தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.
இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளார்.
கார் ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக் (34) என்கிற டிரைவரை குடும்பத்தினர் நியமித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன்ஷங்கர் ராஜா மதுரை சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த ஆடி காரை டிரைவர் நேற்று மாலை 5 மணிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பிறகு, அவர் வீடு திரும்பவில்லையாம். டிரைவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால் காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து யுவன் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே காரையும் டிரைவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
Yuvan’s Aston Martin missing composer says driver stole his luxury car








