எப்போதும் ராஜா பட விமர்சனம்

எப்போதும் ராஜா பட விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிக்கையாளர் – பிஆர்ஓ விஜய் ‘எப்போது ராஜா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார்..

ஸ்டோரி…

அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார் வின்ஸ்டார் விஜய்.. இவர் தன் அம்மா மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

அண்ணன் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி.. தம்பி ஒரு வாலிபால் பிளேயர்..

அண்ணன் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என காத்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் அவருக்கு வேறு ஒரு இடத்திற்கு மாற்றலாகி மதுரைக்கு செல்கிறார்.

தம்பி விளையாட்டுத்துறையில் சாதித்து இந்திய அளவில் புகழ் பெற வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவரை சிலர் எதிர்கின்றனர். வில்லி கும்தாஜ் இதற்காக சில திட்டங்கள் போடுகிறார்.

இறுதியில் என்ன ஆனது? விளையாட்டில் சாதித்தாரா தம்பி? நேர்மையான போலீஸ் அதிகாரி அண்ணனுக்கு என்ன நடந்தது? இவர்கள் தடைகளை எப்படி உடைத்தார்கள்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

ஒரே உருவம் கொண்ட அண்ணன் தம்பியாக வின்ஸ்டார் விஜய் நடித்திருக்கிறார்..

ஒரே நபர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தால் பல படங்களில் அவரிடத்தில் இவர் இருப்பார் இவரிடத்தில் அவர் இருப்பார் என்றுதான் காட்சிகள் இருக்கும்.. ஆனால் இதில் கொஞ்சம் கூட அப்படி இல்லாமல் செய்திருப்பது சூப்பர்.

ஆக்ஷனில் அசத்தி இருக்கும் விஜய் நான்கு ஐந்து நாயகிகள் இருந்தும் ரொமான்ஸ் செய்யவில்லை. கொஞ்சம் ட்ரெய்னிங் எடுத்து இருக்கலாமே விஜய்.

விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார், பிரியா, டெப்ளினா, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஜய்க்கு டேப்லினா, பிரியா என்று 2 ஜோடிகள்… கவர்ச்சியிலும் கலக்கி இருக்கின்றனர். மேலும் படத்தில் வரும் மற்ற பெண்களும் வாலிபால் ராஜாவைப் பார்த்து வசப்படுவதாகவே காட்சிகள் உள்ளன… (மச்சம்யா உனக்கு..??)

நமச்சிவாயம், சோமசுந்தரம், லயன் குமார், ஜெயவேல், செல்வகுமார், ஜோ மல்லூரி ஆகியோரும் படத்தில் உண்டு

இவர்களுடன் 7+ மேற்பட்ட பத்திரிக்கையாளர் நண்பர்களும் எப்போதும் ராஜா படத்துடன் இணைந்து இருக்கின்றனர்.அவர்கள் கதை ஓட்டத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்து இருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

என்னதான் சின்ன பட்ஜெட் படம் என்றாலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள் பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.

விரும்புகிறேன்.. விரும்புகிறேன் என்ற பாடல் காதலர்களின் கவனம் ஈர்க்கும்.

படத்தை 5 – 6 வருடங்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள் போல.. நாயகனின் முகத்திலும் உடம்பிலும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா மற்றும் பாண்டிச்சேரியில் எப்போதும் ராஜா படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் முருகன்.

ஒருமுறை வில்லி கும்தாஜ் நாயகனின் படுக்கைய பகிர்ந்து சல்லாபம் செய்ய வருவார்.. அப்போது நாயகன் தட்டி விடுவார் என்று எதிர்பார்த்தால் மண்ணைத் திங்கிற உடம்பை பொண்ணு தின்னா என்ன? என்ற வசனம் பேசி சிரிக்க வைக்கிறார் நாயகன்.

இதுபோல சில இடைச் சொற்கள் வசனங்களையும் சொருகி ரசிக்க வைக்கிறார்.. முக்கியமாக இடைவேளை காட்சியில் நாயகியின் இடையிலிருந்து வேலை வருகிறது..

