காமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்

yogi babuகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து காமெடியன் யோகி பாபுவும் ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய கேரக்டருக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், யோகி பாபு இதை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்…

வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய்க்கும் இடையிலான கதைதான் அந்தப் படம். தான் அதில் கூர்க்கா வேடத்தில் நடிப்பதாகவே தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தில் தான் ஒரு காமெடியனாக மட்டுமே நடிக்கிறார் என்றும் தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது காமெடி மூஞ்சி. ஹீரோவுக்கு எல்லாம் செட்டாகாது” என தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post