந்தை எம் எஸ் பாஸ்கர் என்ன செய்தார் மகளை கண்டுபிடித்தார்? தன் தங்கையை தொலைத்த வெண்பா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா

காமெடியன் குணச்சித்திர கேரக்டர் என பல படங்களில் நாம் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்த எம்.எஸ். பாஸ்கர் இதில் முழுக்க முழுக்க ஆக்சன் நாயகனாக மாறி இருக்கிறார். எம் எஸ் பாஸ்கருக்கு ஆக்ஷன் செட் ஆகுமோ? என்ற ஐயம் ரசிகர்கள் மனதில் எழும்.. அதற்கு சூப்பர் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.

தாயை இழந்த மகள்களை ஒரு தகப்பன் எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி அரவணைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை உணர்வுப்பூர்வமான நடித்து காண்பித்திருக்கிறார்.

அம்மா இல்லாத பெண் பிள்ளைகள் எப்படி பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை வெண்பா.. இவரைப் போலவே இவர் உடுத்தும் உடைகள் கூட அவ்வளவு அழகு.. தனக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதை தைரியமாக சொல்லும் அன்பான பெண்ணாக.. அதே சமயத்தில் தன் காதலனுக்காகவும் தன் தந்தைக்காகவும் அவர் உருகும் காட்சிகளிலும் அத்தனை அழகு..

கபாலி விஸ்வந்த் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் இதில் கதையின் நாயகனாக திருப்புமுனை கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக செய்திருக்கிறார்..

வெள்ளையாக இருந்தாலும் வில்லனாக இருக்கலாம் கருப்பாக இருந்தாலும் கதையின் நாயகனாக இருக்கலாம் என இரண்டு பாத்திரங்களை கபாலி விஸ்வந்த் மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் செய்திருக்கின்றனர்.

மற்ற வில்லன் கார்த்திக் சந்திரசேகரும் ஒரு அனுபவமிக்க நடிகரை போல செய்து இருக்கிறார்..

இவர்களுடன் அரசியல்வாதி நமோ நாராயணன் / சிஸ்டர் பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கண்ணன் / மஹிமா ஆகியோரும் உண்டு.. இவர்கள் கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ் …

எழுத்து & இயக்கம் – அருண் K பிரசாத்
இசை – ஹரி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்

படம் தொடங்கிய சில நிமிடங்களில் கதையின் வேகம் ஆரம்பித்து விடுகிறது. எனவே எந்த விதத்திலும் கதை மீதான கவனம் திரும்பி விடக்கூடாது என்பதை உணர்ந்து பாடல்கள் நிறைய இல்லாமல் அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார். அருண் கே பிரசாத்.

வெங்கட்ராமன் குரலில் ஹரியின் இசையில் உருவான ‘தெய்வம் தந்த பூவாய்….’ என்ற பாடல் இனி தந்தை – மகள் பாசத்தை போற்றும் பாடலாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்கலாம்.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களில் பார்க்கலாம்.

எம் ஏ ஆனந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.. காரைக்குடி பகுதிகளில் பார்க்கும் பிரம்மாண்ட வீடு போல அழகான வீட்டை அழகாகவே காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

அருண்கே பிரசாத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஒரு பாசமான தந்தை தன் மகள்களை வளர்க்க படும் அர்ப்பணிப்பு உழைப்பு அனைத்தையும் அழகாக திரைக்கதையில் அமைத்திருக்கிறார்.

அதே நேரம் மகளை தொலைத்த தந்தையின் வேதனை ஆவேசத்தையும் ஒருங்கிணைத்து இந்த அக்கிரனை அக்கறையுடன் உருவாக்கி தந்திருக்கிறார் இயக்குனர்..

ஒரு தந்தை மகள் பற்றிய இந்த கதையில் இத்தனை வன்முறை தேவையா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. முக்கியமாக குடிநீர் குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல வன்முறை காட்சிகளை ரத்தம் பீறிட்டு அடிப்பது நம்மை பயமுறுத்துகிறது.. அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

தாயில்லாத பெண் பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை எடுக்கும் அக்கறையும் அர்ப்பணிப்பும் தான் இந்த ‘அக்கரன்’.

Venba Vishwanths Akkaran review

ரத்னம் விமர்சனம்..; மாஸ் ஆக்ஷன்

ரத்னம் விமர்சனம்..; மாஸ் ஆக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்னம் விமர்சனம்… மாஸ் ஆக்ஷன்

நடிகர் விஷால் & இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’.