பெரும்பாலும் கிரிக்கெட் ஃபுட் பால் படங்களை பார்த்திருப்போம்.. இதில் முற்றிலும் மாறுபட்டு வாலிபால் படத்தை கதைக்களமாக அமைத்திருக்கிறார் முருகன். அதற்கு ஏற்ப நாயகனும் விளையாட முயற்சித்துள்ளார். ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக அவர் மட்டுமே சுவற்றில் அடித்து வாலிபால் பந்து வைத்து பயிற்சி செய்வது கொஞ்சம் நெருடல் தான்.

ஒரு சாமானியன் நினைத்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் எனை காட்சிப்படுத்தி இருக்கிறார் இதை எப்போதும் ராஜா.

உழைத்தால் முன்னேறலாம்.. பயிற்சி செய்தால் உயரலாம்.. அப்படி இருந்தால் எப்போதுமே நீ ராஜா தான் என்று படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் முருகன்.

Epodhum raja movie review and rating in tamil

சைரன் விமர்சனம் 4.25/5.. எங்கும் ஒலிக்கும்

சைரன் விமர்சனம் 4.25/5.. எங்கும் ஒலிக்கும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைரன் ஒலி என்றாலே இரண்டு விதம்.. ஒன்று போலீஸ் மற்றொன்று ஆம்புலன்ஸ் இந்த இரண்டும் ஒரு கட்டத்தில் மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை அழகாக திரைக்கதை அமைத்து ஒரு விருந்து படைத்திருக்கிறார் அறிமுகம் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.

ஸ்டோரி…

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அறிமுகமாகிறார் நாயகன் ஜெயம் ரவி.. 14 வருட சிறை வாழ்க்கையில் உன் மகளை பார்க்க உனக்கு விருப்பம் இல்லையா? என போலீஸ் அதிகாரியே ஒரு முறை கேட்க பின்னர் சிந்தித்து 15 நாள் பரோலில் தன் குடும்பத்தை காண வருகிறார் ஜெயம் ரவி.

இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு..

இந்தப் பதினைந்து நாட்களில் அடுத்தடுத்து கொலைகள் மர்மமான முறையில் நடைபெறவே அதனை விசாரிக்கும் கீர்த்தி சுரேஷின் பார்வை ஜெயம் ரவியின் பக்கம் திரும்புகிறது.. விசாரணை முறையாக இல்லை என கீர்த்தியை கண்டிக்கிறார். உயர் அதிகாரி சமுத்திரக்கனி.

கைதி ஜெயம் ரவி என்னுடன்தான் இருந்தார். எனவே அவர் கொலை செய்ய வாய்ப்பில்லை என்கிறார் போலீஸ் யோகி பாபு. எனவே ஆதாரமில்லாமல் விசாரணையை முடிக்க முடியாமல் திணறுகிறார் கீர்த்தி.

இதனிடையில் தன் தந்தை கைதி என்பதால் அவரை காண மறுத்து வெறுக்கிறார் மகள்.

இப்படியான சூழ்நிலையில் அடுத்து என்ன நடந்தது? உண்மையான கொலையாளி யார்? ஜெயம் ரவி & கீர்த்தி என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

சைரன்

கேரக்டர்ஸ்…

இதுவரை ஏற்காத சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வந்து மிரட்டலாக அதே சமயம் அனுப்பப்பட்ட நடிகராக தன் பாடி லாங்குவேஜ்ஜை மாற்றி இருக்கிறார் ஜெயம்ரவி.

சுறுசுறுப்பான ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பக்குவப்பட்ட பரோல் கைதியாகவும் என மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்சன் & எமோஷன் என இரண்டையும் உணர்ந்து நடித்திருக்கிறார்

நாயகி கீர்த்தி சுரேஷ்.. ஒரு பக்கம் அரசியல்வாதி ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி என இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறும் நந்தினி கேரக்டரை அழகாக செய்து இருக்கிறார்..

என்னதான் நீ நிரபராதி என்றாலும் உன் மகளுக்கு நீ கைதி தான் என்று கீர்த்தி சொல்லும் போதும் அதன் பின்னர் அவர் செய்யும் அடுத்த செயலும் ரசிக்க வைக்கிறது.

