தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே விஜய்க்கான காட்சிகளை படமாக்க இருக்கிறாராம்.
அதன் பின்னர் விஜய் இல்லாத காட்சிகளை படமாக்க இருக்கிறாராம் இயக்குநர்.
இந்த நிலையில் ‘லியோ’ படம் குறித்து லோகேஷ் தன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளதாவது…
“இந்த LCU யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி. ஆனால் அது எளிதான காரியமில்லை. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.
ஆனால் எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன்.
எல்சியு-வில் ‘லியோ’ வருமா என்பதை அறிய 3 மாதங்கள் காத்திருங்கள்
‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. சூட்டிங் முடிந்தவுடன் விஜய்யை மிஸ் செய்வது கஷ்டம்.” என்றார்.
Will Leo movie be in LCU Lokesh open talk