இந்தப் படத்தில் விஷால் உடன் பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார்.

தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சண்டை பணிகளை கனல் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

கார்த்திகேயன் சந்தானம் ஜி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ரத்னம் படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

ஸ்டோரி…

1994 ஆம் ஆண்டில் கதை தொடங்கி… திருப்பதி செல்லும் பக்தர்களை வழி மறித்து அவர்களிடம் தங்கச் செயின்களை பறிக்கிறது கொள்ளையர் கூட்டம்.. இப்படியாக தமிழக – ஆந்திர எல்லையில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது இந்த கும்பல்

மற்றொருபுறம் வேலூரில் சமுத்திரகனியை கொல்ல வரும் ஒரு கும்பலிடம் இருந்து சிறுவயது விஷால் காப்பாற்றுகிறார்.

இந்த இரண்டு கதைகளும் 30 ஆண்டுகளுக்குப் பின் நகருகிறது.. 2024 ஆம் ஆண்டு கதை தொடங்குகிறது..

வேலூரில் சட்டமன்ற உறுப்பினராக எம்எல்ஏவாக வளர்ந்து நிற்கும் சமுத்திரகனிக்கு தளபதியாக வளர்ந்து நிற்கிறார் விஷால்.

ஒரு கட்டத்தில்.. மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் மெடிக்கல் சீட் கிடைக்காமல் 4வது முறையாக நீட் எழுத வேலூர் வருகிறார் பிரியா பவானி சங்கர்.. இவரை பார்த்த உடனே இவருக்காக ஓடி ஓடி நிற்கிறார் விஷால்.

பிரியாவைக் கொல்ல ஒரு கும்பலிடம் இருந்து தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுகிறார்.. இது காதலாக இருக்குமோ என்ற நம்பிக்கையில் காதலை பிரியா சொல்ல நான் உன்னை காதலிக்கவில்லை என்கிறார் விஷால்.

அப்படி என்றால் பிரியாவுக்காக விஷால் ஓடி நிற்க காரணம் என்ன? இருவருக்கும் உள்ள பந்தம் என்ன?

பிரியாவைக் கொல்ல வரும் கும்பலின் நோக்கம் என்ன அவர்களின் பின்னணி என்ன? என்பதெல்லாம் படத்தின் மீதி கதை

கேரக்டர்ஸ்…

நாயகன் விஷால் நாயகி ப்ரியா பவானி சங்கர் என்றாலும் இருவருக்கும் ஜோடியாக பாடல் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது இயக்குனர் ஹரியின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.. அதில் ஒரு அம்மா சென்டிமென்ட் இணைத்து இருப்பது வித்தியாசமான கற்பனை.

விஷாலின் ஆக்ஷனுக்கு டன் கணக்கில் தீனி போட்டு இருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்… திரை எங்கும் ரத்த தெறிக்கும் அளவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது..

விஷாலுக்கு அடியாள் போல அதகளம் செய்து இருக்கிறார் யோகி பாபு.

கலகலப்புக்கு இரண்டு ஆள் வேண்டும் என்ற பெயரில் யோகி பாபு & மொட்ட ராஜேந்திரனும்.. இவர்களின் காமெடி படத்தை டிஸ்டர்ப் செய்கிறது..

நாயகி பிரியா பவானி சங்கர்.. நீட் மெடிக்கல் தேர்வை பற்றி பேசும் காட்சி மாணவர்களின் வலியை உணர்த்துகிறது.. இரண்டு தோற்றங்களில் வந்து இரு விதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நல்லவன் பாதி கெட்டவன் பாதி என்ற என்ற கொள்கை கேரக்டரில் அசத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.. விஷால் போடும் ஒவ்வொரு ஸ்கெட்சுக்கும் இவர் உதவும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

தங்க செயின்களை பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்கள் பெரிய தாதாக்களாக வளர்ந்து ஆந்திராவை மிரட்டும் வில்லன்களாக முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார் ஆகியோர் மாஸ் வில்லன்கள்.. அதிலும் மெயின் வில்லன் முரளி சர்மாவின் இன்ட்ரோ சீன் செம பில்டப்..

என்னதான் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் ஹரி படத்தில் நடிக்கும் போது படபடவென பேசித்தானே ஆக வேண்டும்.. கௌதம் மேனன் ஒரே ஒரு காட்சியில் வந்து வேகமாக பேசி செல்கிறார்.