ஜெயம் ரவியின் தங்கையாக சாந்தினி அம்மாவாக துளசி இருவரும் மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கின்றனர.

போலீஸ் அதிகாரிகளாக யோகிபாபு மற்றும் அருவி மதன்.. ஒருவர் காமெடி என்றால் ஒருவர் கம்பீரம்..

ஒரு காட்சியில் சுடிதார் போல பைஜாமா அணிந்து கொண்டு.. “சார் இந்த ட்ரெஸ்ஸ கழட்டுட்டுமா? விபசார கேஸ்னு எல்லாருக்கும் கிண்டல் பண்றாங்க என யோகி பாபு சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.. இதுபோல படம் முழுக்க கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.

உயரதிகாரி சமுத்திரக்கனியின் கேரக்டர் சபாஷ் பெற வைக்கிறது.. கிளைமாக்ஸ் இல் அவரது ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

அழகம் பெருமாள், அஜய் மற்றும் ஜெயம் ரவியின் மகள் என ஒவ்வொரும் தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகின்றனர்.

ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன்.. மாற்றுத்திறனாளி கேரக்டரை கச்சிதமாக செய்து கைத்தட்டல் பெறுகிறார். கண் கலங்கவும் வைக்கிறார்.

மற்ற போலீஸ்காரர்கள் மற்ற கைதிகள் என ஒவ்வொருவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

சைரன்

டெக்னீசியன்ஸ்…

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் இருவரும் திறமை வாய்ந்தவர்கள்.. இவர்கள் இருவரும் ஒரே படத்தில் பணி புரிந்தால் எப்படி இருக்கும்?

பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ்…
பின்னணி இசை – சாம் சி எஸ்

இருவரும் இசையில் மிரட்டி இருக்கின்றனர் பாடல்கள் இதமாய் இருந்தது.. பின்னணி இசை மிரட்டல்.. ஆம்புலன்ஸ் ஃபைட் சீனில் பட்டய கிளப்பி விட்டார் ஷாம்..

செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை… ஒவ்வொரு காட்சியையும் தவறாது பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அழகாக படமாக்கி இருக்கிறார். ஆம்புலன்ஸ் பைட் சீன் மற்றும் கோயில் திருவிழா என இரண்டையும் அழகாக இரவு நேரத்தில் படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.. ட்ரோன் கேமரா ஷாட்டுகள் அற்புதம்..

காஞ்சிபுரத்தின் அழகு.. பழமை வாய்ந்த கட்டிடங்கள்.. பகுதிகள் என ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார் கலை இயக்குனர்.

அதிக சத்தம் கூட ஆபத்து தான்.. நம் காதுகளை செவிடாக்கிவிடும்.. அதற்கு ஏற்ப பின்னணி இசை கொடுத்து அதிக சத்தம் எழுப்பி கொல்லும் முறை வித்தியாசமான சிந்தனை.

ரூபனின் எடிட்டிங் நம்மை எங்கும் போர் அடிக்காமல் செய்கிறது.. முக்கியமாக செல்போனை தொடவிடாமல் எடிட்டிங் செய்திருப்பது சிறப்பு..

அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் என்று சொன்னாலும் எங்கும் பிசிறு தட்டாமல் லாஜிக் குறைகள் இல்லாமல் அழகாக விருந்து படைத்திருக்கிறார்.

கோமாளி படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி யோகி பாபுவின் கூட்டணி கலைக்கட்டி இருக்கிறது.. யோகி பாபு வரும் சீன்கள் எல்லாம் வேற லெவல் சிரிப்பு ரகம்..

படத்தின் வசனங்களையும் அந்தோணி எழுதி இருப்பது சிறப்பு.. ஒரு கதையை உணர்ந்து அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்து வசனங்கள் கொடுத்திருக்கிறார்.

ஒருவன் ஜாதியில்லை என்று சொன்னால் அவன் எந்த ஜாதி? என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.. கிளைமாக்ஸ் டைட்டில் கார்டில்.. ‘சிறையில் இருக்கும் நிரபராதிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்’ என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் என்ற இருபபெரும் நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு கனவு பாடலோ என எதையும் வைக்காமல் இருவரையும் வேறு வேறு தளத்தில் வைத்து கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.

