மலையாளத்திலும் பட்டைய கிளப்ப போகும் யோகி பாபு.; முழுதகவல் இதோ..

மலையாளத்திலும் பட்டைய கிளப்ப போகும் யோகி பாபு.; முழுதகவல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பல பெரிய ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

யோகி பாபு இப்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டிலும் நடிக்கிறார்.

இந்நிலையில், யோகி பாபு தற்போது ‘குருவாயூரம்பல நடையில்’ என்னும் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.

மேலும், இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் பாசில் ஜோசப் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், யோகி பாபுவின் ‘யானை முகத்தான்’ திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu joins the cast of Guruvayoor Ambalanadayil

சூர்யா 42.: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கொடுத்த சிவா

சூர்யா 42.: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கொடுத்த சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 42’. (தற்காலிக பெயர்)

சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் சூர்யா – சிவா கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் சூர்யா தோன்றுகிறார்.

3டியில் உருவாகி பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது.

தற்போது ப்ரீ பிசினஸிலும் இந்தப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. டிஜிட்டல் உரிமை, சேட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை பெரிய தொகைக்கு பட பிசினஸ் நடந்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு ‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு தொடர்பான புதிய போஸ்டரும் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா ரசிகர்கள் இந்த அறிவிப்பால் உற்சாகமாகி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

சூர்யா 42

suriya 42 film title release date announcement by siva

சிறந்த படங்களுக்கு மானியம்.. திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கீடு.; அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

சிறந்த படங்களுக்கு மானியம்.. திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கீடு.; அரசுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக அளித்தோம். அவைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் 2015-முதல் 2022 ஆம் ஆண்டுகளில் சிறு முதலீட்டில் தயாரித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு ரூ 7 லட்சம் மானியம் வழங்கப்படும்.

அதற்கான மானியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறிய முதல்வர் அவர்கள் மேலும் கூறுகையில் திரைப்பட நகரத்தை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக மாற்றி அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையும் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்பாளர்களின் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் பெற்றிட வழிகாட்டியுள்ள , நமது பாசத்திற்குரிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ,
மரியாதைக்குரிய இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி
ஸ்டாலின் அவர்களுக்கும், அன்பிற்கினிய செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் , ஒட்டுமொத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் இருகரம் குவித்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Producers Association Statement of thanks to Tamil Nadu Govt

22000 அடி உயரத்தில் பறந்த உலகநாயகன் கமல்

22000 அடி உயரத்தில் பறந்த உலகநாயகன் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது தென்னாப்பிரிக்காவில் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பு அங்கு படமாக்கப்படுகிறது மற்றும் தீவிர படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், அங்கு அவர் ஒரு பைலட்டுடன் விமானத்தில் பறக்கிறார்.

கமல் அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அதில் “ஒன்றாகப் பறக்கிறது. உயரம் 22,000 அடி!” என்று அதற்குத் தலைப்பிட்டுள்ளார்.

Kamal Haasan flies a plane in South Africa

ரஜினி ஆசியுடன் நயன்தாரா 75 படம்.; அடுத்த ஷெட்யூல் அப்டேட்..

ரஜினி ஆசியுடன் நயன்தாரா 75 படம்.; அடுத்த ஷெட்யூல் அப்டேட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவுடன் கைகோர்த்தார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்யுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் சென்னை ஷெட்யூல் முடிந்து, அதன் அடுத்த ஷெட்யூலுக்கு படக்குழு நகர்ந்துள்ளது.

‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ படத்தின் அடுத்த ஷெட்யூல் திருச்சியில் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ படத்தின் படக்குழு திருச்சிக்கு செல்கிறது.

‘Lady Superstar 75’ team next schedule in Trichy

ராமச்சந்திரன் – விஜய்சேதுபதி ஷூட்டில் ஒரே பெண்.. த்ரிஷாவின் குந்தவை லுக்..; ஜொலிக்கும் சாய் ரோகிணி

ராமச்சந்திரன் – விஜய்சேதுபதி ஷூட்டில் ஒரே பெண்.. த்ரிஷாவின் குந்தவை லுக்..; ஜொலிக்கும் சாய் ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல்வேறு மாறுபட்ட ரகப்படங்களில் நடித்து வரும் சாய் ரோஹிணி!