ஆந்திர அமைச்சராக கஜராஜ் கச்சிதம்..

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஒய் ஜி மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

படம் தொடங்கிய சில நிமிடங்களில் வரும் தாய் மகன் பாச பாடல் ரசிகர்களை கவரும்.. இதனை அடுத்து சில நிமிடங்களில் வரும் டோன்ட் ஒரி என்ற பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

எதுக்காக வந்து நிக்கிற? என் மேல் என்ன அக்கறை? என்ற பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.

பாடல்களை விட பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. அதுவும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி அதிர வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணத்தில் காட்சிகளில் விறுவிறுப்பு தொற்றிக் கொள்கிறது..

ஹரி படங்கள் என்றாலே வேகத்திற்கு பஞ்சம் இருக்காது.. வேகம் என்றாலும் குடும்ப செண்டிமெண்ட் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் அந்த டெம்ப்ளேட் ஃபார்முலாவை மீறி தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லையில் கதையை நகர்த்தி இருக்கிறார்.

நீட் தேர்வு… தமிழகம் & ஆந்திர அரசியல்… பிராமணர்களின் வாழ்க்கை முறை.. அவர்களின் பழிவாங்கும் எண்ணம்… வழிப்பறி கொள்ளையர்கள் இப்படி பல கதைகளை இணைத்து இரண்டு படங்களாக சொல்ல வந்த கதையை ஒரே படத்தில் எடிட்டிங் செய்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஹரியின் அதிரடி வேகம் விஷாலின் ஆக்சன் வேகம் என இரண்டும் கலந்து விறுவிறுப்பாக செல்கிறது.. அரை மணி நேரத்திற்கு ஒரு ஃபைட் என தெறிக்க விட்டிருக்கிறார் பைட் மாஸ்டர் கனல் கண்ணன்.. இவை நிச்சயம் தெலுங்கில் தெறிக்கவிடும்..

Vishals Rathnam movie review

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நொடி விமர்சனம்… 3.75/5..

ஒரு நொடி என்பது வாழ்க்கையில் சாதாரணமாக விஷயமாக சாதாரண மனிதனுக்கு தோன்றலாம்.. ஆனால் அந்த ஒரு நொடி என்பது ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களுக்கு பெரிய விஷயமாகும்..

அதுபோல ஒருவனின் வாழ்க்கையில் அந்த ஒரு நொடி என்ன செய்தது? அவனின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஸ்டோரி…

தன் கணவர் எம்எஸ் பாஸ்கரை காணவில்லை எனவும் வேலராமமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி..

இந்த வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.

எம் எஸ் பாஸ்கர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என எந்த துப்பும் கிடைக்காத நிலையில் திடீரென நிகிதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவர் தீபாவின் மகள்.

இந்த கொலை தொடர்பான விசாரணையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்காத நிலையில் குழம்பி போகிறார் இன்ஸ்பெக்டர் தமன்குமார்.

இந்த இரு வழக்குகளுக்கும் படத்தின் தலைப்பான ஒரு நொடி-க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன ஆனது? என்பதை சொல்லி த்ரில்லாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

கேரக்டர்ஸ்…

தமன்குமார், நிகிதா, எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபாஷங்கர், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர்.

போலீஸ் வேடத்திற்கு பத்துப் பொருத்தமும் பக்காவாக இருக்கிறது என்பது போல அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார் தமன் குமார். இவருடன் வரும் இதர போலீஸ் அதிகாரிகளும் அருமையான நடிப்பு வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கணவரை தொலைத்த கலக்கம்.. காவல் நிலையம் செல்ல தயக்கம் என இரண்டையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி..

எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.. சின்ன வேடம் என்றாலும் முத்திரை பதித்து விடுவார். இந்த படத்தில் குறைவான காட்சிகளில் வந்து நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இவரின் நண்பராக வரும் கஜராஜன் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நாயகி நிகிதா… பாசம் பதட்டம் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. ஆண்கள் மட்டுமே திரையில் காட்டப்பட்ட போது இவரின் முகம் நமக்கு ஆறுதலை தருகிறது..

நிகிதாவின் அப்பா நடிப்பு ரசிக்க வைக்கிறது… அம்மா தீபா ஷங்கரின் நடிப்பு கவனிக்க வைத்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்..

