தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனவும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் காலம் நேரம் குறைக்கப்பட்டே அனுமதி வழங்கப்பட்டது.
எனவே காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள்.
இதில் கலந்து கொள்ளும்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுத்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இவர்கள் தவிர விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளும் போராட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்காக தமிழ்திரை உலகம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கைகள் வருமாறு:-
* மத்திய அரசே தமிழர்களின் உரிமையை நிலைநாட்டு. நேர்மையான காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்து.
* மத்திய அரசே மக்களின் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடு.
மக்களுக்கான அரசு என்றால் மக்களின் உணர்வை மதியுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.