இயக்குனருக்கு முழு சுதந்திரப் படைப்பை கொடுத்த தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரையும் நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.

ஆக சைரன்.. நிச்சயம் எங்கும் ஒலிக்கும்

சைரன்

Siren movie review and rating in tamil

இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில் பட விமர்சனம்.. ஆன்லைன் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி..

நாயகன் அசோக்.. நாயகி ராகினி திரிவேதி ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கின்றனர். இதில் நாயகி தன் தோழிகளுடன் வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் நாயகனுக்கும் காதல் ஏற்படவே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

எப்போதுமே ஆன்லைன் விளையாட்டில் (வீடியோ கேம்) ஆர்வம் கொண்டவர் ராகினி எனவே அடிக்கடி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு சில நபர்கள் மூலம் மிரட்டல் வருகிறது.

எனவே அந்த ஆன்லைன் நபபரை தேடி ஒரு இடத்திற்கு செல்லும் போது அவர் மற்றொரு நபரால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனால் கொலை பழி தன் மீது விழுமோ? என ஓடி ஒளிகிறார் நாயகி.

இந்த சூழ்நிலையில் அசோக்கை சிலர் கட்டி வைத்து துன்புறுத்துகின்றனர். இதனால் வேறு வழி இன்றி தானே களத்தில் இறங்கி கணவனை காப்பாற்ற போராடுகிறார் ராகினி.

அதன்பிறகு என்ன ஆனது? மிரட்டிய நபர் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

படத்தின் நாயகன் அசோக் என்றாலும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். இடைவேளைக்குப் பிறகு கிளைமாக்ஸ் இல் வந்து படத்திற்கு திருப்புமுனை ஏற்படுத்துகிறார்.. நாயகியுடன் ரொமான்ஸ் பரவாயில்லை. ஆனால் நாயகனை விட நாயகி ராகினி முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது.

மற்ற நாயகியுடன் அசோக் இருக்கும்போது அவரது இங்கிலீஷ் மற்றும் ஹிந்தி வெரி ஸ்மார்ட்.

ராகினி திவேதி ஆக்சன் காட்சிகளில் ரவுண்ட் கட்டி அடித்திருக்கிறார்.. படத்தில் முழுக்க முழுக்க இவரது பங்களிப்பு தெரிகிறது.. இவரது தோழிகள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

இவர்களுடன் ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்..

மனோபாலாவின் காமெடி சிரிக்க வைக்கிறது. லொள்ளு சபா மனோகரும் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

டெக்னீசியன்ஸ்…

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்.. கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் சுமார்.. ஜுபினின் பின்னணி இசை பலம்.

இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன்.. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலையும் காட்டி இருக்கிறார்.

முக்கியமாக ஹார்ட் டிஸ்கை வைத்து கருப்பு பணத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

ஆனால் சொல்ல வந்த விதத்திலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார்.

ஆக ‘இ-மெயில்’ ஆன்லைன் எச்சரிக்கை

இமெயில்

E MAIL movie review and rating in tamil

லவ்வர் விமர்சனம் 4/5.. எங்கும் காதல்

லவ்வர் விமர்சனம் 4/5.. எங்கும் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மில்லியன் டாலர்ஸ் தயாரிப்பில் மணிகண்டன், கௌரிப்ரியா, மதன், ராஜா, கலா, சுகன், சுகில், ரம்யா, ஐஷு, பருத்திவீரன் சரவணன் மற்றும் பலர்..

ஸ்டோரி…

நாயகன் மணிகண்டன் நாயகி கௌரி பிரியா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்படுகிறது.. இவர்களின் காதல் ஆறு வருடத்திற்கு பின்பு சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்கிறது.

அம்மாவிடம் 15 லட்சம் பணம் வாங்கி பிசினஸ் செய்து அதை நஷ்டத்தால் கைவிடும் நாயகன் வேறு வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்.. இதனால் நண்பர்களுடன் இணைந்து அடிக்கடி சரக்கு போதை என திரிகிறார்.