முடி திருத்தும் கலைஞராக வரும் விக்னேஷ் ஆதித்யா கேரக்டர் எதிர்பாராத திருப்பத்தை கதையில் உண்டாக்குகிறது.

டெக்னீசியன்ஸ்…

கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார்..

பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதிய ‘கொல்லாதே….’ என்ற பாடல் கதையின் உணர்வை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு..

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை க்ரைம் திரில்லருக்கான உணர்வை ஒவ்வொரு நொடியும் தந்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரித்தீஷ் தன்னுடைய கேமரா கோணங்களில் நம்மை படபடக்க வைத்து நகர்த்தி இருக்கிறார்.

முழுக்க முழுக்க ஒரு நொடியை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார்.. எந்த இடத்திலும் வேறு எங்கும் கதை செல்லாத வண்ணம் நாயகன் நாயகி எனக் கதைகளை திசை திருப்பாமல் சீட் நுனியில் நம்மை உட்கார வைத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

நாம் இதுவரை பார்த்த பெரும்பாலான படங்களில் ஒரு கொலை என்றால் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். ஆனால் எதிர்பாராத ஒரு விஷயத்தை வைத்து ஒரு நொடி-யை இயக்குனர் சொன்ன விதம் அருமையோ அருமை..

இன்ஸ்பெக்டர் தமன்குமார் தன்னிச்சையாக செயல்படுவதாகவே படத்தை நகர்த்தி இருப்பது ஒரு கேள்விக்குரி தான்.. இவருக்கு மேலே உயர் அதிகாரிகள் எவருமே இல்லையா?

முதலில் சந்தேக வளையத்துக்குள் வரும் வேலராமமூர்த்தி இறுதியில் என்ன ஆனார் என்பதற்கான விடை எங்கும் இல்லை.

அவரைப்போல மிரட்டல் அரசியல்வாதியாக காட்டப்படும் பழ கருப்பையாவின் கேரக்டரும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் தொலைந்து விடுகிறது.?

எந்த ஒரு திரைக்கதையாக இருந்தாலும் அது ரசிகனுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும்.. இந்த படத்தில் கொலையாளி அவரா இவரா என நம்மையும் யோசிக்க வைத்து படத்துடன் ஒன்றை வைத்து பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிவர்மன்.

மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனஞ்செயன் வழங்குகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

ஆக ஒரு நொடி.. ஒவ்வொரு நொடியும் பதட்டம்

Oru Nodi movie review

NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEVER ESCAPE நெவெர் எஸ்கேப் விமர்சனம்

ஸ்டோரி…

நாம் வசிக்கும் இந்த உலகத்திலேயே பாதாள உலகம் ஒன்று இருக்கிறது.. ஆனால் அதை எவராலும் உணர முடியாது.. சில நபர்களால் தன்னுடைய அதீத சக்தியால் உணர முடியும். இதை கருவாக வைத்து உருவான படம் Never Escape..

சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் சில நபர்கள் வெவ்வேறு காரணத்திற்காக தியேட்டருக்கு வருவார்கள்.. அதே போல இந்த படத்தில் சில நபர்கள் போலீஸிடம் இருந்து தப்பிக்கவும் சிலர் அமானுஷ்ய சக்திகளை படம் பிடிக்க Youtuberகளும் திரையரங்கு உள்ளே வருகின்றனர்.

அங்கு தியேட்டர் ஓனர் ராபர்ட் டிக்கெட் கிழித்து கொடுப்பது முதல் அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர்களால் அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர முடிகிறது.. அந்த சமயத்தில் அவர்களால் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? அமானுஷ்ய சக்தியை எதிர்த்துப் போராடினார்களா.? அந்த தியேட்டரை விட்டு ஓட முயற்சித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

* ராபர்ட் மாஸ்டர் – தியேட்டர் ஓனர்
* ஆதி பிருத்திவி – ஹரிஷ்
* ஹர்ஷினி – மித்ரா
* கவி ஜெ சுந்தரம் – சி எம்
* உவிஸ் கான் – ரெக்ஸ்
* ராஜி – சாரா
* அகிலா சுந்தர் – அகிலா
* ஜெபின் ஜான் – மரியான்
* பிரனேஸ்வர் – வலோகஇர்
சஷ்டி பிரனேஷ் – கேமராமேன்

படத்தின் ஆரம்பத்தில் வெளியுலகம் காட்டப்படுகிறது.. அங்கு எப்போதும் பார்க்கும் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது.. அதன் பின்னர் தியேட்டருக்குள் நுழைந்த பின்னர் தான் கதையின் வேகம் சூடு பிடிக்கிறது..

