கமல் செண்டிமெண்டில் பிரபு சாலமன்.; காத்திருப்புக்கு ஓகே சொல்லுவாரா.?!

கமல் செண்டிமெண்டில் பிரபு சாலமன்.; காத்திருப்புக்கு ஓகே சொல்லுவாரா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான படைப்புகளை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் பிரபு சாலமன்.

இவர் இயக்கிய கொக்கி மைனா கும்கி கயல் உள்ளிட்ட பல படங்களும் நல்லதொரு விமர்சனத்தை பெற்று தந்தது.

கரண் நடித்த ‘கொக்கி’ படத்தை இயக்கிய போது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் வந்திருந்தார்.

அதுபோல மைனா கும்கி பட விழாக்களுக்கும் கமல் வருகை தந்திருந்தார்.

இது குறித்து அவரது அண்மை பேட்டியில் பிரபு சாலமன் தெரிவித்துள்ளதாவது…

“நான் கமல் சாரின் தீவிர ரசிகன். மைனா படத்திற்கு பிறகு எங்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

‘மைனா’ படத்தை பார்த்துவிட்டு என்னிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

அன்று இரவு நான் நிம்மதியாக உறங்கினேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

நான் அவருக்கு ஒரு கதை ரெடி செய்து தெரிவித்தேன். சில பல காரணங்களால் அது நடைபெறவில்லை. விரைவில் நான் கமலை இயக்குவேன்” என தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் ‘மாமன்னன்’ பட முதல் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

உதயநிதியின் ‘மாமன்னன்’ பட முதல் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பல பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் உதயநிதியின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவர்கள் இணைந்து பணியாற்றும் ‘மாமன்னன்’ படத்தின் புதிய காட்சி டீசரைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=924Pd7lha04

AR Rahman released the first video of Udayanidhi’s ‘Mamannan’

ஷங்கரின் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில்..!

ஷங்கரின் ‘RC15’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நியூசிலாந்தில்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் வைத்து ‘இந்தியன் 2’ படத்தை தயாரித்து வருகிறார்.

அதே நேரத்தில், ராம் சரண் வைத்து ‘RC15’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

ஷங்கர் தற்போது ‘RC15’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி,அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படக்குழு தற்போது நியூசிலாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் போஸ்கோ மார்டிஸ் நேற்று தனது பிறந்தநாளை நியூசிலாந்தில் படத்தின் செட்டில் கொண்டாடினார்.

மேலும், இப்படத்தை டிசம்பர் இறுதியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.

RC15

Shankar’s ‘RC15’ is currently being shot in New Zealand

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ரன் டைம் மற்றும் தியேட்டர் ரிலீஸ் அப்டேட்ஸ்

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் ரன் டைம் மற்றும் தியேட்டர் ரிலீஸ் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவதார் : தி வே ஆஃப் வாட்டர் இந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது .

3D மற்றும் IMAX 3D வடிவங்களில் வெளியிடப்படும் இப்படம் சுமார் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடக்கூடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு, கேரளாவில் உள்ள திரையரங்குகளில் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுவதாகவும் வழக்கமான 3டி 12 மணிக்குத் தொடங்கும் என்றும், ஐமேக்ஸ் 3டி அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிக்கும் பான் – இந்தியா படத்தின் பூஜை தொடங்கியது !

தனுஷ் நடிக்கும் பான் – இந்தியா படத்தின் பூஜை தொடங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் தனுஷின் பான்-இந்தியா படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

சேகர் கம்முலா இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா மும்மொழி திரைப்படம் இன்று பூஜையுடன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பாளர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

மேலும் படம் 2023 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்படுவதாக சொல்லப்படுகிறது.

‘துணிவு’ பட அப்டேட் கொடுக்கும் பிரபலங்கள்.; இனி மேனேஜர் என்ன செய்வார்.?

‘துணிவு’ பட அப்டேட் கொடுக்கும் பிரபலங்கள்.; இனி மேனேஜர் என்ன செய்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

சமீபத்தில் அனிருத் பாடிய ‘சில்லா.. சில்லா..’ என்ற பாடலின் அப்டேட் கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இந்தப் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

அதன் பின்னர் நடன இயக்குனர் கல்யாண் இந்த பாடல் அப்டேட் கொடுத்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் தான் ஒரு பாடலை பாடியுள்ளதாக இப்படத்தின் நாயகி மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “துணிவு படத்தின் பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் அதை கேட்க காத்திருக்கிறோம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மஞ்சு.

அஜித் படங்களுக்கு பெரும்பாலும் பிரஸ் மீட்.. இசை வெளியீட்டு விழா என எதுவும் நடைபெறாது.

அவர் மேனேஜர்தான் (PRO) படங்களின் அப்டேட் கொடுப்பார்.

ஆனால் தற்போது இந்த படத்தின் நடிகர்களே அப்டேட் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thunivu team cast and crew gives updates.. what PRO will do

More Articles
Follows