இதனால் நாயகி தன் காதல் எதிர்காலத்தை எதிர்நோக்கி வருத்தப்படுகிறார். இவர்களுக்கு பிரச்சனை எழவே ஒரு கட்டத்தில் என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? இந்த பிரச்சனை நீடித்ததா? பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப தன்னுடைய கேரக்டரை மணியாக உணர்ந்து ஜொலித்து வருகிறார் நாயகன் மணிகண்டன்.

ஒரு யதார்த்த இளைஞனாக அருண் கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.. அடிக்கடி சரக்கு அடிப்பது சரக்கு அடித்து கோபப்படுவது காதலியிடம் சண்டை போடுவது நண்பர்களிடம் வம்பு செய்வது என தன் கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார்.

முக்கியமாக அப்பாவித்தனமாக தன் நண்பனிடம் உங்க கேர்ள் பிரண்டுக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கீங்களே என்பார். அவளுடைய சுதந்திரம் அவளுக்கு.. என்னுடைய சுதந்திரம் எனக்கு.. சுதந்திரம் கொடுக்க நான் யார்? என்று அந்த நண்பன் கேட்கும்போது தியேட்டர்களில் கைத்தட்டல் சத்தத்தை கேட்க முடிகிறது.

திவ்யா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் இந்த கௌரி பிரியா. ஒவ்வொரு முறையும் தன் ஆறு வருட காதலுக்காகவும் காதலனுக்காக விட்டுக் கொடுத்து தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. காதலனுக்காக மனம் உடைந்து அழுகும் காட்சியில் நம்மையும் அழ வைத்து விடுவார்.

லவ்வர்

ஒவ்வொரு முறையும் நீ மன்னிப்பு கேட்கிறாய்.. இதே போல் தானே உன் அப்பா உன் அம்மாவிடம் கேட்டார்.. ஆனால் இருவரும் விவகாரத்து செய்கிறார்களே?!என கேட்கும் போது திவ்யா ஜொலிக்கிறார்

இவர்களுடன் மணிகண்டன் பெற்றோர்.. கௌரி பிரியாவின் தோழிகள், நண்பர்கள் என அனைவரும் பளிச்சிடுகின்றனர்..

முக்கியமாக ப்ராஜெக்ட் மேனேஜர் மதன் கேரக்டரில் வருபவர் நிச்சயம் ரசிகைகளின் மனதை கொள்ளையடிப்பார்.

டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலர்களை குறிவைத்து அனைத்து பாடல்களையும் கொடுத்திருக்கிறார்
ஷான் ரோல்டன்…

விலகாதே என்னை விட்டு விலகாதே ஒதுங்காதே பக்கம் வந்தால் ஒதுங்காதே.. என்ற பாடல் நிச்சயம் காதலர்களை கவர்ந்த ஒன்றாகும். இனி பிரிந்த காதலர்களுக்கு ஒரு பிரியாத பாடலாக இது அமையும்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.. காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்க ரசிக்க எடுத்திருக்கிறார். தோழிகள் சுற்றும் தளமாகட்டும்.. காதலர்கள் சுற்றும் இடமாகட்டும் கடற்கரையாகட்டும் என ஒவ்வொன்றையும் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்..

எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக கையாண்டுள்ளார்.. நாயகி கௌரி தன் காதலைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் வருவதும் நாயகி பேசிக் கொண்டிருப்பதும் எடிட்டிங் சூப்பர்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் விறுவிறுப்பு குறைகிறது. கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம்..

நிறைய குறும்படங்களை இயக்கியவர் பிரபுராம் வியாஸ்.. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.

காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி ஆனாலும் அந்த காதல் நேர்மை உண்மை இருக்கணும் என தத்துவத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரபு ராம்வியாஸ்.

காதலனை காதலியை காயப்படுத்தக் கூடாது என்பதற்காக சின்ன சின்ன பொய்களை சொல்லி பின்பு அதுவே அவர்களின் வாழ்க்கையை மாற்றி விடும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

ஆக இந்த லவ்வர் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த லவ்வர் ஆக இருப்பார்..

லவ்வர்

Lover movie review and rating in tamil

லால் சலாம் விமர்சனம் 3.75/5

லால் சலாம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

ரஜினி ஒரு முஸ்லிம்.. இவரது மனைவி நிரோஷா.. இவர்களின் மகன் விக்ராந்த்.