இடைவேளைக்குப் பிறகு 2வது பாதியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தன் நடனத்தைப் போல அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆளவந்தான் கமல் கஜினி சூர்யா போல மொட்டை போட்டு கலக்கி இருக்கிறார்… ஒரு சைக்கோ கில்லரைப் போல பாடி லாங்குவேஜிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்..

தாங்கள் புதுமுகங்கள் என்னும் தெரியாத அளவிற்கு நடிப்பை கொடுத்திருக்கின்றனர் சிலர்.. ஆனால் டப்பிங் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதில் சில குறைகள் தெளிவாக தெரிகிறது..

டெக்னீசியன்ஸ்…

* பேனர் – ராயல் பி ப்ரோடுக்ஷன் ஹவுஸ்
* தயாரிப்பு – நான்சி ஃப்ளோரா
* கதை மற்றும் இயக்கம் – டி ஸ்ரீ அரவிந்த் தேவராஜ்
* இசை – சரண் குமார்
* டைரக்டர் ஆப் போட்டோகிராபி – சந்தோஷ் குமார் எஸ் ஜே
* எடிட்டர் – குரு பிரதீப்
* ஆர்ட் டைரக்டர் – முத்து
* பாடல் – சாஸ்தா, பொன் லெனின் குமார்
* சவுண்ட் மிக்ஸ் – சி ஜெரோம், சரவண தீபன்
* ஸ்டண்ட் – விஜய் ஜாக்குவார்
* நடனம் – ராபர்ட் மாஸ்டர்

இசையமைப்பாளரான சரண்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

ஒரு திகில் படத்திற்கு உரித்தான கேமரா ஆங்கிள்களை அழகாக காட்டி திகில் ஊட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாஸ்தி பிரனேஷன்.

சில காட்சிகளில் Hollywood ல் The Shining பட பாணியில் எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார். எடிட்டர் குரு பிரதீப்..

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாகேஷ் திரையரங்கம்.. சமீபத்தில் வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படங்கள் திரையரங்கை மையப்படுத்தி பேய் படங்களாக அமைந்திருந்தது.. அந்த பாணியில் இந்த படம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனாலும் அந்த சாயல் இல்லாத வகையில் திரைக்கதையை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ டி அரவிந்த்ராஜ்.

என்னதான் கதை மற்றும் கேரக்டர் தேர்வு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் உள்ள தொய்வு தான் இந்த படத்தை சற்று தளர்ச்சி அடையச் செய்துள்ளது.

Never Escape movie review

ரூபன் திரை விமர்சனம் 3/5

ரூபன் திரை விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரூபன் திரை விமர்சனம் 3/5

வனப்பகுதி பட கதைகள் என்றாலே அதில் இருக்கும் வளங்களை விற்கும் ஒரு கும்பல் நிச்சயமாக இருக்கும். இதில் அந்த கும்பலுடன் ஆன்மீகத்தை கலந்து இந்த ரூபனை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன்.

ஸ்டோரி…

Casting : Vijay Prasad, Gayathri Rema, Charli, Kanja Karuppu, Ramar

ஒரு அடர்ந்த வனப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கிறார்கள் நாயகனும் நாயகியும்.. நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமா.. இவர்களுக்கு குழந்தை இல்லை.. எனவே ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும் இவர்களை யாரும் அழைப்பதில்லை.. சபரிமலைக்கு மாலை போட்டால் கூட யாரும் பூஜையிலும் பங்கேற்பதில்லை..

இதனால் வெறுத்து ஊரை விட்டு ஒதுங்கி / ஒதுக்கப்பட்டு வாழ்கிறார்கள். இப்படியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நாயகனுக்கு திடீரென காட்டில் ஒரு குழந்தை கிடைக்கிறது.. அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார்

இது ஒரு புறம் இருக்க காட்டில் உள்ள யானை சிங்கம் புலி உள்ளிட்ட மிருகங்களை வேட்டையாடி வெளிநாடுகளுக்கு விற்று பிழைப்பு நடத்துகிறார் வில்லன்.

