தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வாக்களிக்க முடியுமா?

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வாக்களிக்க முடியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக கலைப்புலி தாணு இருந்து வருகிறார்.

இதனையடுத்து இச்சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அடுத்த தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்தது.

ஆனால் தற்போது சில காரணங்களால் மார்ச் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தல் வழக்கறிஞர் ராஜேஷ்வரன் என்பவர் தலைமையில் நடக்கிறது.

இத்தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட விஷால் வாக்களிப்பாரா? என்பதுதான் தெரியவில்லை.

விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி

விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madhavan sai pallaviஜெயம் ரவி நடிக்கும் ‘வனமகன்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய்.

இதனையடுத்து மாதவன் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

இதில் நாயகியாக மலர் டீச்சர் புகழ் சாய்பல்லவி நடிக்கிறார்.

இது மலையாளத்தில் மாபெரும் ஹிட்டான துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடித்த ‘சார்லி’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையை, இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் கைப்பற்றியது.

இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸும், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Sai Pallavi to romance with Madhavan in Tamil remake of Charlie

ஜெயம் ரவியை துரத்தும் சூர்யா… தொடரும் பிரச்சினை

ஜெயம் ரவியை துரத்தும் சூர்யா… தொடரும் பிரச்சினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan posterஒரு படம் தயாராவதை விட அதன் ரிலீஸ் தேதிகள் செய்யும் குளறுபடிகள்தான் அதிகமாகி வருகிறது.

சூர்யாவின் சிங்கம் 3 மற்றும் ஜெயம் ரவியின் போகன் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகவிருந்தன.

சி3 படத்திற்கு நிறைய தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால் போகன் பின் வாங்கியது.

அதன் பின்னர் ஜனவரி 12ல் பைரவா மற்றும் ஜனவரி 26ல் சி3 படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

எனவே நிதானமாக பிப்ரவரி 9ஆம் தேதி வருவான் போகன் என அறிவித்தனர்.

ஆனால் தற்போது சி3 படமும் போகன் ரிலீஸ் நாளிலேயே வெளியாகவுள்ளது.

இதனால் மீண்டும் போகன் தள்ளிப்போகுமா? இல்லை அதே நாளில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Jayam Ravis Bogan will be clash with Suriyas Si3 movie

பிப் 3 இல்லையாம்; மீண்டும் தள்ளிப்போனது சூர்யாவின் ‘சி3’ ரிலீஸ்

பிப் 3 இல்லையாம்; மீண்டும் தள்ளிப்போனது சூர்யாவின் ‘சி3’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaசென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது எத்தனையாவது முறை? என்பது போல ஆகிவிட்டது சி3 படம் ரிலீஸ் தேதி.

(இத்தனை முறை தள்ளிப்போகும் என்று தெரிந்தால் முன்பே எண்ண ஆரம்பித்து இருக்கலாம்… ஹிஹி…ஹி…)

சூர்யா நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதுவும் இல்லையாம்.

ரசிகர்களின் வேண்டுகோளுங்கிணங்க பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

இனிமேல் மாறினாலும் சொல்வதற்கில்லை.

Suriyas Si3 movie release date is here

அஜித் ரசிகர்களுக்காக ‘தல 57’ ஹம்மிங்கை பாடிய யோகி பி

அஜித் ரசிகர்களுக்காக ‘தல 57’ ஹம்மிங்கை பாடிய யோகி பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith anirudh Yogi Bசிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தல் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த ஹிப்ஹாப் பாடகர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் என்பவர் பாடியிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்பாடலின் ஹம்மிங்கை மட்டும் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடி காட்டியுள்ளார் இந்த பாடகர்.
இதனால் ரசிகர்கள் ஆரவாரமிட்டு கைத்தட்டியுள்ளனர்.

அஜித் ரசிகர்களைப் போல தானும் இப்பாடலை திரையில் காண காத்திருப்பதாக அப்போது கூறினார்.

Malaysia Singer Yogi B revealed Thala 57 movie song

விஜய்-முருகதாஸ்-லைக்கா கூட்டணியில் ‘கத்தி-2’

விஜய்-முருகதாஸ்-லைக்கா கூட்டணியில் ‘கத்தி-2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ar murugadossபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இதனையடுத்து ‘விஜய் 62’ படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டணி மாபெரும் வெற்றிப் பெற்ற கத்தி படத்தில் இணைந்திருந்தது.

மேலும் தற்போது சிரஞ்சீவி நடித்தள்ள கத்தி பட தெலுங்கு ரீமேக்கும் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது.

எனவே தயாராகவுள்ள புதுப்படம் கத்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Vijay to join with Kaththi team for its sequel

More Articles
Follows