லிவிங்ஸ்டன் மாணிக்கம் ஒரு ஹிந்து.. இவரின் மனைவி ஜீவிதா இவர்களின் மகன் விஷ்ணு விஷால்.

இவர்களின் இரு குடும்பமும் நட்புடன் பழகுகின்றனர்.. சிறுவயதில் ஒரு பிரச்சனையால் ரஜினியை வெறுக்கிறார் விஷ்ணு விஷால்… ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விடுகிறார் ரஜினிகாந்த்.

இந்த சூழ்நிலையில் கிராமத்தில் இருக்கும் விஷ்ணு விஷால் கிரிக்கெட் அணியுடன் மோத மும்பையில் இருந்து கிராமத்திற்கு வருகிறார் விக்ராந்த்..

இந்த கிரிக்கெட் போட்டியில் இருவருக்கும் பிரச்சனை எழவே விக்ராந்தின் கையை முறித்து விடுகிறார் விஷ்ணு.

இதன் பின்னர் என்ன ஆனது? ரஜினி என்ன செய்தார்.? கிரிக்கெட் போட்டி நடைபெற்றதா? கிரிக்கெட்டிற்காக மும்பையில் இருந்து கிராமத்திற்கு வர என்ன காரணம்? என்பதுதான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்ஸ்…

சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் ரஜினிகாந்த் இருப்பதே ஒரு சிறப்பு தான்.. அவரது கேரக்டர் தான் படத்தை ஆணிவேராக இருக்கிறது. ஆக்சன் எமோஷன் என இரண்டையும் சரிசமமாக கொடுத்திருக்கிறார். முக்கியமாக மகனுக்காக கண்கலங்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கின்றனர். அதிலும் நாயகன் விஷ்ணு நாயகி அணந்திகா இருவரும்கும் நல்ல கெமிஸ்ட்ரி..

இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.

டெக்னீசியன்..

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ஜலாலி என்ற பாடல் முஸ்லிம் மதத்திற்கு கொண்டாட்டமாக இருக்கும்.. அதே போல தேர் திருவிழா என்ற பாடல் நிச்சயம் இந்து மதத்தினருக்கு கொண்டாட்ட பாடலாக அமையும்..

பின்னணி இசையும் அசத்தியிருக்கிறார் ரஹ்மான்… ரஜினிகாந்தின் அறிமுகம் பாடல் ஜலாலி பாடல் ரசிக்க வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் விஷ்ணு ராமலிங்கத்தை பாராட்டலாம்.. 1993 காலகட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக கலை இயக்குனரையும் கை குலுக்கி பாராட்டி ஆக வேண்டும்.. ஆனால் எடிட்டர் தான் கொஞ்சம் திரைக்கதையை குழப்பி இருக்கிறார் என்றே சொல்லலாம்..

ஆறு மாதத்திற்கு பின்பு என காட்சிகளை காட்டி விட்டு பின்பு ஆறு மாதத்திற்கு முன்பு என வைத்து அதில் ஒரு பிளாஷ் பேக் என குழப்பி இருக்கிறார்.

ரஜினி என்ற மாபெரும் சூப்பர் ஸ்டாரை நடிக்க வைத்து மட்டுமல்லாமல் அவருக்கான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த வன்முறை காட்சிகளாக வைத்து ரஜினியின் அட்வைஸ் காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களுக்கு விருந்து.

மதத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இந்த படம் சவுக்கடி கொடுக்கும்.. ரஜினியை சங்கி என்று அழைக்கும் சில நபர்களுக்கு நெத்தியடியாக மொய்தீன் பாய் என்ற கேரக்டரை வடிவமைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.

முக்கியமாக முஸ்லீம் சந்தனககூடு இந்து மதத்தின் தேராக மாறும் காட்சி வேற லெவல்..

ஆக கிரிக்கெட்டில் அரசியல் கூடாது.. மதத்திலும் அரசியல் கூடாது.. எந்த மதமாக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான்.. கடவுளை மனிதன்தான் படைத்தான் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்..