இதனை கண்டுபிடிக்கும் நாயகனை அவர்கள் பழி தீர்க்க நினைக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் ஊருக்குள் புலி வந்து விட்டதாக எல்லாரையும் பயமுறுத்துகின்றனர்.

எனவே ஊருக்குள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என போலீஸ் கட்டு கட்டுப்பாடு விதிக்கிறது.. இதனால் பிழைப்புக்காக நாயகனால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் மர்மமான முறையில் 4 – 5 பேர் கொல்லப்பட கொலைப்பழி நாயகன் மீது விடுகிறது.

இதன்பிறகு என்ன நடந்தது.? நாயகன் நீதியை நிரூபித்தாரா? வில்லன் கோஸ்டி என்ன செய்தது.? ஊருக்கு மீண்டும் வந்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார் நாயகன் விஜய் பிரசாத்.. வீரமான நாயகன் விவேகமான கணவன் என அழகாகவே செய்திருக்கிறார். முகம் முழுவதும் தாடியை வைத்து முகத்தில் உணர்ச்சிகளை மறைத்து விட்டார்.. கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..

நாயகி காயத்ரிக்கு பெரிதாக வேலை இல்லை. கொடுத்து பாத்திரத்தை தன்னால் முடிந்தவரை நிறைவாக செய்ய முற்பட்டிருக்கிறார்.. அதே சமயத்தில் புலி ஊருக்குள் வந்த சமயத்தில் கணவன் வீட்டில் இல்லை என அவர் துடித்துடிக்கும் காட்சி நடிப்பை பாராட்டலாம்.. ஆனால் கணவனை இவர் காப்பாற்றாமல் அடுத்தவர் உதவியை மட்டும் எதிர்பார்த்து வீட்டில் காத்திருப்பது ஏனோ.?

பெரும்பாலும் சார்லி அவரது நடிப்பில் சபாஷ் பெற்று விடுவார்.. இந்த படத்தில் அவருக்கான ஸ்கோப் மிகவும் குறைவு.

விஜய் டிவி புகழ் ராமரை பார்த்ததும் தியேட்டரில் கைதட்டல் கேட்கிறது.. ஆனால் அவரது காமெடிக்கு நம்மால் எந்த கைதட்டலும் கொடுக்க முடியவில்லை. அதுபோல கஞ்சா கருப்பு நடிப்பிலும் நகைச்சுவை இல்லை.. அவரது குரல் கூட அவரே கொடுத்ததாக தெரியவில்லை..

டெக்னீசியன்ஸ்…

Directed By : Ayyappan

Music By : Aravindbabu

Produced By : AKR Future Films – K.Arumugam, Elangkarthikeyan, M.ராஜா

ராஜு ராஜேந்திரனின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. அடர்ந்த காட்டுக்குள் தன் கேமராவை நுழைத்து ஒரு அழகான ஆன்மிகம் கலந்த ஆக்சன் படத்தை கொடுக்க உதவி புரிந்திருக்கிறார்.

அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களை திரும்ப கேட்கலாம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.. சில இடங்களில் ஓவர் இரைச்சலை கொடுத்திருப்பதையும் இசை அமைப்பாளர் கவனித்திருக்கலாம்..

பல ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் படங்கள் ஐயப்பன் படங்கள் என நிறைய படங்கள் வந்திருந்தன.. இவற்றையெல்லாம் ஒரு சீசனில் மக்களும் பார்த்து ரசித்தனர்.. ஆனால் தற்போது குறைந்துவிட்டது.

இந்த படத்தில் ஆன்மீகத்தை மையப்படுத்தி ஐயப்பன் சபரிமலை சீசனை கொண்டாடுவது போல காட்சிகள் நிறைய வைத்திருக்கின்றனர்.. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் எங்கெங்கோ சென்று திடீரென கிளைமாக்ஸ்சில் ஐயப்பனை தரிசிப்பதாக காட்சிகள் வைத்து விட்டது ஒரு குழப்பமான திரைக்கதையை காட்டுகிறது.

அதேசமயம் ஆன்மீகத்துடன் கமர்சியல் விஷயங்களையும் கலந்து பேண்டஸியான ஒரு திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் ஐயப்பன் பெயரிலையே ஐயப்பன் சாமி இருப்பதால் அதற்கு உயிரூட்டும் வகையில் கிட்டத்தட்ட 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சியை கொடுத்து இருக்கிறார்.

Rooban movie review

More Articles
Follows