சினிமா தனக்கான ஆட்களைத் தேடிக்கொள்ளும் என்பார்கள். அதேபோல் சினிமா பற்றிய கனவு ஒருவருக்கு இருந்தால் அது கைப்பிடித்து அழைத்து வந்து அத்துறையில் அமர வைத்து விடும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகை சாய் ரோஹிணி. வேலூரில் பிறந்து வளர்ந்தவர்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாத சூழலில் இருந்து வந்து, கண்ட கனவைத் துரத்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சாய் ரோஹிணி.

வேலைவாய்ப்பு எண்ணத்தில் செவிலியர் படிப்பை சென்னையில் வந்து முடித்தவர் வேலைக்குச் செல்லாமல் திரை வாய்ப்புகளைத் தேடி ஓடியிருக்கிறார்.

எங்கெங்கே புதுப் படங்களில் நடிப்பதற்குப் புது முகங்கள் தேவை என்கிற விளம்பரம் கண்டாலும் நேரில் சென்று ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொண்டுள்ளார்.

அப்படி வாய்ப்பு கிடைத்து முதலில் நடித்த படம் தான் ‘நாட் ரீச்சபிள்’. அப்படிக் கடும் முயற்சிக்குப் பின் கிடைத்த இன்னொரு வாய்ப்பு தான் ‘மிடில் கிளாஸ் ‘பட வாய்ப்பு.
அடுத்து ‘துச்சாதனன் ‘ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இப்போது கோபி, ஈரோடு பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்து சூரி நாயகனாக ஹாட்ஸ்டாருக்காக அருண் தயாரிக்கவுள்ள படத்திற்குக் கதை-திரைக்கதை எழுதியுள்ள வெற்றிவீரன் மகாலிங்கம் தயாரித்து இயக்கும் புதிய படத்திலும் கதைநாயகியாகத் தேர்வாகியுள்ளார்.

சாய் ரோஹிணி

இவை தவிர புதிய இரண்டு தெலுங்குப் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் பட வாய்ப்புகளைப் பெற்றது குறித்து சாய் ரோஹிணி பேசும்போது,

“சினிமாவில் எனக்கு என்று தெரிந்தவர் யாருமில்லை. எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது.

எனக்கு சினிமாவின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது . பெற்றவர்களின் விருப்பத்திற்காக நர்சிங் படித்தேன். ஆனாலும் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்புகளைத் தேடினேன்.

புதுமுகங்கள் தேவை என்கிற தகவல் கேள்விப்பட்டதும் அங்கு சென்று நான் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேன். அப்படித்தான் எனக்குப் படவாய்ப்புகள் வந்தன.

வந்து கொண்டிருக்கின்றன. யாருடைய சிபாரிசும் எனக்குக் கிடைத்ததில்லை. நம்முடைய தோற்றத்திற்கும் நடிப்புத் திறமைக்கும் வாய்ப்பு வந்தால் போதும் என்று நான் நினைப்பேன். அதன்படி தான் இப்போது வாய்ப்புகள் வந்துள்ளன. அது மட்டும் அல்லாமல் என்னை நம்பி, தரப்படும் வாய்ப்புகளில் சரியாகப் பிரகாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன்” என்கிறார்.

இவர் நடித்து இரண்டு படங்கள் வெளியான நிலையில் நடிகர் விஜய் சேதுபதி எடுத்த 2023 தி ஆர்ட்டிஸ்ட் என்ற காலண்டர் போட்டோ ஷூட்டில் இவர் கலந்து கொண்டுள்ளார். உலகப்புகழ் பெற்ற ராமச்சந்திரன் தான் போட்டோகிராஃபர்.

சாய் ரோஹிணி

அதில் கலந்து கொண்ட ஒரே பெண் இவர்தான். அந்த அனுபவம் பற்றிக் கூறும் போது,

”அந்தக் காலண்டர் ஷூட்டில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஓவியக் கலைஞர்களுக்காக அந்தக் காலண்டரை அவர் உருவாக்கி அர்ப்பணித்து இருந்தார். அதில் 12 மாதங்களுக்கும் 12 கருத்துக்கான தோற்றங்களில் அவர் வருவார் .நான் இரண்டு மாதங்களுக்கு அதில் நடித்திருக்கிறேன்.

