கமல்ஹாசன் 60 விழாவில் கலந்துக் கொள்ள அஜித் ஆர்வம்.?

கமல்ஹாசன் 60 விழாவில் கலந்துக் கொள்ள அஜித் ஆர்வம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Thala Ajith participate in Kamalhassan 60 eventவருகிற நவம்பர் 17ஆம் தேதி திரையுலகில் 60 ஆண்டுகளை கடந்துள்ள கமல்ஹாசளை கௌரவிக்கும் பொருட்டு கமல் 60 நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கமலை வாழ்த்த இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் கமலின் பாடல்கள் இசைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் ரஜினி உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

கமல் 60 அழைப்பிதழில் ரஜினி, இளையராஜா, விஜய், அஜித் படங்கள் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தான் நடித்த பட பிரமோசன்களில் கூட கலந்து கொள்ளாத நடிகர் அஜித் இந்த விழாவில் கலந்து கொள்வார் என தகவல்கள் வந்துள்ளன.

ம்ம்… இந்த தகவல் உண்மையாகுமா? என பார்ப்போம்.

Will Thala Ajith participate in Kamalhassan 60 event

அசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா

அசுரன் ரீமேக் ; வெங்கடேஷ் உடன் இணையும் ஸ்ரேயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shriya to star opposite Venkatesh in Asuran Telugu remakeகலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் அசுரன்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

முதன்முறையாக தனுஷ் படம் ரூ. 100 கோடி வசூலை அள்ளியது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் மஞ்சு வாரியார் நடித்த கேரக்டரில் நடிகை ஸ்ரேயாவை தேர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார் என்பதை நாம் முன்பே பார்த்துவிட்டோம்.

ஏற்கெனவே தெலுங்கு படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Shriya to star opposite Venkatesh in Asuran Telugu remake

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ டப்பிங் அப்டேட்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Darbar movie dubbing updatesமுருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் பட டப்பிங்கை பேசி முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

Super Star Rajinis Darbar movie dubbing updates

இயக்குனராகி நயன்தாராவுடன் இணையும் ஆர்ஜே. பாலாஜி

இயக்குனராகி நயன்தாராவுடன் இணையும் ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balaji and Nayanthara team up for Mookuthi Ammanவேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த ‛எல்.கே.ஜி’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்தார் ஆர்ஜே. பாலாஜி. இதற்காக இவர் இந்தியன் 2 பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருந்தார்.

தற்போது மீண்டும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.

இந்த படத்தை என்ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இதில் ஆர்.ஜே. பாலாஜியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

இந்த படத்திற்கு ‛மூக்குத்தி அம்மன்’ என தலைப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு 2020 கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.

ஏற்கெனவே நயன்தாரா நடித்த ‛நானும் ரவுடி தான்’, ‛வேலைக்காரன்’ படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RJ Balaji and Nayanthara team up for Mookuthi Amman

முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer J Sathish kumar acting movies news updates‘தரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார்.

தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

இயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள நல்ல வேடங்களை ஏற்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே.

Producer J Sathish kumar acting movies news updates

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arish kumar talks about Women struggles in societyவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது,

“பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன.

பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறோம் என்கிற பெயரில், கூடவே சேர்த்து டார்ச்சரையும் அல்லவா கொடுத்து வருகிறோம்..?

அதேபோல பெண்கள் முன்னேற்றம் பற்றி இதுவரை வந்த திரைப்படங்களில் அவர்கள் இப்படி கஷ்டப்பட்டார்கள், இப்படி போராடினார்கள்….வெற்றி பெற்றார்கள் என்றுதான் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதன்முதலாக நடைமுறையில் ஒரு பெண் தான் பணிபுரியும் துறையில் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதை இது மிக மிக அவசரம் திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார் அந்த பணியை மேற்கொள்கின்றனர்.

அவ்வளவு ஏன், காக்கி உடையில் இருக்கும் பெண்ணையும் கூட சிலர் ஆபாசமாக பார்க்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள் என இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எனக்கு ரொம்பவே பிடித்தது.

நாம் நடிக்கிற படம் ஓடுகிறதோ இல்லையோ ஓடுகிற படத்தில் நாம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய பாலிசி.. அந்த வகையில் இந்த மிக மிக அவசரம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

Arish kumar talks about Women struggles in society

More Articles
Follows