அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

அமெரிக்காவில் முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி கலக்கும் பிரமாண்ட இசை – நடன நிகழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)அமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது.

யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.

ஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவதாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர்.

இவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.

அமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசைக் கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை எனும் அளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

8 கே மைல்ஸ் மீடியா ஆதரவில் பினாகின் ஸ்டுடியோஸ், ஹேமா சங்கர் ரியல்டர்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

விஜயகாந்த்-சீமான்-கமலை தொடர்ந்து கட்சி தொடங்கும் பிரகாஷ்ராஜ்

விஜயகாந்த்-சீமான்-கமலை தொடர்ந்து கட்சி தொடங்கும் பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)தென்னிந்தியளவில் பிரபலமான நடிகர் பிரகாஷ்ராஜ். பல மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

இவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதில் அவர் 3வது இடம் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

“பெங்களூரு முழுவதும் கடந்த 6 மாதங்களாக பயணம் செய்து மக்களை சந்தித்தேன். அவர்கள் பிரச்சினைகளை கேட்டு அறிந்தேன். அதற்கு தீர்வு காண குரல் கொடுத்தேன். ஆனாலும் மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்து விட்டனர். மக்கள் முடிவை ஏற்கிறேன்.

விரைவில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அரசியல் கட்சியை நடத்த பணம் தேவை என்பதால் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் செய்வேன்” என்றார்.

நடிகர்கள் விஜயகாந்த், சீமான், கமல் ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். தற்போது பிரகாஷ் ராஜீம் அவர்களது பாணியில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைந்த ஸ்வரங்கள்..; மீண்டும் இளையராஜா இசையில் எஸ்பிபி

இணைந்த ஸ்வரங்கள்..; மீண்டும் இளையராஜா இசையில் எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இந்திய சினிமாவில் இசை சாம்ராஜ்யத்தை நடத்தி கொண்டிருப்பவர் இளையராஜா.

இவர் தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கோரினார்.

எனவே இந்த விவகாரத்தில் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரச்சினை ஆனது.

இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என அறிவித்திருந்தார் எஸ்பிபி.,

இதனால் ரசிகர்கள் கலங்கினர். இளையராஜாவுக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர்.

நாங்கள் கொடுத்த சம்பளத்தை பெற்றுக் கொண்டு இளையராஜா ராயல்ட் கேட்பது சரியல்ல என தயாரிப்பாளர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு, இசை கலைஞர்களுக்கு உதவும் விதமாக வருகிற ஜூன் 2ம் தேதி, சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டு பாடுகிறார். மேலும் கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ, உஷா உதூப் உள்ளிட்ட பலரும் பாட உள்ளனர்.

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி துவங்கி உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்கேற்றார்.

அப்போது இளையராஜா எஸ்பிபி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி நட்பை பறிமாறிக் கொண்டனர்.

தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்

தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல் – பிசாசு பட நடிகை பிரயாகா மார்ட்டின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)தனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின். ஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்றது. சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றி தான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘உல்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன, ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து இன்னொரு மலையாள திரைப்படமான “பிரதர்ஸ் டே” படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் முன்னணி ஹீரோ பிரித்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் ஜூன் மாதத்தில் தன் பகுதிகளை முடித்துக் கொடுக்கிறார் பிரயாகா.

மறுபுறம் சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவில், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் குமார் ஜோடியாக “கீதா” என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. கொல்கத்தா, சிம்லா, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகியவற்றின் ரம்மியமான இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி இருக்கும் படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்து செப்டம்பர் மாதம் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

தமிழ் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றி கேட்டால், புன்னகையோடு அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல், ஒன்றை மட்டும் பிரித்து சொல்வது கடினம். மிகச்சிறந்த கதைகளை சொல்வதில் இருந்து தங்களின் தனித்தன்மையை இழக்காமல், நேட்டிவிட்டியை இழக்காமல் சர்வதேச தரத்தில் சிறந்த படங்களை சிறப்பாக வழங்குவது வரை எல்லாமே சிறப்பு. இங்கே பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்ய மிகவும் ஆவலாக உள்ளேன்” என்றார்.

Breaking ரஜினி-சிவா திடீர் சந்திப்பு.; ‘பேட்ட’ ஏரியாவில் ‘விஸ்வாசம்’ ஏன்.?

Breaking ரஜினி-சிவா திடீர் சந்திப்பு.; ‘பேட்ட’ ஏரியாவில் ‘விஸ்வாசம்’ ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam Siva met Rajinikanth today at Poes Gardenஅஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்னுமளவுக்கு அவரின் அடுத்தடுத்து படங்களை இயக்கி வந்தார் சிவா.

இந்தாண்டு வெளியான விஸ்வாசம் படம் இவர்களது கூட்டணிக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்துள்ளது.

இருந்தபோதிலும் ரஜினியின் பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதியது அந்த சமயத்தில் ரசிகர்களிடையே பெரும் மோதலை உண்டாக்கியது.

நெட்டிசன்கள் பலரும் பணத்தை பெற்றுக் கொண்டு விஸ்வாசமாக இருந்தனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா வகையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்துள்ளார் சிவா. இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளது.

அவர் ரஜினியை சந்தித்து ஒன்லைன் கதை சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் விஸ்வாசம் படத்தையும் ரஜினி பாராட்டியதாக சொல்லப்படுகிறது.

தற்போது ரஜினி தர்பார் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்று கூறப்படும் நிலையில் ஒரு இயக்குனரை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viswasam Siva met Rajinikanth today at Poes Garden

Breaking மோடி கெத்து; ராகுல் ராஜினாமா; கமல் கணிசம்… ரஜினி கருத்து

Breaking மோடி கெத்து; ராகுல் ராஜினாமா; கமல் கணிசம்… ரஜினி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Modi Rahul and Kamals election resultவரும் மே 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கவுள்ளார்.

இந்த விழாவில் பல நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து ரஜினி இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது… “நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, வாஜ்பாய்க்கு பின் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார். மோடி என்ற தனிமனிதனின் தலைமைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை உருவானதால் அவருக்கு இங்கு வெற்றி கிட்டவில்லை.

தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள்.

தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி – கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.

தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது” என பேசினார்.

Rajini talks about Modi Rahul and Kamals election result

More Articles
Follows