தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்கரன் விமர்சனம் 3.75/5… ஆவேச உக்கிரன்
ஸ்டோரி…
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.. இவரின் மனைவி இறந்து விடுகிறார்.. மனைவியின் போட்டோ மட்டும்?? (👸🏻😭) காட்டப்படுகிறது.
தாய் இல்லாத தன் இரண்டு மகள்களை பாசமாக வளர்த்து வருகிறார். மூத்தவள் வெண்பா.. 2வது மகள் பிரியதர்ஷினி.. அம்மா இல்லாத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தை & தங்கையை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார் வெண்பா.
ஒரு கட்டத்தில் படிக்க சென்ற தன் இரண்டாவது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் எம் எஸ் பாஸ்கர். ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் எம் எஸ் பாஸ்கரை களத்தில் இறங்குகிறார்.
இவரது மகள் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா? எங்கு சென்றார்? தந்தை எம் எஸ் பாஸ்கர் என்ன செய்தார் மகளை கண்டுபிடித்தார்? தன் தங்கையை தொலைத்த வெண்பா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
எம்.எஸ். பாஸ்கர் / கபாலி விஸ்வந்த் / வெண்பா / ஆகாஷ் பிரேம்குமார் / நமோ நாராயணன் / பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கார்த்திக் சந்திரசேகர் / கண்ணன் / மஹிமா
காமெடியன் குணச்சித்திர கேரக்டர் என பல படங்களில் நாம் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்த எம்.எஸ். பாஸ்கர் இதில் முழுக்க முழுக்க ஆக்சன் நாயகனாக மாறி இருக்கிறார். எம் எஸ் பாஸ்கருக்கு ஆக்ஷன் செட் ஆகுமோ? என்ற ஐயம் ரசிகர்கள் மனதில் எழும்.. அதற்கு சூப்பர் ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.
தாயை இழந்த மகள்களை ஒரு தகப்பன் எப்படி வளர்க்க வேண்டும்? எப்படி அரவணைத்துக் கொள்ள வேண்டும்? என்பதை உணர்வுப்பூர்வமான நடித்து காண்பித்திருக்கிறார்.
அம்மா இல்லாத பெண் பிள்ளைகள் எப்படி பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை வெண்பா.. இவரைப் போலவே இவர் உடுத்தும் உடைகள் கூட அவ்வளவு அழகு.. தனக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதை தைரியமாக சொல்லும் அன்பான பெண்ணாக.. அதே சமயத்தில் தன் காதலனுக்காகவும் தன் தந்தைக்காகவும் அவர் உருகும் காட்சிகளிலும் அத்தனை அழகு..
கபாலி விஸ்வந்த் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் இதில் கதையின் நாயகனாக திருப்புமுனை கொடுக்கும் கேரக்டரில் சிறப்பாக செய்திருக்கிறார்..
வெள்ளையாக இருந்தாலும் வில்லனாக இருக்கலாம் கருப்பாக இருந்தாலும் கதையின் நாயகனாக இருக்கலாம் என இரண்டு பாத்திரங்களை கபாலி விஸ்வந்த் மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் செய்திருக்கின்றனர்.
மற்ற வில்லன் கார்த்திக் சந்திரசேகரும் ஒரு அனுபவமிக்க நடிகரை போல செய்து இருக்கிறார்..
இவர்களுடன் அரசியல்வாதி நமோ நாராயணன் / சிஸ்டர் பிரியதர்ஷினி அருணாச்சலம் / அன்னராஜ் கார்த்திகேயன் / கண்ணன் / மஹிமா ஆகியோரும் உண்டு.. இவர்கள் கதையின் ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ் …
எழுத்து & இயக்கம் – அருண் K பிரசாத்
இசை – ஹரி
ஒளிப்பதிவு – எம்.ஏ.ஆனந்த்
ஸ்டண்ட்- சரவெடி சரவணன்
கலை இயக்குனர் – ஆனந்த் மணி
எடிட்டர்- பி.மணிகண்டன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்- K.முத்துக்குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர் – கருப்பசாமி காளிமுத்து
இணை தயாரிப்பு – R V K
தயாரிப்பு – குன்றம் புரொடக்ஷன்ஸ்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் கதையின் வேகம் ஆரம்பித்து விடுகிறது. எனவே எந்த விதத்திலும் கதை மீதான கவனம் திரும்பி விடக்கூடாது என்பதை உணர்ந்து பாடல்கள் நிறைய இல்லாமல் அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார். அருண் கே பிரசாத்.
வெங்கட்ராமன் குரலில் ஹரியின் இசையில் உருவான ‘தெய்வம் தந்த பூவாய்….’ என்ற பாடல் இனி தந்தை – மகள் பாசத்தை போற்றும் பாடலாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கேட்கலாம்.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களில் பார்க்கலாம்.
எம் ஏ ஆனந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.. காரைக்குடி பகுதிகளில் பார்க்கும் பிரம்மாண்ட வீடு போல அழகான வீட்டை அழகாகவே காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
அருண்கே பிரசாத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. ஒரு பாசமான தந்தை தன் மகள்களை வளர்க்க படும் அர்ப்பணிப்பு உழைப்பு அனைத்தையும் அழகாக திரைக்கதையில் அமைத்திருக்கிறார்.
அதே நேரம் மகளை தொலைத்த தந்தையின் வேதனை ஆவேசத்தையும் ஒருங்கிணைத்து இந்த அக்கிரனை அக்கறையுடன் உருவாக்கி தந்திருக்கிறார் இயக்குனர்..
ஒரு தந்தை மகள் பற்றிய இந்த கதையில் இத்தனை வன்முறை தேவையா? என்ற கேள்வி நிச்சயம் எழுகிறது. முக்கியமாக குடிநீர் குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல வன்முறை காட்சிகளை ரத்தம் பீறிட்டு அடிப்பது நம்மை பயமுறுத்துகிறது.. அதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
தாயில்லாத பெண் பிள்ளைகளை வளர்க்க ஒரு தந்தை எடுக்கும் அக்கறையும் அர்ப்பணிப்பும் தான் இந்த ‘அக்கரன்’.
Venba Vishwanths Akkaran review