லால் சலாம்

Lal Salaam movie review and rating in tamil

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோரி…

1974 காலகட்டத்தில் வடக்குப்பட்டி கிராமத்தில் நடந்த காமெடி கதைக்களம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

கடவுள் இல்லை என்று சொல்லுபவர் வடக்குப்பட்டி ராமசாமி சந்தானம்… இவர் ஒரு நாத்திகவாதி என்றாலும் ஆன்மீகத்தை நம்பும் மூடநம்பிக்கைகளை நம்பும் மனிதர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்.

ராமசாமியின் திட்டங்களை அறிந்த தாசில்தார் தமிழ் இதற்கு இடைஞ்சலாக இருக்கிறார்.

இதன் பிறகு என்ன நடந்தது? ஜெயித்தது யார்? ஆன்மீகமா..? நாத்திகமா.?

கேரக்டர்ஸ்…

சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர்..

நாயகன் சந்தானம் தனக்கு ஏற்ற கலாய்க்கும் கதையை எடுத்து இருக்கிறார்.. ஒன் லைன் கவுண்டர் காமெடிகளை ரசிக்க வைக்கிறார்.. ராமசாமி என்ற பெயரை வைப்பதற்கும் தனி தைரியம் வேண்டும்..

சந்தானத்தின் உதவியாளராக மாறன், கோயில் பூசாரியாக சேஷு இருவரும் நடித்துள்ளனர் இருவரும் தான் படத்திற்கு பக்கபலமாக இருந்துள்ளனர்

தாசில்தாராக வரும் தமிழ்.. தன் கேரக்டரில் வில்லத்தனம் காட்டி இருக்கிறார்.

மேஜர் ஆக நிழல்கள் ரவி நடித்துள்ளார்..
ஒரு மேஜர் கேரக்டரை இப்படியா சொல்ல வேண்டும் இயக்குனர் அவர்களே!???

எம் எஸ் பாஸ்கர்.. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தரமான நடிகர் இவர்.. அதுவும் சந்தானம் படம் என்றால் இவருக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி கிடைத்துவிடும் போல..

மேகா ஆகாஷுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெரிதாக ராசி இல்லை போல.. அவரது கேரக்டர்கள் பல படங்களில் வீணடிக்கப்பட்டிருக்கிறது.. இந்த படத்திலும் அதே நிலைதான்.. சந்தானத்திற்கு அட்வைஸ் நாயகியாக வந்து செல்கிறார்..

ஊர் பெரிய மனுஷங்களாக எதிரும் புதிருமாக ஜான் விஜய் & ரவி மரியா நடித்துள்ளனர்.. ஆனாலும் சில கடி ஜோக் போட்டு டென்ஷன் கொடுத்திருக்கின்றனர்.

டெக்னீசியன்ஸ்…

தீபக் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. 1975களில் இருந்த அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார். அதை இன்றைய தலைமுறைக்காக கிராமத்து மண்வாசனையுடன் விருந்து படைத்திருக்கிறார்..

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய மனம் மாறாத இசையை கொடுத்திருக்கிறார். பின்னணி இசையும் அதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது..

இயக்குநர் கார்த்திக் யோகி.. சந்தானத்தை வைத்து ஏற்கனவே டிக்கிலோனா என்ற படத்தை இயக்கியவர் தான் இந்த கார்த்தி யோகி.

சமீபத்தில் வந்து நம்மையெல்லாம் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் போல 1970 – 80களில் பரபரப்பாக பேசப்பட்ட மெட்ராஸ் ஐ என்பதை கருப்பொருளாக எடுத்து அதில் கடவுள் மூடநம்பிக்கையை கலந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்தி யோகி.

45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை தான் இது… அப்படி இருக்கையில் அன்று மக்கள் மெட்ராஸ் ஐ-க்கு இப்படி பயந்து ஓடினார்களா? அதுவும் கண்ணில் ஏற்படும் சாதாரண பிரச்சனை தானே என்பது கேள்விக்குறி?!

பியூப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இதை தயாரித்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி படம் உலகம் முழுவதும் 600 ஸ்கிரீன்களில் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தெரிவித்துள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி

Vadakkupatti Ramasamy movie review and rating in tamil

More Articles
Follows