அவருடன் அந்தப் படப்பிடிப்பில் ஆண்கள் நிறைய பேர் நடித்தார்கள். ஆனால்,நடித்த ஒரே பெண் என்ற வகையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் எப்பொழுதும் தன்னுடன் அருகில் இருப்பவர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்.

அந்தப் படப்பிடிப்பு ஒரு நாள்தான் நடைபெற்றது. ஒரு குறுகிய இடத்தில் நெருக்கடியான சூழலில் அந்தப் படப்பிடிப்பு நடந்த போதும் கூட எங்களை சௌகரியமாகப் பார்த்துக் கொண்டார்.

படப்பிடிப்பு நடந்த போதும் நடத்தி முடிக்கப்பட்ட போதும் அவரைப் பற்றி என் மனதில் இருந்த ஒரே எண்ணம் அவர் ஒரு ஜென்டில்மேன் என்பதுதான்”என்கிறார்.

திரை நுழைவு செய்பவர்கள் தன்னை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்; தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இவருக்கு உடன்பாடு உண்டு. அதனால் தான் இவர் ‘சோலைமலை இளவரசி’ என்கிற ஒரு போட்டோ ஷூட் எடுத்து தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

அமரர் கல்கி எழுதிய ஒரு கதை தான் இந்த சோலைமலை இளவரசி. இந்தக் கதையில் ஒரு மலைப்பிரதேசப் பெண் மீது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு வீரன் காதல் கொள்வான். அவளும் அவனை விரும்புவாள்.

அவள் தன்னை அந்தச் சோலை மலையை ஆளும் ஒரு இளவரசியாக பாவித்துக் கொண்டு அந்தக் கனவுலகில் வாழ்கிறாள். அந்த ஆசையாகவே மாறி விடுவாள். வந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி விடைபெற்றுப் போர்முனைக்குச் செல்கிறான் வீரன். அவன் திரும்பி வரும்போது அவள் வேறு ஒரு மனநிலையில் இருப்பாள். இவள் தனக்கானவள் இல்லையோ என்ற எண்ணத்தில் அவன் தற்கொலை செய்து கொள்கிறான்.

சாய் ரோஹிணி

இப்படி அந்தச் கதை செல்லும் . இப்படிப்பட்ட பாத்திரத்தை நான் நடித்து போட்டோ ஷூட் ஆக உருவாக்கி இருக்கிறேன். அந்தப் படங்களில் பல்வேறு தோற்றங்களில் தோன்றி பல்வேறு மனநிலைகளை முகபாவங்களில் உடல் மொழிகளில் வெளிப்படுத்தியிருப்பேன்.

அதில் “பொன்னியின் செல்வன்” படத்தில் வரும் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் குந்தவை போல் தோற்றத்தில் ஒற்றுமை இருப்பதைக் காணலாம்.
அதற்கான பின்புலத் தயாரிப்புகளுக்கும் ஒப்பனைகளுக்கும் என நிறைய உழைத்தோம்.

இது விரைவில் வெளிவர உள்ளது. இதை வீடியோவாகவும் எடுத்துள்ளோம். இப்படி ஒவ்வொருவரும் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் .எனவே தான் இந்த வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டேன்.

அதைப் பார்ப்பவர்கள் யார் இந்தப் பெண்? என்று என்னை விசாரிக்கும் அளவிற்கு அதில் திறமை காட்டி உள்ளேன். கிரீஷ் என்பவர் அதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படி ஒரு போட்டோ ஷூட் எடுத்து, தன்னை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நான் ஒருத்தியாகத்தான் இருப்பேன்” என்கிறார்”

கலைதான் மனிதனை உயரத்திற்கு இட்டுச் செல்லும். தன் கனவுகளை மட்டுமல்ல, போராட்டங்களையும் வெல்ல சினிமா தான் தனக்குத் தெரிந்த ஒரே விடியல் என்று நம்புகிறார் சாய் ரோஹிணி. இவரது கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவோம்.

சாய் ரோஹிணி

Sai Rohini shares her experience at Ramachandran Vijay Sethupathi shoot

More Articles
Follows